Advertisment

"அதிகாரத்தில் இல்லாவிட்டால் பா.ஜ.க இருக்கும் இடம் தெரியாமல் போய்விடும்": அண்ணாமலைக்கு த.வெ.க பதிலடி

விஜய் குறித்து அண்ணாமலை கூறியிருக்கும் விமர்சனம், புகழ் வெளிச்சம் தேடும் முயற்சி என தமிழக வெற்றிக் கழக செய்தி தொடர்பாளர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Annamalai and vijay

த.வெ.க தலைவர் விஜய் குறித்து அண்ணாமலை கூறிய கருத்துகள், நீண்ட நாள்களுக்கு பின்னர் அவர் தமிழகம் வந்திருப்பதால் புகழ் வெளிச்சம் தேடும் முயற்சியாக தான் பார்க்கப்படும் என, அக்கட்சி செய்தி தொடர்பாளர் ரமேஷ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Advertisment

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, லண்டனில் தனது படிப்பை முடித்துவிட்டு அண்மையில் தமிழகம் திரும்பினார். அப்போது நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், விஜய்யின் அரசியல் வருகை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், அரசியலில் ஒவ்வொரு நாளும் இயங்கி கொண்டே இருக்க வேண்டும் எனவும், மாநாடுக்கு பின்னர் விஜய் எப்போது வெளியே வந்தார்? எனவும் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தமிழக வெற்றிக் கழக செய்தி தொடர்பாளர் ரமேஷ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "தமிழக வெற்றிக் கழக கொள்கைகள் குறித்து திட்டமிட்டு பரப்பப்படும் பொய் பிரச்சார விளம்பர பேச்சுகள், முற்றிலும் மக்களால் புறக்கணிக்கப்பட்ட கருத்தாகும். 

தமிழக வெற்றிக் கழகம் மதச் சார்பற்ற சமூக நீதி என்ற கொள்கையினை முன்வைத்து பயணிக்கிறது. திராவிடம் மற்றும் தமிழ் தேசியம் என்ற எந்த அடையாளதிற்குள்ளாகவும் சுருங்க விரும்பவில்லை என தலைவர் விஜய் கொள்கை பிரகடன மாநாட்டில் அறிவித்த பின்னரும், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை புரிதல் இன்றி பேசியிருப்பது ஒரு விளம்பர யுத்தியாக, நீண்ட நாள் கழித்து தமிழ்நாடு திரும்பியுள்ள அவருக்கு ஒரு வெளிச்சம் தேடும் முயற்சியாகவே பார்க்கிறோம். 

Advertisment
Advertisement

தமிழக மக்கள் எல்லா வகையிலான உணவையும் உண்பார்களே தவிர, ஒரு காலமும் மதவாதம் எனும் நஞ்சினை உண்ண மாட்டார்கள். ஒன்றிய ஆட்சியில் பாஜக அதிகாரத்தில் இல்லையென்றால் தமிழ் நாட்டில் இவர்கள் இருக்கும் இடம் தெரியாமல் சென்று விடுவார்கள். பன்முக தன்மை கொண்ட தேசத்தில் குறிப்பாக அதனை பெரிதும் போற்றும் தமிழக மக்கள் ஒற்றை உணவு போல "ஒரே மதம், ஒரே மொழி, ஒரே தேர்தல், ஒரே தேர்வு" போன்ற திட்டமிடப்பட்ட பன்முக சிதைவுகளை ஒரு காலமும் அனுமதிக்க மாட்டார்கள்.

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தை தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமர வைத்து அறுசுவை உணவுடன் எங்கள் கொள்கை எதிரியான பாஜகவிற்கும் அரசியல் எதிரியான திமுகவிற்கும் விருந்து வைப்பார்கள்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Annamalai Vijay
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment