பூகம்பத்தினால் பாதிக்கப்பட்ட துருக்கி நாட்டிற்கு யுனைடெட் ஹோல்டிங்ஸ் நிறுவனம் சார்பில் அத்தியாவசிய பொருட்கள் அனுப்பும் நிகழ்வு முதல்வர் ரங்கசாமி முன்னிலையில் நடைபெற்றது.
சமீபத்தில் துருக்கியில் ஏற்பட்ட பூகபம்பத்தினால் பல உயிர்களும், வீடுகளும் இழந்து மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். இந்நிகழ்வை கண்டு பல நாடுகளில் இருந்து பல உதவிகள் அனுப்பப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் சிங்கப்பூரை தலைமை இடமாக கொண்டு செயல்படும் யுனைடெட் ஹோல்டிங்ஸ் தனியார் நிறுவனம் சார்பில், துருக்கி நாட்டிற்கு அத்தியாவசிய பொருட்கள் அனுப்பும் நிகழ்வு புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் நடைபெற்றது.

புதுச்சேரி நிர்வாக மேலாளர் முஜாகிருல்லா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினர்களாக முதலமைச்சர் ரங்கசாமி, சட்டப்பேரவை தலைவர் செல்வம் ஆகியோர் கலந்துகொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.இதில் யுனைடெட் ஹோல்டிங்ஸ் நிர்வாகிகள், ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தி: பாபு ராஜேந்திரன்