கரூர் துயரம்: திருச்சியில் செய்தியாளர்களை தவிர்த்த விஜய்; விமானத்தில் சென்னை பயணம்

கரூர் விமான நிலையத்தில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்காமல் த.வெ.க தலைவர் விஜய் சென்றார்.

கரூர் விமான நிலையத்தில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்காமல் த.வெ.க தலைவர் விஜய் சென்றார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
tvk vijay

கரூர் துயரம்: திருச்சியில் செய்தியாளர்களை தவிர்த்த விஜய்; விமானத்தில் சென்னை பயணம்

வரும் 2026-ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் தீவிர களப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், தமிழ்நாடு முழுவதும் அரசியல் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார்.

Advertisment

இதன் ஒரு பகுதியாக இன்று (செப்.27) நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது கரூரில் விஜய் வருகிறார் என்றதும் கட்டுக்கடங்காத கூட்டம் கூடியது.

இதனால், விஜய் பேசிக் கொண்டிருந்தபோதே பலரும் மயங்கி விழுந்தனர். மேலும், இந்த கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உட்பட 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்ட பலரும் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும், தி.மு.க. அமைச்சர்கள் கரூரில் தேவையான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு கட்டணமில்லா சிகிச்சை வழங்க அறுவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisment
Advertisements

இந்த நிகழ்வு கரூரையை போர்களமாக்கியுள்ளது. இந்நிலையில், சென்னை செல்வதற்காக கரூர் விமான நிலையம் வந்த த.வெ.க தலைவர் விஜய்யிடம் செய்தியாளர்கள் 30 பேர் இறந்தது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் எந்த பதிலும் தெரிவிக்காமல் விமான நிலையத்திற்குள் சென்றுவிட்டார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

TVK Vijay

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: