விஜய் பிறந்தநாள் விழா: புற்றுநோயாளிகளுக்கு த.வெ.க. மா.செ. நிவாரண உதவி!

த.வெ.க.தலைவரும், நடிகருமான விஜய் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் புற்றுநோயாளிகளுக்கு மாவட்டச் செயலாளர் நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

த.வெ.க.தலைவரும், நடிகருமான விஜய் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் புற்றுநோயாளிகளுக்கு மாவட்டச் செயலாளர் நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

author-image
WebDesk
New Update
TVK District Secretary

விஜய் பிறந்தநாள் விழா: புற்றுநோயாளிகளுக்கு த.வெ.க. மா.செ. நிவாரண உதவி!

த.வெ.க.தலைவரும், நடிகருமான விஜய் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, கோவை அரசு மருத்துவமனை புற்றுநோயாளிகளுக்கு ஆட்டோவில் நிவாரணப் பொருட்களை ஏற்றியபடி தாமே ஓட்டி வந்து மாவட்டச் செயலாளர் நோயாளிகளுக்கு வழங்கினார்.

Advertisment

TVK District Secretary

கோவை புறநகர் கிழக்கு மாவட்டம் சார்பாக கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் புற்று நோயாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிலையில் தொடர்ந்து மழை பெய்து வந்ததால் நிவாரணப் பொருட்களை கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனை அறிந்த கோவை புறநகர் கிழக்கு மாவட்டச் செயலாளர் பாபு தனது ஆட்டோவை எடுத்து நிவாரண பொருட்களை எடுத்தபடி அரசு மருத்துவமனைக்கு வந்தார்.

தொடர்ந்து பொருட்களை நிர்வாகிகளுடன் சேர்ந்து இறக்கிய அவர், புற்றுநோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெறுபவர்களுக்கு போர்வைகள், பிஸ்கட்டுகள், பழங்கள் மற்றும் ஹார்லிக்ஸ் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய கிட்-ஐ வழங்கினார். கட்சியில் சாதாரண பொறுப்பு வகிப்பவர்களே கெத்து காட்டி வரும் நிலையில் முக்கிய பதவியில் உள்ள மாவட்டச் செயலாளர், ஆட்டோவில் பொருட்களை ஏற்றிவந்து நோயாளிகளுக்கு  நிவாரணப் பொருட்கள் வழங்கி உள்ளது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Advertisment
Advertisements

செய்தி: பி.ரஹ்மான், கோவை

Coimbatore

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: