தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு : பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் பலி எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. 12 பேர் பலியான நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி ஒருவர் மரணம்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடியவர்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தி வருகிறது. இதில் நேற்று முன்தினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் திரேஸ்புரா பகுதியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 11 பேர் பலியாகினார்கள்.

அதனைத் தொடர்ந்து நேற்று மீண்டும் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. அதில் காளியப்பன் என்ற 22 வயது இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் செல்வசேகர் என்பவர் உடலில் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தூத்துக்குடி சாயர்புரம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வசேகர். நேற்று நடந்த தடியடியில் மிகுந்த காயமடைந்த இவரை போலிசார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மிகவும் கவலைக்கிடமான நிலையில் அனுமதிக்கப்பட்ட இவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும், சிகிச்சை பலனின்றி இந்து காலை செல்வசேகர் மரணமடைந்தார்.

செல்வசேகரின் மரணத்தைத் தொடர்ந்து தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலி எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.

×Close
×Close