Advertisment

புதுகை, வேங்கைவயலில் குடிநீர் தொட்டியை உடைக்க முயன்ற தமிழக வாழ்வுரிமை கட்சி; 4 பேர் கைது

கடந்த ஆண்டு டிசம்பரில், வேங்கைவயலில் ஆதி திராவிடர் காலனிக்கு குடிநீர் வழங்கும் தொட்டியில் மனித மலம் கண்டுபிடிக்கப்பட்டது. இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. தமிழக வாழ்வுரிமைக் கட்சி போராட்டம்

author-image
WebDesk
Mar 14, 2023 16:23 IST
புதுகை, வேங்கைவயலில் குடிநீர் தொட்டியை உடைக்க முயன்ற தமிழக வாழ்வுரிமை கட்சி; 4 பேர் கைது

புதுக்கோட்டை வேங்கைவயலில் குடிநீர் தொட்டி மேல் ஏறி நின்று போராட்டம் நடத்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் (புகைப்படம்- வன்னிகுரல்/ ட்விட்டர்)

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை உடைக்க முயன்ற தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் 4 பேர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர். கடந்த டிசம்பரில் இங்கு, ஆதி திராவிடர் காலனிக்கு குடிநீர் வழங்கும் தொட்டியில் மனித மலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisment

இந்த வழக்கு தொடர்பான விசாரணை குற்றப்பிரிவு-சி.ஐ.டி பிரிவுக்கு மாற்றப்பட்டு மூன்று மாதங்கள் ஆகியும் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. திங்களன்று, குற்றவாளிகளுக்கு எதிராக காவல்துறை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, கட்சிக் கொடியை ஏந்திய நான்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி உறுப்பினர்கள் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் மீது ஏறி, சுத்தியலால் உடைக்க முயன்றனர். மேலும், போலீசார் தொட்டியை இடித்துவிட்டு குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இதையும் படியுங்கள்: தருமபுரி அருகே யானை தாக்கி இளைஞர் மரணம்: காரை பந்தாடிய காட்டு யானைகள்

போராட்டத்திற்கு எதிர்வினையாக, பட்டியல் சாதியினர் ஊருக்குள் வசிக்காத பிற அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களை அழைத்து வந்து போராட்டம் நடத்துவதாகக் குற்றம் சாட்டி பிற சமூகங்களைச் சேர்ந்தவர்கள் தர்ணா நடத்தினர். உடனே போலீசார் அவர்களை சமாதானம் செய்து கூட்டத்தை கலைத்தனர்.

கிராம நிர்வாக அலுவலரின் புகாரின் பேரில், முருகானந்தம் (39), அருள் ஒளி (25), கவியரசன் (35), அஜித்குமார் (25) ஆகியோர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 283 (பொது வழியில் ஆபத்தை ஏற்படுத்துதல் அல்லது இடையூறு விளைவித்தல்) மற்றும் 427 (கேடு விளைவித்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Pudukkottai #Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment