/indian-express-tamil/media/media_files/2025/10/13/adhav-2025-10-13-12-32-10.jpg)
கடந்த 27-ஆம் தேதி த.வெ.க கரூரில் பிரசாரம் மேற்கொண்ட போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சூழ்நிலையில் அரசியல் கட்சிகள் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்க கோரி சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த தினேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதேபோல் கூட்ட நெரிசலில் சிக்கி பலியான சிறுவன் பிருத்திக்கின் தந்தை பன்னீர்செல்வம், பாத்திமாபானுவின் கணவர் பிரபாகரன், சந்திராவின் கணவர் செல்வராஜ் ஆகியோரும் சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு உச்ச நீதி​மன்ற நீதிப​தி​கள் ஜே.கே.மகேஸ்​வரி, என்​.​வி.அஞ்​சரியா ஆகியோர் அடங்​கிய அமர்​வில் கடந்த வெள்ளிக்கிழமை விசா​ரணைக்கு வந்​து ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று இந்த வழக்கு தொடர்பான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றுது. அதில், கரூர் வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் உயர் நீதிமன்ற விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. இதையடுத்து டெல்லியில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசிய த.வெ.க தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, "வலி மிகுந்த நாட்களில் நாங்கள் பயணித்துக் கொண்டிருக்கிறோம்.
எங்கள் வாயில் இருந்து வார்த்தைகள் கூட முழுமையாக வர முடியவில்லை. தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் த.வெ.க சுற்றுப்பயணம் மிகப்பெரிய எழுச்சியாக உருவானது. இது முதல் கூட்டம் கிடையாது. திருச்சி, நாமக்கல், திருவாரூர், அரியலூர், நாகப்பட்டினம் என பல ஊர்களுக்கு செல்லும்போது கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத எழுச்சியை மக்கள் உருவாக்கினர். ஆனால் உண்மையைப் பதிவு செய்ய வேண்டும். எந்த மாவட்டத்திலும் காவல்துறை ஆதரவு வழங்கியது இல்லை. அரியலூரில் மட்டும் வழங்கினார்கள். எங்களுக்கு பெரம்பலூர் எஸ். பி பல தகவல்களை வழங்கினார்.
அதனால் கடைசி நேரத்தில் அதை ரத்து செய்தோம். நாங்கள் நல்லபடியாக நாமக்கல் பிரசார பயணத்தை முடித்துவிட்டு, காவல்துறை சொன்ன 3 முதல் 10 மணி வரை என்ற உரிய நேரத்தில் கரூர் சென்றோம். எங்களுடைய நேரலையை எல்லா ஊடகங்களுக்கும் கொடுத்திருக்கிறோம். தலைவர் எங்கிருந்தார் என்பது எல்லாருக்கும் தெரியும். ஆனால் த.வெ.க தலைவர் விஜய் தாமதமாக வந்தார் என்ற குற்றச்சாட்டை எங்கள் மீது வைக்கின்றனர். கரூரில் காவல்துறையினர் தான் எங்களை வரவேற்றார்கள்.
எந்த மாவட்டத்திலும் இப்படி நடக்கவில்லை. அவர்கள்தான் திட்டமிட்ட இடத்தில் நின்று பேசுங்கள் என்று சொன்னார்கள். ஏற்பாட்டில் தவறுகள் இருந்தால் ஏன் காவல்துறை எல்லையிலேயே எங்களை வரவேற்க வேண்டும் என்பது எங்கள் முதல் கேள்வி. பேசும்போது த.வெ.க தலைவர் விஜய் மக்களைப் பார்த்துத்தான் பேசினார். எங்களுக்கு வழக்கறிஞர்கள் கிடைக்கக் கூடாது என்று ஒரு செயலை செய்ய முற்பட்டார்கள். இந்த இறப்புக்கு ஒரு நியாயம் கிடைக்க வேண்டும். இதில் 100 சதவிகிதம் ஒரு சதி திட்டம் இருக்கிறது. ஒட்டுமொத்த கவல்துறையும், அரசும் எங்களுக்கு எதிராக இருந்தது. சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு எவ்வளவு பெரிய தவறு என்பதை உச்சநீதிமன்றம் பதிவு செய்துள்ளது” என்றார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.