மாற்றத்தை நோக்கி...'வாத்தி கம்மிங்': கோவையை கலக்கும் த.வெ.க-வினரின் போஸ்டர்

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு வரும் 27-ஆம் தேதி நடைபெறவுள்ளதை தொடர்ந்து, கட்சி நிர்வாகிகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக, போஸ்டர் ஒட்டுதல், பேனர் அமைத்தல் ஆகிய பணிகள் அனைத்து மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு வரும் 27-ஆம் தேதி நடைபெறவுள்ளதை தொடர்ந்து, கட்சி நிர்வாகிகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக, போஸ்டர் ஒட்டுதல், பேனர் அமைத்தல் ஆகிய பணிகள் அனைத்து மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
TVK poster

தமிழக வெற்றிக் கழக மாநாடு நடைபெறவுள்ளதை தொடர்ந்து, அனைத்து மாவட்டங்களிலும் அக்கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisment

அக்டோபர் 27-ஆம் தேதி நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலை பகுதியில் நடைபெறவுள்ளது. அரசியல் களத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் நிகழ்வாக இந்த மாநாடு அமைந்துள்ளது.

அதன்பேரில், விழுப்புரம் மட்டுமின்றி தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கட்சி தொண்டர்கள் பணியாற்றி வருகின்றனர். அதனடிப்படையில், கோவை தெற்கு மாவட்ட இளைஞரணி சார்பில், மாஸ்டர் திரைப்படத்தில் இடம்பெற்ற பாடலின் வரிகளைக் கொண்டு வாத்தி Coming என போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

குறிப்பாக, Coming என்ற வார்த்தையில் C மற்றும் M ஆகிய எழுத்துகள் மட்டும் பெரிதாக CM எனக் குறிக்கும் வகையில் இடம்பெற்றுள்ளன. மேலும், மாற்றத்தை நோக்கி முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில் நடைபெறவுள்ளதாகவும் போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டர்கள் அவிநாசி சாலை மேம்பாலம், அண்ணா சிலை உள்ளிட்ட பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளன.

Advertisment
Advertisements

 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Vijay Coimbatore

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: