தூத்துக்குடி தொகுதி திமுக எம்எல்ஏ கீதா ஜீவனுக்கு கொரோனா தொற்று உறுதி
தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி உறுப்பினரும் திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சருமான கீதா ஜீவனுக்கு இன்று கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி உறுப்பினரும் திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சருமான கீதா ஜீவனுக்கு இன்று கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது.
Advertisment
தூத்துக்குடி தொகுதி எம்.எல்.ஏ கீதாஜீவன் தூத்துக்குடி போல்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் வசித்து வருகிறார். அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று அறிகுறி இருந்ததால் அவர் தன்னை கொரோனா வைரஸ் பரிசோதனைக்கு உட்படுத்திக்கொண்டார் பரிசோதனையில், இன்று அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், எம்.எல்.ஏ கீதா ஜீவனின் மகளுக்கும் அவரது மருமகனுக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், கீதா ஜிவன், அவரது மகள் மற்றும் மருமகன் 3 பேரும் அவருடைய வீட்டில் தனிமைப் படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கீதா ஜீவனுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களின் மொத்த எண்ணிக்கை 19பேர்களாக உயர்ந்துள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"