தமிழக வெற்றிக் கழகம் பொதுக்குழு கூட்டம் - 2026 ல் தமிழகத்தை ஆளப்போறோம் என கோவையில் ஒட்டப்பட்டு உள்ள தமிழக வெற்றி கழக போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டம் வரும் மார்ச் 28 ஆம் தேதி சென்னையில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் மையத்தில் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில் கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், கோவை புறநகர் கிழக்கு மாவட்ட தலைவர் பாபு தலைமையில், பொதுக் குழுவில் கூட போறோம், தளபதி தலைமையில் 2026 - ல் தமிழகத்தை ஆளப்போறோம் என்று கோவை முழுவதும் பொதுக் குழுவுக்கு போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளது.
தளபதி தலைமையில் ஆளப்போறோம் என த.வெ.க வால் ஒட்டப்பட்டு இருக்கும் போஸ்டரால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்