sterlite firing first year anniversary : தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது, துப்பாக்கிச் சூட்டில் பலியானோருக்கு, இன்று முதலாவது ஆண்டு நினைவு அஞ்சலி அனுசரிக்கப்படுகிறது.இதன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பாளர் சுப. உதயகுமார் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த ஆண்டு நடந்த போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டதை அடுத்து போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர்.இது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு முதலானம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி பலர் பல்வேறு இடங்களில் நினைவஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி, நெல்லை மற்றும் கன்னியாக்குமரியில் முதலானம் ஆண்டு நினைவு தின நிகழ்ச்சிகள் பெரியளவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து ஆங்காங்கே போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இன்றைய நினைவு தினத்தில் அசம்பாவிதம் ஏற்படுவதை தடுக்கும் வகையில் ஒருசிலரை போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் பேரில் கைது செய்து வருகின்றனர்.
தூத்துக்குடியில் உள்ள கோயிகள் மற்றும் தேவாலயங்களிலும் பலியானவர்களுக்கு பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தூத்துக்குடி முழுவதும் அஞ்சலி செலுத்த திட்டமிடப்பட்டிருந்தது. இதுக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. இந்நிலையில், நிகழ்ச்சியில் பங்கேற்க புறப்பட்ட கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பாளர் சுப. உதயகுமார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாகர்கோவிலில் கைது செய்யப்பட்டுள்ளார்
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு சுப. உதயகுமார் இன்று அஞ்சலி செலுத்த திட்டமிட்டிருந்ததாகவும் இதனையடுத்தே அவரை போலீசார் கைது செய்ததாகவும் கூறப்படுகிறது.