தமிழிசை சௌந்தரராஜன் மீது வழக்கு பதிவு : தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் மீது வழக்கு பதிவு செய்ய தூத்துக்குடி நீதிமன்றம் உத்தரவு. செப்டம்பர் மாதம் 3ம் தேதி நெல்லை மாவட்டத்தில் நடைபெற இருந்த கட்சி நிகழ்ச்சி ஒன்றிற்காக சென்னையில் இருந்து தூத்துக்குடி புறப்பட்டுச் சென்றார் தமிழிசை சௌந்தரராஜன்.
அவர் பயணம் செய்த அதே விமானத்தில் கனடாவில் ஆராய்ச்சி படிப்பு படித்து வரும் சோபியா என்ற மாணவியும் பயணம் செய்து வந்தார். தமிழிசை சௌந்தரராஜனை பார்த்தவுடன் பாசிச பாஜக ஒழிக என்று கோஷமிடத் தொடங்கினார். இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி விமான நிலையத்தில் சர்ச்சை நிலவியது. இது பற்றிய முழுமையான செய்தியைப் படிக்க
தமிழிசை சௌந்தரராஜன் மீது வழக்கு பதிவு :
தமிழிசையின் புகாரால் சோபியா மீது மூன்று பிரிவுகளில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து சோபியாவை கைது செய்தனர். பின்னர், ஜாமினில் அவர் விடுவிக்கப்பட்டார். சோபியா தரப்பில் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் பாஜகவினர் மீது “பெண்கள் வதை தடுப்புச்சட்டத்தின்” கீழ் சோபியாவின் தந்தை வழக்கு பதிவு செய்தார்.
இந்த மனு மீதான விசாரணையை மேற்கொண்டது தூத்துக்குடி நீதிமன்றம். இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி தமிழிசை மீது ஐபிசி 431, 294 (b), 506 ( 1 ) மற்றும் பிரிவு 4 தமிழ்நாடு பெண்கள் வதை தடுப்புச் சட்டம் ஆகிய 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, அதன் அறிக்கையை அடுத்த மாதம் 20-ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.