தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் கடந்த பிப்ரவரி மாதம் 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். அப்போது தான் நடிப்பில் இருந்து விலக உள்ளதாகவும், கைவசம் உள்ள படங்களை முடித்துவிட்டு முழு நேர அரசியலில் ஈடுபாட உள்ளதாகவும் அறிவித்தார்.
விஜய் வெளியிட்ட இந்த அறிவிப்பு சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும் விஜய் ரசிகர்கள் தங்கள் தலைவர் அரசியலில் ஈடுபாட உள்ளதால் மகிழ்ச்சியடைந்தனர். இதனிடையே அரசியல் கட்சி தொடங்கிய விஜய் அடுத்த சில மாதங்களில் தனது கட்சியின் கொடியை அறிமுகம் செய்து வைத்தார்.
இந்த கொடியில் யானை சின்னம் பயன்படுத்தியது குறித்து பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
இது ஒரு பக்கம் இருக்க அரசியலில் தனது அடுத்த அடியாக கட்சியின் முதல் மாநாடு குறித்த அறிவிப்பை வெளியிட்டார் விஜய். விக்கிரவாண்டி அருகே வி.சாலை கிராமத்தில் மாநாடு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு காவல்துறை அனுமதி கேட்டு விண்ணப்பிக்கும் பட்டது.
இந்த மாநாட்டுக்காக அனுமதி அளிப்பது குறித்து காவல்துறையினர் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்க தாமதம் மற்றும் பல்வேறு காரணங்களால் செப்டம்பர் மாதம் நடைபெற இருந்த மாநாடு தள்ளி வைக்கப்பட்டது.
இதனையடுத்து தீபாவளிக்கு முன்னதாக அக்டோபர் 27ஆம் தேதி மாநாடு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கப்பட்டது. மாநாடு பூமி பூஜைக்கு விஜய் வராத நிலையில், கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த தலைமையில் பூஜை நடைபெற்றது.
இதனையடுத்து தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டி அருகே வி.சாலை கிராமத்தில் இன்று நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் சினிமா நட்சத்திரங்கள் அரசியல் தலைவர்கள் யார் பங்கேற்பாளர்கள் என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்த மாநாடு மேடையில் ஒரே நேரத்தில் இரண்டு தலைவர்கள் உருவாகின்றனர். தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தமிழ்நாடு தலைவர் விஜய் மற்றும் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த். கட்சியின் தலைவர் விஜய் தான் என்றாலும் புதுச்சேரியில் முதல்வர் வேட்பாளராக புஸ்ஸி ஆனந்த் களமிறங்க வாய்ப்பு உள்ளது.
இதன்மூலம் கட்சியின் தலைவர் மற்றும் பொதுச்செயலாளர் இருவரும் தலைவர்களாக உருவாகும் மேடையாக த.வெ.க மாநாடு அமைந்துள்ளது.
செய்தி, புகைப்படம்: இளையராஜா
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“