விஜய் நாகை பரப்புரை: மின்சாரத்தை நிறுத்தி வைக்க த.வெ.க. மனு

த.வெ.க தலைவர் விஜய் நாளை நாகையில் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளதால் மின்சாரத்தை நிறுத்தி வைக்க த.வெ.க-வினர் மனு அளித்துள்ளனர்.

த.வெ.க தலைவர் விஜய் நாளை நாகையில் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளதால் மின்சாரத்தை நிறுத்தி வைக்க த.வெ.க-வினர் மனு அளித்துள்ளனர்.

author-image
WebDesk
New Update
tvk

விஜய் நாகை பரப்புரை: மின்சாரத்தை நிறுத்தி வைக்க த.வெ.க. மனு

தமிழகத்தில் சட்டசபைத்தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்கான களப்பணிகளில் தி.மு.க, அ.தி.மு.க, த.வெ.க போன்ற மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். அடுத்த ஆண்டு முதல்வராக போவது மு.க.ஸ்டாலினா? இல்லை த.வெ.க தலைவர் விஜய்யா? என்ற கேள்வியும் மேலோங்கி வருகிறது.

Advertisment

இந்நிலையில், த.வெ.க தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் அரசியல் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். வருகிறார். கடந்த 13-ஆம் தேதி இவர் திருச்சியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அடுத்ததாக, நாளை நாகை, திருவாரூர் மாவட்டங்களில் விஜய் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளார்.

இந்நிலையில், விஜய் செல்லும் போது உயர் மின் அழுத்தக் கம்பிகளில் மின்சாரத்தை நிறுத்த, த.வெ.க. நாகை மாவட்ட செயலாளர் மனு அளித்துள்ளார். அதில், “தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சாலை மார்க்கமாக வாஞ்சூர் ரவுண்டானா தொடங்கி நாகூர், தெற்கு பால்பண்ணைச்சேரி, வடகுடி சாலை வழியாக கிழக்கு கடற்கரை சாலையை அடைந்து அவ்வழியாக பரப்புரை செய்ய உள்ள புத்தூர் அண்ணாசிலை அருகில் வருகை புரிந்து மக்களை சந்தித்து உரையாற்றயுள்ளார்.

இவ்வழித்தடத்தில் உயர் மின்னழுத்த கம்பங்கள் உள்ளதால் விஜய் நிகழ்வு தொடங்கி முடியும் வரை அவ்வழியில் உள்ள வழி தடங்களில் மின் நிறுத்தம் செய்து தரும்படியும் அல்லது மின் ஊழியர்களை நியமித்து பொதுமக்களுக்கு தக்க பாதுகாப்பு வழங்கிடுமாறு மிகவும் தாழ்மையுடம் கேட்டுக் கொள்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisment
Advertisements
Vijay TVK

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: