சட்டம் ஒழுங்கு சீர்கேடு... தி.மு.க அரசுக்கு கண்டனம்; த.வெ.க மதுரை மாநாட்டில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றம்

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து இருப்பதற்கும் காரணமான நிர்வாகத் திறனற்ற கபட நாடகத் தி.மு.க. அரசுக்குக் கண்டனம் என்பன உள்பட 6 தீர்மானங்கள் த.வெ.க மதுரை மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து இருப்பதற்கும் காரணமான நிர்வாகத் திறனற்ற கபட நாடகத் தி.மு.க. அரசுக்குக் கண்டனம் என்பன உள்பட 6 தீர்மானங்கள் த.வெ.க மதுரை மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

author-image
WebDesk
New Update
TVK maanaadu 1

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து இருப்பதற்கும் காரணமான நிர்வாகத் திறனற்ற கபட நாடகத் தி.மு.க. அரசுக்குக் கண்டனம் என்பன உள்பட 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. Photograph: (x/ @ActorVijayTeam)

த.வெ.க-வின் 2-வது மாநில மாநாடு மதுரையில் பாரபத்தி என்ற இடத்தில் வியாழக்கிழமை (21.06.2025) நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக் கணக்கான தொண்டர்கள் கலந்துகொண்டனர். மாநாட்டில் பேசிய த.வெ.க தலைவர் விஜய், மாநிலத்தில் ஆளும் தி.மு.க-வையும் மத்தியில் ஆளும் பா.ஜ.க-வையும் சாடிப் பேசினார். 

Advertisment

முன்னதாக, த.வெ.க-வின் 2-வது மாநில மாநாட்டில், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து இருப்பதற்கும் காரணமான நிர்வாகத் திறனற்ற கபட நாடகத் தி.மு.க. அரசுக்குக் கண்டனம் என்பன உள்பட 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரம் வருமாறு:

1.பரந்தூரில் விவசாய நிலங்களை அழித்து புதிய விமான நிலையம் கட்டும் முடிவைக் கண்டித்துத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

2.சுதந்திரமான மற்றும் நியாயமான முறையில் தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Advertisment
Advertisements

3.தமிழகத்தில் பெண்கள், குழந்தைகளுக்குப் பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுவதற்கும், சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து இருப்பதற்கும் காரணமான நிர்வாகத் திறனற்ற கபட நாடகத் தி.மு.க. அரசுக்குக் கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

4.தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதையும் அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதையும் தடுக்கத் தவறி வரும் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்குக் கடும் கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

5.ஆணவக் கொலைகளைத் தடுக்கத் தனிச் சட்டத்தைத் தமிழக அரசு கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

6.அவுட்சோர்சிங் முறையில் காலிப் பணியிடங்களை நிரப்பாமல், TNPSC உள்ளிட்ட தேர்வு வாரியங்கள் வாயிலாக நேர்மையான முறையில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

TVK

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: