/indian-express-tamil/media/media_files/2025/06/18/visually callenged tvk covai-80cddd59.jpg)
கோவையில் பார்வை மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கையை ஏற்று தினசரி வியாபாரம் செய்ய ஊதுவத்தி, பேனா, கடலை மிட்டாய்கள் போன்ற சிறு பொருட்களை வழங்க த.வெ.க.வினர் உறுதி அளித்துள்ளனர்.
கோவையில் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி,மளிகை பொருட்கள் வழங்கிய த.வெ.க.வினர், அவர்களின் கோரிக்கையை ஏற்று தினசரி வியாபாரம் செய்ய ஊதுவத்தி, பேனா, கடலை மிட்டாய்கள் போன்ற சிறு பொருட்களை வழங்க த.வெ.க.வினர் உறுதி அளித்துள்ளனர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தனது பிறந்த நாளை வரும் 22-தேதி கொண்டாட உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள கட்சி நிர்வாகிகள் பிறந்த நாளை கொண்டாட தயாராகி வருகின்றனர்..
கோவையில் நீண்ட வருடங்களாக விஜய் பிறந்த நாள் விழா நலத்திட்ட உதவிகளை பாபு வழங்கி வருகிறார். ஆட்டோ ஓட்டுநரான இவருக்கு கோவை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்பட்டதால் எழுந்த விமர்சனங்களுக்கு த.வெ.க.தலைவர் விஜய் முற்றுப்புள்ளி வைத்தார்.
இந்நிலையில் தனது அபிமான தலைவர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/06/18/visually callenged tvk covai-80cddd59.jpg)
இதில் வந்த பார்வை மாற்றுத்திறனாளிகளை கனிவுடன் வரவேற்ற த.வெ.க பெண் நிர்வாகிகள், நலத்திட்ட உதவிகளைப் பெற்ற பார்வையற்றவர்களை அழைத்து வந்து நாற்காலியில் அமர வைத்தனர்.
நலத்திட்ட உதவிகளை வழங்குவதோடு மட்டுமல்லாமல் உதவிகளை வழங்கிய த.வெ.க-வினர் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளை அவர்களது வீடுகளுக்கே அழைத்து சென்றனர்.
செய்தி: பி.ரஹ்மான்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.