‘ஆட்சியின் அவலத்தை திசைதிருப்பவே அனைத்துக் கட்சிக் கூட்டம்’; தி.மு.க மீது த.வெ.க நிர்வாகி கடும் தாக்கு

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக, மு.க. ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடந்து முடிந்த நிலையில், “ஊழல் ஆட்சியின் அவலத்தை திசைதிருப்பவே அனைத்துக் கட்சிக் கூட்டம்’ என்று த.வெ.க நிர்வாகி அருண்ராஜ் தி.மு.க-வைக் கடுமையாகச் சாடியுள்ளார்.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக, மு.க. ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடந்து முடிந்த நிலையில், “ஊழல் ஆட்சியின் அவலத்தை திசைதிருப்பவே அனைத்துக் கட்சிக் கூட்டம்’ என்று த.வெ.க நிர்வாகி அருண்ராஜ் தி.மு.க-வைக் கடுமையாகச் சாடியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Vijay Arunraj 2

“தொடர்ந்து அம்பலமாகி வரும் 'தகிடுதத்த மாடல்' ஆட்சியின் ஒவ்வொரு தில்லுமுல்லையும் திசைத் திருப்பவே அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தி.மு.க கூட்டியிருக்கிறது. இவர்களின் கபட நாடகத்தை தமிழக மக்கள் விழிப்போடு கவனித்துக் கொண்டுத்தான் இருக்கிறார்கள்” என்று அருண்ராஜ் கூறியுள்ளார். Photograph: (Image Source: @arunrajkg/X)

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக, மு.க. ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடந்து முடிந்த நிலையில், “ஊழல் ஆட்சியின் அவலத்தை திசைதிருப்பவே அனைத்துக் கட்சிக் கூட்டம்’ என்று  த.வெ.க கொள்கை பரப்புப் பொதுச் செயலாளர் அருண்ராஜ் தி.மு.க-வைக் கடுமையாகச் சாடியுள்ளார்.

Advertisment

இது தொடர்பாக முன்னாள் ஐ.ஆர்.எஸ் அதிகாரியும் த.வெ.க கொள்கை பரப்புப் பொதுச் செயலாளருமான அருண்ராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: “ஊழல் மாடல் ஆட்சியின் அவலத்தை திசைதிருப்பவே அனைத்துக் கட்சிக் கூட்டம் என்று மு.க. ஸ்டாலின் அரசு தமிழ்நாட்டின் இயற்கை வளத்தையும், நதிகளையும் சுரண்டி அழிக்கும் மணல் கொள்ளை மாஃபியாக்களை வெளிப்படையாகக் காப்பாற்றும் வேலையை செய்து கொண்டிருக்கிறது.

அமலாக்கத் துறை (இ.டி) சட்டவிரோத மணல் கொள்ளைக்கான அனைத்து ஆதாரங்களையும் திரட்டி, வழக்குப் பதிவு செய்யச் சொல்லி தமிழ்நாடு காவல்துறைத் தலைவருக்கு அதிகாரப்பூர்வமாக கடிதம் எழுதிய பிறகும் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யாததால் வேறு வழியில்லாமல் ​நீதிமன்றத்தை நாடியுள்ளது.

Advertisment
Advertisements

இது தொடபான ரிட் மனுவில் மணல் கொள்ளையை அறிவியல் பூர்வமாக நிரூபிக்கும் அடுக்கடுக்கான ஆதாரங்களை சமர்ப்பித்துள்ளது அமலாக்கத்துறை.
 
ஐ.ஐ.டி – கான்பூர் பேராசிரியர்கள் வழிகாட்டுதலின்படி, ட்ரோன்/ லிடார் ஆய்வுகள், பாத்திமெட்ரிக் அளவீட்டு ஆய்வுகள், செயற்கைக்கோள் பட செயலாக்கம் போன்றவை (Drone/ LIDAR Surveys, Bathymetric surveys, Satellite Imagery Processing etc) மற்றும் மணல் அள்ளும் இயந்திரங்களான கொபெல்கோ (Kobelco), ஜே.சி.பி (JCB)  ஆகியவற்றின் ஜியோ ஸ்கேனிங் மற்றும் ஜியோ ஃபென்சிங் (geo-scanning, geo-fencing)  மூலமாக கிடைத்த தரவுகளின் அடிப்படையில், அனுமதிக்கப்பட்டதைவிட பல இடங்களில்  பற்பல மடங்கு அதிகமாக மணல் எடுக்கப்பட்டுள்ளது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வுகளின் அடிப்படையில் தோராயமாக 23 லட்சத்து 64,871 யூனிட் மணல் அரசின் பதிவுகளில் இடம்பெறாமலேயே எடுக்கப்பட்டிருப்பதும், அதன்மூலம் ரூ. 4,730 கோடிக்கு மணல் விற்பனை நடைபெற்றுள்ள நிலையில்,  நீர்வளத் துறையின் பதிவுகளில் வெரும் ரூ.36.45 கோடி மட்டுமே கணக்கு காட்டப்பட்டிருப்பதும் தெரிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

எனவே, இனியும் காலம் தாழ்த்தமல் உடனடியாக உரிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்ய வலியுறுத்துகிறோம். இதை உடனடியாக செய்வார்களா..? அல்லது மாநில உரிமையின் பெயரால் மீண்டும் ஒரு உருட்டுக் கட்டையை வீசுவார்களா? என்கிற கேள்வியும் எழாமல் இல்லை.

நேற்று வேலைவாய்ப்பில் ஊழல்... இன்று மணல் கொள்ளையில் மௌனம்... 

தொடர்ந்து அம்பலமாகி வரும் 'தகிடுதத்த மாடல்' ஆட்சியின் ஒவ்வொரு தில்லுமுல்லையும் திசைத் திருப்பவே அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தி.மு.க கூட்டியிருக்கிறது. இவர்களின் கபட நாடகத்தை தமிழக மக்கள் விழிப்போடு கவனித்துக் கொண்டுத்தான் இருக்கிறார்கள்! நிச்சையம் 2026-ல் தகுந்த பாடத்தை புகட்டி அவர்களை வீட்டுக்கு அனுப்புவது உறுதி.” என்று அருண்ராஜ் தி.மு.க-வைக் கடுமையாகச் சாடியுள்ளார்.

TVK

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: