Advertisment

விக்கரவாண்டியில் த.வெ.க மாநாடு: அனுமதி கோரி புஸ்ஸி ஆனந்த் மனு

விக்கரவாண்டியில் நடைபெற உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டிற்கு அனுமதி கோரி ஏ.டி.எஸ்.பி திருமாலிடம் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மனு அளித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
TVK State level conference at Vikkaravandi Bussy Anand seeking TN police  permission Tamil News

கடந்த 23 ஆம் தேதி பனையூரில் உள்ள விஜய் கட்சி அலுவலகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுகம் செய்யப்பட்டது. இதேபோல் கட்சிக்கான பாடலும் வெளியிடப்பட்டிருந்தது.

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் நடிகர் விஜய் 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற புதிய கட்சியை கடந்த பிப்ரவரி மாதத்தில் தொடங்கினார். வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் விஜயின் த.வெ.க கட்சி போட்டியிட போவதாக அறிவித்த நிலையில், தொடர்ந்து டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்தில் கட்சியின் பொதுச் செயலாளரான புஸ்ஸி ஆனந்த் கட்சியை பதிவு செய்தார். 

Advertisment

இந்நிலையில், கடந்த 23 ஆம் தேதி பனையூரில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுகம் செய்யப்பட்டது. இதேபோல் கட்சிக்கான பாடலும் வெளியிடப்பட்டிருந்தது. இதன் மூலம், தனது அரசியல் பயணத்தை அதிகாரப்பூர்வமாக தொடங்கி இருக்கிறார் த.வெ.க கட்சித் தலைவர் விஜய். 

இந்நிலையில், விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கரவாண்டியில் நடக்க உள்ளது என்றும், இந்த மாநாடு வருகிற செப்டம்பர் 22 ஆம் தேதி நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியது. இந்த நிலையில், விக்கரவாண்டியில் நடைபெற உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டிற்கு அனுமதி கோரி ஏ.டி.எஸ்.பி திருமாலிடம் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மனு அளித்துள்ளார். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Actor Vijay Tamilaga Vettri Kazhagam Vikravandi Politics
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment