வக்பு வாரிய திருத்த சட்டத்துக்கு எதிராக தி.மு.க, காங்கிரஸ், வி.சி.க உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் வக்பு திருத்த சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அண்மையில் நாடாளுமன்ற இரு அவைகளிலும் வக்பு வாரிய திருத்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. தி.மு.க, காங்கிரஸ், வி.சி.க உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் நாடாளுமன்றத்தில் கடுமையான எதிர்ப்பு தெரிவித்ததுடன் வக்பு வாரிய திருத்த சட்ட மசோதாவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளன.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள வக்பு வாரிய திருத்தச் சட்டத்துக்கு நாடு முழுவதும் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள், எதிர்க்கட்சிகள் வக்பு வாரிய சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய்யும் வக்பு வாரிய திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
இந்நிலையில், வக்பு சட்ட திருத்தத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அண்மையில், நாடாளுமன்ற இரு அவைகளிலும் வக்ஃபு வாரிய திருத்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. தி.மு.க உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஏற்கனவே வழக்கு தொடர்ந்துள்ள நிலையில் த.வெ.க-வும் வழக்கு தொடர்ந்துள்ளது கவனம் பெற்றுள்ளது.