தூத்துக்குடியில் கடன் பிரச்னையில் 2 தலித்துகள் கொலை; 3 பேர் கைது
தூத்துக்குடியில் ரூ.40,000 கடனுக்காக வழங்கப்பட்ட சொத்து பத்திரத்தை திருப்பி தருவதில் ஏற்பட்ட பிரச்னையில், தலித் சமூகத்தைச் சேர்ந்த மாமனார், மருமகன் 2 பேர்களை பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கொலை செய்த சம்பவம் தூத்துக்குடி நசரேத் பகுதியில் பதற்றத்த ஏற்படுத்தியுள்ளது.

Advertisment
தூத்துக்குடி உடையார்குள்ம் காந்திநகரைச் சேர்ந்தவர் பலவேசம். அவருடைய மருமகன் ஆறுமுகனேரி மூலக்கரையைச் சேர்ந்த தங்கராஜ் (27).
Advertisment
Advertisements
தலித் சமூகத்தைச் சேர்ந்த பலவேசம் வட்டிக்கு கடன் வழங்கும் பிறபடுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த முத்துராஜ் (40) என்பவரிடம் ரூ.40,000 கடன் வாங்கியுள்ளார். கடனுக்கு பிணையாக அவருடைய நிலத்தின் பத்திரத்தை கொடுத்துள்ளார். பின்னர், பலவேசம் வாங்கிய கடனை ஒப்புக்கொண்ட வட்டியுடன் திருப்பி செலுத்தியதாக கூறப்படுகிறது. அதோடு, பலவேசம் கடனுக்கு பிணையாக வழங்கப்பட்ட சொத்து பத்திரத்தை திரும்ப அளிக்குமாறு முத்துராஜிடம் கேட்டுள்ளார். ஆனால், முத்துராஜ் பத்திரத்தை தர மறுத்துள்ளார்.
இதையடுத்து பலவேசம், இந்த விஷயத்தை முத்துராஜின் சகோதரர் சண்முகசுந்தரத்திடம் சென்று கூறியுள்ளார். அதற்கு சண்முகசுந்தரம் பலவேசத்தை சாதி ரீதியாக பேசி திட்டியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, பலவேசம் அளித்த புகாரின் பேரில், தூத்துக்குடி நசரேத் போலீஸார் சண்முகசுந்தரம் மீது, எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்பட 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
இதனால், ஆத்திரம் அடைந்த சண்முகசுந்தரத்தின் தம்பி முத்துராஜ் மற்றும் அவரது உறவினர்கள் உடன் வெள்ளிக்கிழமை இரவு உடையார்குளத்தில் உள்ள பலவேசம் வீட்டுக்குள் புகுந்து பலவேசம் மற்றும் அவருடைய மருமகன் தங்கராஜ் இருவரையும் கத்தியால் குத்தி கொலை செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்து முதற்கட்ட விசாரணை நடத்தினார். சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, முத்துராஜ், அவரது சகோதரர்கள் பாரதி (45), செல்லத்துரை (47) ஆகியோரை நாசரேத் போலீசார் கைது செய்தனர். மேலும், இந்த கொலையில் தொடர்புள்ள 3 நபர்களைத் போலீசார் தேடி வருகின்றனர். இதனால், நசரேத் பகுதியில் பதற்றம் நிலவியதால், எந்தவிதமான அசம்பாவிதங்களும் ஏற்படாமல் இருக்க 150 க்கும் மேற்பட்ட போலீசார் அப்பகுதியில் பாதுகாப்புக்காக அனுப்பப்பட்டனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"