பெண்களுக்கு எதிரான வன்கொடுமை புகார் அளிக்க தனி இணையதளம்: தமிழக அரசுக்கு விஜய் கோரிக்கை!

பெண்கள் மீதான வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதைத் தடுக்க, நீதித் துறையின் துணையோடு ஆட்சியாளர்கள் இரும்புக் கரம் கொண்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

பெண்கள் மீதான வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதைத் தடுக்க, நீதித் துறையின் துணையோடு ஆட்சியாளர்கள் இரும்புக் கரம் கொண்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

author-image
WebDesk
New Update
thalapathy Vijay Psn

பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தொடர்பான புகார் அளிக்கும் வகையில் புதிய இணையதளத்தை உருவாக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களுக்கு, எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் அதிகரித்து வருவதால், இந்த துன்புறுத்தல்கள் குறித்து வெளியில் சொல்ல முடியாமல் பெண்கள், மன வேதனையால் கஷ்டப்படுவதாக பெண்கள் சிலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

Advertisment

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், பணிக்கு செல்லும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சட்டம் 2013ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. தமிழக அரசு, இந்த சட்டத்திற்கான விதி முறைகளை உருவாக்கவில்லை. அதே சமயம் இந்த சட்டத்திற்கான வரைவு விதிகளை, மாநில மகளிர் ஆணையம், உருவாக்கி மாநில அரசிடம் வழங்கியுள்ளது. இதை ஆய்வு செய்து அமல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தொடர்பாக தகவல் அளிக்க தனி இணையதளத்தை தமிழக அரசு உருவாக்க வேண்டும். அனைத்து நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களுக்கும் இந்த இணைய தளம் குறித்து தெரிந்திருக்க வேண்டும். இந்த இணையதளம் மூலமாக அளிக்கப்படும் புகார்களுக்கு தீர்வு காணப்பட்ட விபரங்கள் பதிவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

தற்போது நீதிமன்றத்தின் இந்த உத்தரவை மேற்கோள் காட்டியுள்ள தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய், சர்வதேச அளவில் பெண்களின் முன்னேற்றம், முன்பை விட நம்பிக்கை அளிப்பதாக இருந்தாலும், அவர்களுக்கான பாதுகாப்பு இன்றும் கேள்விக்கு உரியதாகவே இருக்கிறது. பெண் விடுதலை பேசும் தமிழ்நாட்டில், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் நாள்தோறும் நிகழ்வதாக வரும் செய்திகள் துயரம் அளிக்கின்றன. பெண்கள் மீதான வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதைத் தடுக்க, நீதித் துறையின் துணையோடு ஆட்சியாளர்கள் இரும்புக் கரம் கொண்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

Advertisment
Advertisements

பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான புகார்களுக்கு, அரசு தனி இணையத்தளத்தை உருவாக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு யோசனை தெரிவித்துள்ளது. இதற்கு மதிப்பளித்து, தமிழக அரசு தனி இணையத்தளத்தை உருவாக்கி, பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு சர்வதேச தினத்தில் வலியுறுத்துகிறேன் என்று விஜய் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

அதேபோல் தனது பதிவில், விஜயின் புகைப்படத்தை பயன்படுத்தியுள்ள நடிகர் அருண்விஜய், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான புகார்களுக்கு, அரசு தனி இணையத்தளத்தை உருவாக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு யோசனை தெரிவித்துள்ளது. இதற்கு மதிப்பளித்து, தமிழக அரசு தனி இணையத்தளத்தை உருவாக்கி, பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு சர்வதேச தினத்தில் வலியுறுத்துகிறேன் என்று பதிவிட்டுள்ளார். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu Thalapathy Vijay

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: