விஜய் பிரச்சாரத்தில் நெரிசல்; தொண்டர்கள் மயக்கம்; மருத்துவமனையில் அனுமதி

த.வெ.க தலைவர் விஜய் கரூரில் மேற்கொண்ட பரப்புரையின் போது, கூட்ட நெரிசலில் சிக்கியவர்கள் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

த.வெ.க தலைவர் விஜய் கரூரில் மேற்கொண்ட பரப்புரையின் போது, கூட்ட நெரிசலில் சிக்கியவர்கள் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

author-image
WebDesk
New Update
TVK Vijay Campaign In Karur  Tamilaga Vettri Kazhagam Vijay Speech people dead suffocating Tamil News

த.வெ.க தலைவர் விஜய் கரூரில் மேற்கொண்ட பரப்புரையின் போது, கூட்ட நெரிசலில் சிக்கியவர்கள் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எதிர்வரும் 2026 சட்டமன்ற தேர்தலை ஒட்டி தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் தனது பரப்புரை தொடங்கி இருக்கிறார். அதன்படி, கடந்த 13 ஆம் தேதி சனிக்கிழமையன்று த.வெ.க தலைவர் விஜய் திருச்சியில் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். அன்று திருச்சியில் தொடங்கி அரியலூரில் பிரச்சாரத்தை நிறைவு செய்தார். கடந்த சனிக்கிழமை நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் பிரச்சாரப் பயணம் மேற்கொண்டார். 

Advertisment

தொடர்ந்து இன்று (செப்.27) நாமக்கல் மற்றும் கரூரில் தனது பரப்புரையை மேற்கொண்டார் விஜய். கரூரில் வேலுசாமிபுரம் பகுதியில் விஜய்யின் பிரசாரம் இரவு 7.20 மணியளவில் தொடங்கிய நிலையில், விஜய் பேச தொடங்கிய சில நிமிடங்களில் பெண்களில் சிலர் மயக்கமடைந்தனர். அப்போது தனது பேச்சை நிறுத்திய விஜய் மயக்கம் அடைந்தவர்களுக்கு தனது வாகனத்தில் இருந்த தண்ணீர் பாட்டில்களை வீசினார் விஜய். இதன்பின்னர் ஆம்புலன்ஸ்கள் வரவைக்கப்பட்டு, அதில் அனுப்பி வைக்கப்பட்டனர். 

விஜய் கரூர் வந்தடைவதற்கு முன்னதாகவும் சிலர் மயக்கம் அடைந்ததாகவும், பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், விஜய் தனது பரப்புரையை நிறைவு செய்த சூழலில்,  கட்டுக்கடங்காத கூட்டம் காரணமாக மூச்சு திணறல் ஏற்பட்ட நிறைய பேர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்னர். 

கரூர் முழுவதும் ஆம்புலன்ஸ் சத்தம் ஒலித்து வரும் நிலையில், விஜய் பரப்புரையில் 2 பேர் மரணம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 5 பேரின் உடல்நிலை மிகவும் மோசகமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுளள்து. 

Advertisment
Advertisements
Karur Vijay

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: