TVK Vijay Karur victims Meet Updates: என்னை மன்னித்து விடுங்கள் - கண்ணீர் மல்க விஜய் பேச்சு

TVK Vijay Karur Stampede victims Meet Updates: கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 37 பேரின் குடும்பங்களை சேர்ந்த 235 பேரை த.வெ.க. தலைவர் விஜய் தனித்தனி அறைகளில் சந்தித்து அவர்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்துள்ளார்.

TVK Vijay Karur Stampede victims Meet Updates: கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 37 பேரின் குடும்பங்களை சேர்ந்த 235 பேரை த.வெ.க. தலைவர் விஜய் தனித்தனி அறைகளில் சந்தித்து அவர்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்துள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
TVK Vijay

என்னை மன்னித்து விடுங்கள் - கண்ணீர் மல்க விஜய்

TVK Chief Vijay meets Karur victims Updates: கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த மாதம் 27-ஆம் தேதி த.வெ.க தலைவர் விஜயின் பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் ‘வீடியோ கால்’ மூலம் பேசி ஆறுதல் தெரிவித்த விஜய், விரைவில் தங்களை நேரில் சந்திக்கிறேன் என உறுதி அளித்தார். ஆனால் அனுமதி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதன் காரணமாக உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரையும் சென்னைக்கு வரவழைத்து நேரில் சந்திக்க விஜய் முடிவு செய்தார்.

Advertisment

இந்த சந்திப்பு இன்று காலை மாமல்லபுரத்தில் உள்ள பார் பாயிண்ட்ஸ் ஓட்டலில் நடைபெற்றது. இவர்களோடு, நெரிசலில் சிக்கி காயம் அடைந்த 110 பேரும் தங்களது குடும்பத்தினருடன் விஜய்யை சந்தித்து பேசினர். 

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 37 பேரின் குடும்பங்களை சேர்ந்த 235 பேரை த.வெ.க. தலைவர் விஜய் தனித்தனி அறைகளில் சந்தித்து அவர்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்துள்ளார். ஒவ்வோர் அறைக்கும் சென்ற அவர், அந்த அறையில் வைக்கப்பட்ட, உயிரிழந்தவர்களின் புகைப்படங்களுக்கு மலரஞ்சலி செலுத்திய பின்னர், அவர்களுடைய குடும்பத்தினரை சந்தித்து பேசினார்.

  • Oct 27, 2025 21:51 IST

    விஜயின் ரூ.20 லட்சத்தை திருப்பி அனுப்பிய குடும்பம்: ‘நேரில் வர வேண்டும்’ - கரூர் நெரிசலில் கணவரை இழந்த சங்கவி

    கரூர் கூட்ட நெரிசலில் கணவரை இழந்த சங்கவி குடும்பத்திற்கு த.வெ.க தலைவர் விஜய், வங்கிக் கணக்கில் செலுத்திய ரூ.20 லட்சம் பணத்தை திருப்பி அனுப்பியுள்ளனர்.

    கரூர் கூட்ட நெரிசலில் கணவரை இழந்தவர் சங்கவி, இவர் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், "விஜய் நேரில் வர வேண்டும். நாங்களாகத் தேடிச் செல்ல விருப்பம் இல்லை" என்று கூறியுள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட சங்கவி, தனது கணவர் ரமேஷ் உயிரிழந்த நிலையில், ரமேஷின் தங்கையைத் தன் சிலர் சென்னைக்கு அழைத்துச் சென்றுள்ளதாக குற்றம்சாட்டினார்.



  • Oct 27, 2025 19:46 IST

    கரூர் நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களை விஜய் சென்னைக்கு அழைத்து பார்ப்பது புதிய அணுகுமுறை - திருமாவளவன்

    அரியலூரில் செய்தியாளர்களிடம் பேசிய வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன், “கரூர் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களை சென்னைக்கு வரவழைத்து த.வெ.க தலைவர் விஜய் பார்ப்பது புதிய அணுகுமுறையாக உள்ளது. இதில் அவருடைய தொண்டர்கள், கட்சியினர், குடும்பத்தினர் கருத்து சொல்லவேண்டிய ஒன்று. அதிலே நான் கருத்து சொல்ல விரும்பவில்லை.” என்று கூறினார்.



  • Advertisment
    Advertisements
  • Oct 27, 2025 17:09 IST

    என்னை மன்னித்து விடுங்கள் - கண்ணீர் மல்க விஜய்

    சென்னை அழைத்து வந்ததற்கு என்னை மன்னித்து விடுங்கள். நிச்சயம் கரூரில் வந்து சந்திப்பேன். வாழ்நாள் வரை நான் உங்களுடன் இருப்பேன். குடும்பத்தில் ஒருவனாக உங்களுடன் நான் இருப்பேன். உங்களுக்கு தேவையான உதவிகளை நான் செய்து தருவேன். வேலைவாய்ப்பு, திருமணம், கல்வி என அனைத்தையும் நான் ஏற்றுக்கொள்கிறேன் என கண்ணீர் மல்க உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் த.வெ.க. தலைவர் விஜய் உறுதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது.



  • Oct 27, 2025 16:41 IST

    மருத்துவ, கல்விச் செலவை ஏற்றுக்கொண்ட விஜய்

    கரூர் சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினரை மாமல்லப்புரத்திலுள்ள ரெசார்ட்டில் விஜய் தனித்தனியாக சந்தித்தார். பாதிக்கப்பட்ட குடும்பங்களின் மருத்துவம் மற்றும் கல்விச் செலவை விஜய் ஏற்றுக்கொள்வதாக கூறியிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது



  • Oct 27, 2025 15:28 IST

    கண்ணீர் மல்க உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் விஜய் உறுதி

    சென்னை அழைத்து வந்ததற்கு என்னை மன்னித்து விடுங்கள். நிச்சயம் கரூரில் வந்து சந்திப்பேன். வாழ்நாள் வரை நான் உங்களுடன் இருப்பேன். குடும்பத்தில் ஒருவனாக உங்களுடன் நான் இருப்பேன். உங்களுக்கு தேவையான உதவிகளை நான் செய்து தருவேன். வேலைவாய்ப்பு, திருமணம், கல்வி என அனைத்தையும் நான் ஏற்றுக்கொள்கிறேன்

    கண்ணீர் மல்க உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் விஜய் உறுதி



  • Oct 27, 2025 15:26 IST

    ஆதவ் அர்ஜுனா மனு: நவ. 5 ஆம் தேதி விசாரணை

    சமூக வலைதளத்தில் கலவரத்தைத் தூண்டும் வகையில் பதிவிட்டதாகத் தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி ஆதவ் அர்ஜுனா தாக்கல் செய்த மனுவை, குற்ற வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிக்கு மாற்றச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது; இந்த மனு நவம்பர் 5 ஆம் தேதி நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன் விசாரணைக்கு வருகிறது.



  • Oct 27, 2025 14:50 IST

    கரூர் சம்பவம் - விஜய்யின் ஆறுதல் சந்திப்பு நிறைவு

    கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 37 பேரின் குடும்பங்களை சேர்ந்த 235 பேரை த.வெ.க. தலைவர் விஜய் இன்று தனித்தனி அறைகளில் சந்தித்து அவர்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்துள்ளார். ஒவ்வோர் அறைக்கும் சென்ற அவர், அந்த அறையில் வைக்கப்பட்ட, உயிரிழந்தவர்களின் புகைப்படங்களுக்கு மலரஞ்சலி செலுத்திய பின், அவர்களுடைய குடும்பத்தினரை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு தற்போது நிறைவடைந்து உள்ளது. அவரவர் சொந்த ஊருக்கு புறப்பட தயாராகி உள்ளனர்.



  • Oct 27, 2025 14:17 IST

    விஜய் ஆறுதல் கூறும் நிகழ்வு - பொருளாளருக்கு அனுமதி மறுப்பு

    கரூர் நெரிசலில் உயிரிழந்தோரின் குடும்பத்தினரை விஜய் சந்தித்து ஆறுதல் கூறும் நிகழ்வு நடக்கும் ரிசார்டில் த.வெ.க. பொருளாளருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான அடையாள அட்டை இல்லாததால் அவரை அனுமதிக்கவில்லை. வாகனத்தின் ஹாரன் அடித்துக்கொண்டு இருந்தவர், பின்னர் உள்ளே இருப்பவர்களிடம் செல்போனில் தொடர்புகொண்டு பேசி, உள்ளே சென்றார். 



  • Oct 27, 2025 13:49 IST

    நடித்தாலே நாட்டை ஆளும் தகுதி - விஜய் குறித்த கேள்விக்கு சீமான் பதில்

    நடித்தாலே போதும் நாட்டை ஆளும் தகுதி உள்ளது என மக்கள் நினைப்பது கொடுமையானது - தவெக தலைவர் விஜய் குறித்த கேள்விக்கு நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மதுரையில் பதில்  அளித்துள்ளார்.



  • Oct 27, 2025 13:47 IST

    கரூர் சம்பவம் குறித்து ஓபிஎஸ் சிவகங்கையில் கருத்து

    "எது எப்படியோ கரூர் துயரச் சம்பவம் நடந்துவிட்டது.. பாதிக்கப்பட்டவர்களை அங்கு சென்று பார்த்தாலும் சரி அல்லது அவர்களை இங்கு அழைத்துவந்து அனுதாபம் தெரிவித்தாலும் சரி... அனுதாபம் தெரிவிக்கிறாரே அதைதான் நாம் பாராட்ட வேண்டும்"  என கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தவெக தலைவர் விஜயைப் பார்க்கச் செல்வது குறித்து ஓபிஎஸ் சிவகங்கையில் கருத்து தெரிவித்தார்.



  • Oct 27, 2025 11:42 IST

    உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் - கல்வி செலவுகளை ஏற்பதாக விஜய் உறுதி

    கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தை த.வெ.க தலைவர் விஜய் தனித்தனியாக சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகிறார். உயிரிழந்தவர்கள் குடும்பத்தின் மருத்துவம், கல்வி செலவுகளை ஏற்பதாகவும், வேலை வாய்ப்பிற்கு ஏற்பாடு செய்து தருவதாகவும் விஜய் உறுதியளித்துள்ளார்.



  • Oct 27, 2025 10:48 IST

    உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு விஜய் ஆறுதல் - தனியாக மேஜை அமைப்பு

    கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை த.வெ.க தலைவர் விஜய் சந்தித்து வருகிறார். உயிரிழந்தவர்களின் ஒவ்வொரு குடும்பத்தினரையும் விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்காக தனியாக மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன.மேலும், இந்த நிகழ்வின் போது விஜய்யுடன் நிர்வாகிகள் இருக்கமாட்டார்கள் என்று கூறப்படுகிறது.



  • Oct 27, 2025 10:41 IST

    கரூர் துயரம் - 235 பேரை சந்தித்து வரும் விஜய்

    த.வெ.க பரப்புரையின் பொது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் த.வெ.க தலைவர் விஜய் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி வருகிறார்.



  • Oct 27, 2025 10:23 IST

    கரூர் மக்களுடன் சந்திப்பு - வருகை தந்த விஜய்

    கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பத்தினரை த.வெ.க தலைவர் விஜய் இன்று மாமல்லபுரத்தில் சந்திக்க உள்ளார். இந்நிலையில், நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு த.வெ.க தலைவர் வருகை தந்துள்ளார்.



  • Oct 27, 2025 09:58 IST

    இறப்பு சான்றிதழை காட்டிய பின் அனுமதி

    கரூரில் பலியானோரின் குடும்பத்தினரை மாமல்லபுரத்தில்  விஜய் சந்திக்கும் நிலையில், உயிரிழந்த மோகன் (19) என்பவரின் தந்தையை ஹோட்டலுக்குள் அனுமதிக்காத‌தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், ஹோட்டல் வாசலில் காத்திருந்ததை தொடர்ந்து அவர் எடுத்து வந்த மகனின் இறப்பு சான்றிதழை காட்டிய பின்பு தவெகவினர் அனுமதித்து அழைத்து சென்றனர்.



  • Oct 27, 2025 09:55 IST

    கரூர் மக்களுடன் சந்திப்பு - கோரிக்கைகளை எழுத்துப்பூர்வமாக வாங்கும் விஜய்

    கரூர் துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை மாமல்லபுரத்தில் அழைத்து வந்து த.வெ.க தலைவர் விஜய் சந்தித்து வரும் நிலையில், இந்த சந்திப்பின்போது பாதிக்கப்பட்டவர்களின் கோரிக்கையை விஜய் எழுத்துப்பூர்வமாக பெற்று வருவதாகவும், இந்த சந்திப்பில் கட்சி நிர்வாகிகள் யாரும் விஜயுடன் இருக்கமாட்டார்கள் என்றும் கூறப்படுகிறது.



  • Oct 27, 2025 09:53 IST

    கரூர் துயரம் - பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கும் த.வெ.க தலைவர் விஜய்

    கரூர் துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை மாமல்லபுரத்தில் அழைத்து வந்து த.வெ.க தலைவர் விஜய் சந்தித்து வரும் நிலையில், இந்த சந்திப்பு, பூஞ்சேரியில் உள்ள ஃபோர்பாயிண்ட் நட்சத்திர ஹோட்டலில் இந்த சந்திப்பு நடைபெறுகிறது. இதற்காக 50 அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



  • Oct 27, 2025 09:20 IST

    விஜய் - மக்கள் சந்திப்பு - ஆறுதல் நிகழ்வு என்பதால் பேனர் இல்லை

    கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களை இன்று விஜய் சந்திக்க உள்ள நிலையில், இந்த சந்திப்பு மாமல்லபுரம் பகுதியில் உள்ள விடுதியில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வு ஆறுதல் சொல்லும் நிகழ்வு என்பதால், பேனர்கள் வைக்கப்படவில்லை.



  • Oct 27, 2025 09:18 IST

    கரூர் சம்பவம் நடந்து 30-வது நாள்; பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கும் விஜய்

    கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை மாமல்லபுரத்தில் விஜய் இன்று சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பு இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ள நிலையில், ஒவ்வொரு குடும்பத்தையும் தனித்தனியாக சந்திக்கும் விஜய், ஒவ்வொரு குடும்பத்தையும் 20 நிமிடங்களுக்கு மேலாக சந்தித்து பேச உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.



  • Oct 27, 2025 08:40 IST

    மாமல்லபுரம் வந்த விஜய் - பாதிக்கப்பட்டவர்களுடன் சந்திப்பு

    கரூரில் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவிக்க த.வெ.க தலைவர் விஜய் மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதிக்கு வந்தடைந்தார்.



  • Oct 27, 2025 08:35 IST

    நேரில் ஆறுதல் கூறும் விஜய் - சென்னைக்கு வந்தடைந்த பேருந்துகள்

    கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை இன்று த.வெ.க தலைவர் விஜய், மாமல்லபுரத்தில் சந்திக்க உள்ளார். இதற்காக பாதிக்கப்பட்டோர் பேருந்துகள் மூலம் சென்னை அழைத்துவரப்பட்டுள்ளனர்.



  • Oct 27, 2025 08:33 IST

    த.வெ.க தலைவர் விஜய் பரப்புரை - கரூர் உயிரிழப்பு

    கரூரி கடந்த 27-ஆம் த.வெ.க தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்ட போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.



TVK Tamil News Update Tamil News Live Update Tamil News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: