முதல்வர் மு.க.ஸ்டாலினின் சகோதரியும், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகளுமான கனிமொழி போட்டியிடுவதால் தூத்துக்குடி மக்களவைத் தொகுதி நட்சத்திர அந்தஸ்து பெற்றுள்ளது.
கடந்த மக்களவைத் தேர்தலில் இந்தத் தொகுதியில் திமுக சார்பாக கனிமொழி போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது அவரே அந்தத் தொகுதியில் களம் காணுகிறார்.
அதிமுக சார்பில் சிவசாமி வேலுமணி, பாஜக கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக விஜயசீலன் மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பாக ரொவினா ரூத் ஜென் ஆகியோர் களத்தில் உள்ளனர்.
இந்நிலையில் தூத்துக்குடி தொகுதியில் மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி, தூத்துக்குடி வஉசி பொறியியல் கல்லூரியில், இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.
முதலில் தபால் வாக்குகளை எண்ணப்பட்ட நிலையில் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நடந்து வருகிறது.
தற்போது நிலவரப்படி தூத்துக்குடியில் கனிமொழி முன்னிலை பெற்றுள்ளார்.
கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் அப்போதைய பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், அதிமுக - பாஜக கூட்டணி சார்பில், கனிமொழியை எதிர்த்து போட்டியிட்டார். இதில் 3,47,209 வாக்குகள் வித்தியாசத்தில் கனிமொழி வெற்றிபெற்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“