Advertisment

ஒப்புதல் கொடுத்த விஜய்: ஜனவரியில் வெளியாகும் மா.செ லிஸ்ட்

த.வெ.க மாவட்டச் செயலாளர்கள் பட்டியல் ஜனவரி முதல் வாரத்தில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamilaga Vettri Kazhagam chief Vijay condoles those who died in an accident while going to the TVK conference Tamil News

த.வெ.க மாவட்டச் செயலாளர்கள் பட்டியல் குறித்த தகவல்

நடிகர் விஜய் தலைமையில், தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய அரசியல் கட்சி துவங்கப்பட்டு, கடந்த மாதம் முதல் மாநில மாநாடும் நடத்தி முடிக்கப்பட்டது. இன்னும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் முழுமையாக நியமிக்கப்படவில்லை என்பதால், அடுத்த மாதத்திற்குள், மாவட்ட செயலர்களை நியமிக்க அக்கட்சியின் தலைவர் விஜய் ஒப்புதல் அளித்துள்ளார்.

Advertisment

 ஜனவரி முதல் வாரத்தில் தமிழக வெற்றிக் கழக மாவட்ட செயலாளர்கள் பட்டியல் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.

ஒன்றிய, பகுதி,பேரூர், கிளை கழக நிர்வாகிகள், அணி தலைவர்களிடம் கருத்து கேட்டு செயலாளர்களை தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

தமிழக வெற்றி கழகத்தில் மொத்தம் 100 மாவட்டங்களாக பிரித்து மாவட்டச் செயலாளர்களை நியமிக்க திட்டம் என தகவல்

மூன்று சட்டசபைத் தொகுதிகளை உள்ளடக்கி, ஒரு மாவட்ட செயலர் நியமனம் செய்ய முடிவெடுக்கப்பட்டு, அதற்கான பணிகள் துவங்கி உள்ளன. எந்தெந்த தொகுதிகள், எந்த மாவட்டத்தில் இடம்பெற வேண்டும் என, பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்த தகவல் வெளியாகி உள்ளது ஜனவரி மாதம் முதல் வாரத்தில் முழு அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Politics Vijay
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment