Advertisment

பகவத்கீதையை பாடத்திட்டமாக கொண்டுவந்தது தவறு இல்லை - டி.டி.வி.தினகரன்

TTV Dinakaran nothing wrong in Bhagavad Gita become syllabus: அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு பகவத் கீதையை பாடத்திட்டமாகக் கொண்டுவந்ததில் தவறு ஏதும் இல்லை என்று அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
TTV Dinakaran as General Secretary of AMMK, Amma Makkal Munnertra Kazhagam,TTV Dinakaran, Sacred book Bhagavad Gita, Bhagavad Gita syllabus in Anna University, டிடிவி தினகரன், அண்ணா பல்கலைக்கழகம், பகவத் கீதை பாடம், polical parties oppsed to syllabus of Bhavad Gita, TTV Dinakaran says There is nothing wrong become Bhagavad Gita into syllabus

அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுமம் (All India Council for Technical Education (AICTE)) அறிவுறுத்தலின்படி, அண்ணா பல்கலைக்கழகம் எம்.இ., எம்.டெக் உள்ளிட்ட அனைத்து முதுநிலை பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கும் 2019 ஆம் ஆண்டில் புதிய பாடத்திட்டத்தை அறிமுகம் செய்தது. இதில் இரண்டாம் ஆண்டு படிப்பில் மூன்றாவது செமஸ்டரில் தத்துவப் பாடத்தில் கட்டாயப் பாடமாக இந்து மதத்தின் உபநிஷதங்கள் மற்றும் பகவத் கீதை ஆகிய பாடப்பிரிவுகள் இடம்பெற்றன. இதற்கு அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்களும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மத்திய அரசு இந்து மத கருத்துகளை பாடத்திட்டம் மூலம் திணிக்க முயற்சிப்பதாக குற்றம் சாட்டினர்.

இதனைத் தொடர்ந்து, பொறியியல் படிப்பில் பகவத் கீதையை கட்டாயப் பாடப் பிரிவில் இருந்து நீக்க வேண்டும் என அண்ணா பல்கலைக்கழகத்துக்கு தமிழக உயர்க்கல்வித்துறை அறிவுறுத்தியது.

இதையடுத்து, அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா பகவத் கீதையை கட்டாயப் பாடப்பிரிவில் இருந்து விருப்பப் பாடப் பிரிவுக்கு மாற்றுவதாகவும் அறிவித்தார். மேலும், அவர் “அறிவியல் மற்றும் மானுடவியலுக்கு இடையேயான வெற்றிடத்தை பூர்த்தி செய்யவே இப்பாடத்திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. 32 பாடத்திட்டங்கள் பல்கலைக்கழக குழுவால் பரிந்துரை செய்யப்பட்டது. அதில் 12 பாடங்களை தேர்வு செய்துள்ளோம். பல்கலைக்கழக அமைப்பு என்றுமே மதசார்பற்றதாகவே இருக்கும். இங்கு இந்த பாடத்தினை கட்டாயமாக கற்றே தீர வேண்டும் என்ற நிபந்தனை இல்லை” என்று தெளிவுபடுத்தினார்.

இந்நிலையில், அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “பகவத்கீதையை பாடத்திட்டமாக கொண்டு வந்ததில் தவறு ஏதும் இல்லை. பகவத் கீதையை அனைத்து மதத்தினரும் மதிக்கின்றனர். அதனால், பகவத் கீதையை

பாடத்திட்டமாக்கப்பட்டதை சர்ச்சையாக்க வேண்டாம்.” என்று கூறினார்.

அண்ணா பல்கலைக்கழகத்தி பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு பகவத் கீதை பாடமாக்கப்பட்ட விவகாரம் சர்ச்சையாகி சிறிது ஓய்ந்த நிலையில் டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ள இந்த கருத்து இந்த விவகாரத்தில் மேலும் சூட்டைக் கிளப்பியுள்ளது.

Anna University Ttv Dhinakaran Bhagavad Gita
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment