/indian-express-tamil/media/media_files/2025/09/15/ttv-dhinakaran-4-2025-09-15-23-28-41.png)
டி.டி.வி.தினகரன் கூறுகையில், “முதலமைச்சர் வேட்பாளர் குறித்த கருத்து வேறுபாடு காரணமாக அ.தி.மு.க.வுடன் தங்கள் கட்சி ஒருபோதும் கைகோர்க்காது” என்றார்.
அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் வேட்பாளராக இருக்கும் வரை, அ.ம.மு.க, அ.தி.மு.க.வுடன் கூட்டணியில் சேர வாய்ப்பே இல்லை என அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் திங்கள்கிழமை தெரிவித்தார்.
தாய் திருநாட்டிற்குத் தமிழ்நாடு எனப் பெயர் சூட்டிய தமிழ்த்தாயின் தலைமகன், தமிழ் வளர்ச்சி, சமூக நலன், சமுதாய முன்னேற்றம் ஆகியவற்றையே அடிப்படையாகக் கொண்டு ஒட்டுமொத்த தமிழினத்தின் முகவரியாகத் திகழ்ந்த பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் பிறந்த தினமான இன்று தஞ்சை பழைய பேருந்து நிலையம்… pic.twitter.com/oFkxh0HX87
— TTV Dhinakaran (@TTVDhinakaran) September 15, 2025
தஞ்சாவூரில் முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன், பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, டி.டி.வி.தினகரன் கூறுகையில், “முதலமைச்சர் வேட்பாளர் குறித்த கருத்து வேறுபாடு காரணமாக அ.தி.மு.க.வுடன் தங்கள் கட்சி ஒருபோதும் கைகோர்க்காது” என்றார்.
அதே நேரத்தில், 2026 தேர்தலுக்குப் பிறகு ஆட்சி அமைக்கும் ஒரு வெற்றிக் கூட்டணியில் அ.ம.மு.க. நிச்சயம் இடம் பெறும் என டி.டி.வி.தினகரன் நம்பிக்கை தெரிவித்தார்.
“அ.ம.மு.க. இடம்பெறும் கூட்டணி நிச்சயம் ஒரு வெற்றிக் கூட்டணியாக இருக்கும்” என்று கூறிய டி.டி.வி.தினகரன் “இந்தக் கருத்தை தான் பலமுறை தெளிவுபடுத்திவிட்டேன்” என்று கூறினார்.
பா.ஜ.க. மாநிலத் தலைவர், தங்கள் கட்சியின் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளதாகக் கூறியது குறித்த கேள்விக்கு பதிலளித்த டி.டி.வி.தினகரன், கட்சிகள் அவ்வாறு கூறுவது இயல்பு தான் என்று கூறினார். மேலும், வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது குறித்த கேள்விக்கு கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.
தொடர்ந்து பேசிய டி.டி.வி. தினகரன், “75 ஆண்டு காலம், 50 ஆண்டு காலம் வளர்ந்த கட்சிகளின் கட்டமைப்புக்கு ஈடாக அ.ம.மு.க உருவாகிவிட்டது. அ.ம.மு.க வெற்றி முத்திரை பதிக்கும். முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி இருக்கும்வரை, அ.ம.மு.க அதை ஏற்க வாய்ப்பே இல்லை. எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்வது, அவருடைய விவகாரம்” என்றார்.
இதைத் தொடர்ந்து, தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில், அ.ம.மு.க நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் டி.டி.வி. தினகரன் தலைமையில் நடைபெற்றது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.