வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து அ.ம.மு.க போட்டியிடும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படும் நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. கூட்டணி, தொகுதி பங்கீடு உள்ளவற்றில் மும்முரமாக செயல்பட்டு வருகின்றன. தி.மு.க 2019 தேர்தல் கூட்டணியை இறுதி செய்துள்ளது. அ.தி.மு.க கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. பா.ஜ.க கூட்டணியில் தா.ம.க, ஐ.ஜே.கே உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இந்தநிலையில், திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த டி.டி.வி. தினகரன், ”நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து அ.ம.மு.க. போட்டியிடும். நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு அ.ம.மு.க. நிபந்தனையற்ற ஆதரவளிக்கும். அ.ம.மு.க.வின் கோரிக்கைகளை எழுத்துபூர்வமாக பா.ஜ.க.விடம் கொடுத்து விட்டோம். தாமரை சின்னத்தில் அ.ம.மு.க.வை நிற்கச் சொல்லவில்லை. யாரும் எங்களை நிர்பந்தம் செய்யவில்லை,” என்று தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“