“கட்சி வளரவில்லை, கட்டடங்கள் வளருது”, “ஓட்டைக் கப்பலில் தத்தளிக்கும் மாலுமி நீங்கள்” – வலுக்கும் வார்த்தைப் போர்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப. சிதம்பரம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றை வெளியிட்டிருந்தார்.

Tamil Nadu, P chidambaram, annamalai, BJP, Congress

P Chidambaram and Annamalai : 24ம் தேதி அன்று, பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, தமிழகத்தில் திருப்பூர், நெல்லை, திருப்பத்தூர் மற்றும் ஈரோடு ஆகிய பகுதிகளில் மாவட்ட கட்சிக் கட்டடத்தை துவங்கி வைத்தார். இந்த நிகழ்வில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாஜக மஹிலா மோர்ச்சா தலைவி வானதி ஸ்ரீனிவாசன் ஆகியோர் உடன் இருந்தனர்.

இந்த நான்கு மாவட்ட கட்சி அலுவலகங்கள் திறப்பது குறித்து முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப. சிதம்பரம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் “ கட்சிகள் எழும்புகிறதோ இல்லையோ, கட்டிடங்கள் எழும்புகின்றன. நான்கு நகரங்களில் மாவட்டக் கட்சியின் புதிய, பெருமதிப்புள்ள அலுவலகக் கட்டிடங்களை ஒரே நாளில் திறக்கும் கட்சிக்குப் பாராட்டுக்கள்” என்று ப. சிதம்பரம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.

காங்கிரஸ் இப்படி இருந்தால் பாஜகவுடன் போட்டியிட முடியாது; டி.எம்.சிக்கு கட்சி தாவிய எம்.எல்.ஏக்கள்

இது கொஞ்சம் காரசாரமான விவாதத்தை கிளப்பியுள்ளது. இந்த ட்வீட்டிற்கு பதில் சொல்லும் வகையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதில் ட்வீட் செய்துள்ளார். அதில் “ஆயிரம் ஓட்டைகள் இருக்கக் கூடிய கப்பல் உங்கள் கட்சி. அதில் தத்தளித்து இலக்கு தெரியாமல் பயணிக்கும் மாலுமி நீங்கள். உங்களுடைய நகைச்சுவையை தாண்டி நாங்கள் வளர்ந்து கொண்டிருக்கின்றோம்” என்று பதில் கூறியுள்ளார்.

பாஜகவின் செய்தித் தொடர்பாளார் நாராயணன் திருப்பதி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில்., “ஊழல்கள் பல செய்து கட்டிடங்களை எழுப்பியதால்,சிறையில் இருக்க வேண்டியவர்கள் பிணையில் இருந்து, கட்சியை காலி செய்து, தொண்டர்களை நடுத்தெருவில் நிறுத்திய காங்கிரஸ் தலைவர்கள்,தொண்டர்களுக்காக பெருமதிப்புள்ள கட்டிடங்களை அர்ப்பணிக்கும் தலைவர்கள் உள்ள கட்சியை விமர்சனம் செய்வதில் வியப்பில்லை” என்று ட்வீட் செய்துள்ளார்.

தற்போது, பாஜக கட்சிக் கட்டடங்கள் திறந்தது குறித்து முன்னாள் அமைச்சரின் கருத்துகளுக்கு பல்வேறு பாஜகவினர் தங்களின் கருத்துகளை பதிவு செய்ததோடு எதிர்வினையாற்றியும் உள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tussel between p chidambaram and annamalai over 4 bjp district offices

Next Story
டிஎன்பிஎஸ்சி புதிய உறுப்பினர்கள் நியமனத்தை ரத்து செய்க: ராமதாஸ்ramadoss
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com