/indian-express-tamil/media/media_files/2025/09/13/captain-and-thalapathy-2025-09-13-23-17-37.jpg)
திருச்சியில் இருந்து தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், திருச்சியில் பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு அரியலூர் சென்ற நிலையில், அங்கு பணத்தை பற்றி பேசியது பலருக்கும் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் பற்றி பேச வைத்துள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உச்சம் தொட்ட நடிகர் விஜய், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கினார். மேலும் தற்போது தான் நடித்து வரும் ஜனநாயகன் படம் தான் கடைசி படம் என்றும் அறிவித்துள்ள விஜய், அடுத்த ஆண்டு, தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் தனது கட்சியுடன் போட்டியிடுகிறார். முன்னதாக விழுப்புரம், மற்றும் மதுரையில் 2 மாநாடுகளை நடத்தினார்.
அதனைத் தொடர்ந்து இன்று முதல் (செப்டம்பர் 13) தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுளள் த.வெ.க தலைவர் விஜய், திருச்சியில் இருந்து தனது பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். இங்கு பேசிய அவர், அறிஞர் அண்ணா, முதன் முதலில் தேர்தலில் போட்டியிடும்போது, தனது பிரச்சரத்தை திருச்சியில் இருந்து தான் தொடங்கினார். அது 1950 காலக்கட்டம். அதேபோல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் தனது அரசியல் பிரச்சாரத்தை திருச்சியில் இருந்து தொடங்கினார் என்று கூறியிருந்தார்.
திருச்சியில் பிரச்சாரத்தை முடித்த விஜய், அதனைத் தொடர்ந்து அரியலூரில் பேசினார். அப்போது அரியலூர் வருவதற்கு தாமதமாகிவிட்டது என்று கூறி மன்னிப்பு கேட்டு பேச தொடங்கிய விஜய், என்னங்க பெரிய பணம், வேண்ம்ங்கிற அளவுக்கு பாத்தாச்சு. அரசியலுக்கு வந்து தான் நான் பணம் சம்பாதிக்க வேண்டுமா என்ன? அதுக்கு அவசியமே இல்லை. எனக்கு எல்லாமும் எல்லா நேரமும் கொடுத்த உங்களுக்காக உழைக்கிறதை தவிர எனக்கு வேறு எந்த எண்ணமும் வேலையும், எதுவும் இல்லை.
விஜய், விஜய் அண்ணா, விஜி தம்பி, நண்பன் விஜய் என்னடா இந்த விஜி தனி ஆளா இருப்பான் என்று பார்த்தால், எப்போ பாரு மக்கள் கடலொட மக்கள் கடலாகவே இருக்கிறானே என்று நமது எதிரிகள் தெரிந்துகொண்டு கண்ணாபின்னா என்று பேச தொடங்கி இருக்கிறார்கள். நான் மரியாதையாக பேசினால் கூட அதை தவறாக எடுத்துக்கொள்கிறார்கள். யார் என்ன சொன்னாலும் அறிஞர் அண்ணா அவர்கள் சொன்ன பஞ்ச் தான். வாழ்க வசப்பாளர்கள் என்று சொல்லிவிட்டு போய்க்கொண்டே இருக்க வேண்டியது தான் என்று பேசியுள்ளார்.
மேலும், ஓட்டு திருட்டு நடந்துள்ளது இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் என்று கொண்டு வர நினைக்கிறார்கள். 2029-ல் பா.ஜ.க. ஆட்சி முடிவுக்கு வந்துவிடும். அதன்பிறகு ஒரே நாடு ஓரே தேர்தல் நடத்தி இந்த ஓட்டு திருட்டை மீண்டும கொண்டுவர நினைக்கிறார்கள். ஒரே நாடு ஒரே தேர்தல் செட் ஆகாது. அப்படி வந்தால் அது தில்லு முல்லுக்கு தான் வழி செய்யும். தி.மு.க. அரசு தேர்தல் வாக்குறுதிகள் ஒன்றையும் நிறைவேற்றவில்லை. ஆனால் நிறைவேற்றிவிட்டோம் என்று ரீல் சுற்றுகிறார்கள்.
"Ennanga Periya Panam.. Venungra alavuku paathachu.. Arasilayuku vandhudha Na panam sambadhikanuma enna..? Adhuku Konjam kuda Avasiyam ila.."
— Laxmi Kanth (@iammoviebuff007) September 13, 2025
- #ThalapathyVijay's Speech..🔥 pic.twitter.com/RKYNR31Lh2
நீங்களே இப்படி ரீல் சுற்றலாமா மை டியர்... வேண்டாம். நான் ஆசையா அன்பா கூப்பிட்டால் கூட, தவறாக நினைத்துக்கொள்கிறார்கள். மை டியிர் சி.எம்.சார். பொய் வாக்குறுதிகளை கொடுப்பதில், தி.மு.க. பா.ஜ.க. இரண்டும் ஒரே வகையறா தான் என்று கூறியுள்ளார். இதில் என்னங்க பெரிய பணம் என்று விஜய் பேசியது, பழைய மாநாடு ஒன்றில், தே.மு.தி.க தலைவர் கேப்டன் விஜயகாந்த் என்னய்யா காசு காசு பெரிய காசு என்று பேசியதை நினைவுபடுத்தும் வகையில் அமைந்த நிலையில், விஜி தம்பி என்று சொன்னது விஜய் தன்னை விஜயகாந்த் தம்பி என்று தெரியப்படுத்த பேசுவது போல் இருப்பதாக கூறி வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.