அதிமுக அணிகள் இணையுமா என்ற கேள்விக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பதில் அளித்தார்.
பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவரின் 115ஆவது ஜெயந்தி மற்றும் நினைவு தினத்தை முன்னிட்டு, பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் செய்தியாளர்கள் அதிமுக அணிகள் ஒன்றிணையுமா என்ற கேள்வியை முன்வைத்தனர்.
இதற்குப் பதிலளித்த டிடிவி தினகரன், “அதாவது., இன்னொரு கட்சியை பற்றி நான் பேச வேண்டிய தேவை இல்லை. இருந்தாலும் நீங்கள் கேட்பதால் சொல்கிறேன்.
ஏற்கனவே அவர்கள் இருவரும் 2017இல் யாரால் ஒன்று சேர்த்து வைக்கப்பட்டார்களோ? அவர்கள் மனது வைத்தால் மீண்டும் அவர்கள் இணைய வாய்ப்புள்ளது என்பதே இன்றைய நிலைமை” என்றார்.
தொடர்ந்து அதிமுகவை ஒற்றுமையாக எப்போது பார்க்கலாம் என செய்தியாளர் ஒருவர் கேள்வியெழுப்பினார். அதற்கு, “நான் அமமுக. அதைத் தான் முதலிலே சொன்னேன். 2017இல் அண்ணன் ஓ.பன்னீர் செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் யாரால் இணைத்து வைக்கப்பட்டார்களோ அவர்களால்தான் முடியும்” என்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil