ஆர்.கே.நகர் தொகுதி தேர்தலில் வெற்றியே எதிர்த்து தொடர்ந்த தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என டிடிவி தினகரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மரணம் அடைந்ததை அடுத்து அவர் வெற்றி பெற்ற சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடை தேர்தல் அறிவிக்கபட்டது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்ட டிடிவி தினகரன் வெற்றி பெற்றார்.
இந்நிலையில் தேர்தலில் தோல்வியடைந்த தேசிய மக்கள் கட்சியை சேர்ந்த என்.எல்.ரவி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த தேர்தல் வழக்கில், கடந்த ஆண்டு டிசம்பர் 21 ஆம் தேதி நடைபெற்ற சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டேன். இந்த தேர்தலில் சுயேட்சை உறுப்பினராக குட்கர் சின்னத்தில் போட்டியிட்ட டி.டி.வி.தினகரன் வெற்றி பெற்றார். இடை தேர்தலில் நூதன முறையில் வாக்காளர்களுக்கு பணம் பட்டு வாடா நடைபெற்றது. தேர்தல் நேரத்தில் ஜெயலலிதாவின் மருத்துவ சிகிச்சை தொடர்பான வீடியோ டிடிவி தினகரன் தரப்பினரால் வெளியிடப்பட்டது. இவ்வாறு தேர்தல் விதிமுறைகளை மீறி முறைகேடாக டி.டி.வி. தினகரன் ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருள்கள் அளித்து. அனைத்து தேர்தல் விதிமுறை மீறல் செய்து அவர் வெற்றி பெற்றுள்ளார். எனவே அவர் வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும் தேர்தல் வெற்றியை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கோரிக்கையிருந்தார்.
இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் முன்பு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் டிடிவி தினகரன் சார்பில் தனது வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என கோரி மனு ஒன்று தாக்கல் செய்யபட்டது. அதில் இடைத் தேர்தலில் 89 ஆயிரம் ஓட்டுக்களுக்கு மேல் பெற்று தான் வெற்றி பெற்றுள்ளேன். ஆனால் வழக்கு தொடர்ந்த ரவி 246 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்துள்ளார். மனுதரார் தனக்கு எதிரான கூறி குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறு எந்த விதமான ஆதாரங்களும் இல்லாமல் இந்த வழக்கை தெடர்ந்துள்ளார். எனக்கு எதிராக கூறிய அனைத்து குற்றச்சாட்டுகளும்பொய்யான குற்றச்சாட்டுகள் எனவே ஆர்.கே.நகர் தொகுதி தேர்தலில் நான் பெற்ற வெற்றியை எதிர்த்து எனக்கு எதிராக தொடர்ந்த தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என மனுவில் கூறியுள்ளார்.
இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதி சி.வி கார்த்திகேயன், டிடிவி தினகரன் தொடர்ந்த மனுவிற்கு
தேர்தல் வழக்கு தொடர்ந்த என்.எல்.ரவி ஜூன் 5 ஆம் தேதிக்கு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணை அன்றைய தேதிக்கு தள்ளிவைத்தார்.