TVK Vijay Campaign Updates: அடிப்படை வசதிகள் இல்லாமல் திருவாரூர் கருவாடாக காய்கிறது - விஜய்

TVK Vijay campaign live updates today: கடந்த வாரம் திருச்சியில் தனது முதல் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய த.வெ.க தலைவர் விஜய் இன்று (செப்.20) நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

TVK Vijay campaign live updates today: கடந்த வாரம் திருச்சியில் தனது முதல் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய த.வெ.க தலைவர் விஜய் இன்று (செப்.20) நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
TVK Vijay campaign in Nagapattinam and Tiruvarur live updates in Tamil

அடிப்படை வசதிகள் இல்லாமல் திருவாரூர் கருவாடாக காய்கிறது - விஜய்

TVK Vijay Rally in nagapattinam & Thiruvarur Live Updates: தமிழகத்தில் வரும் 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும், தங்கள் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளன. அந்த வகையில், புதிய அரசியல் கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய், கடந்த வாரம் திருச்சியில் தனது முதல் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். திருச்சி, அரியலூர் மாவட்டங்களில் கடந்த வாரம் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் பிரச்சாரம் நடைபெற்றது. நேரமின்மை காரணமாக பெரம்பலூரில் பிரச்சாரம் செய்ய முடியாமல் போனது. 

Advertisment

இன்று நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டார். சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி வந்த அவர், அங்கிருந்து சாலை மார்க்கமாக நாகப்பட்டினம் சென்றார். நாகையில் குறித்த நேரத்தில் தனது பிரச்சாரத்தை முடித்துக் கொண்ட பின்னர், திருவாரூர் மாவட்டத்திற்கு வந்தார். திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள மேம்பாலம் பகுதியில் அவருக்கு த.வெ.க. மன்னார்குடி சட்டமன்றத் தொகுதி சார்பில் பாரம்பரிய கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

திருவாரூர் தெற்கு வீதிக்குச் செல்ல சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் பயணித்த போது, ஆயிரக்கணக்கான தொண்டர்களும், ரசிகர்களும் திரண்டதால், அவரது வாகனம் மிக மெதுவாகவே சென்றது. மாலை 4 மணியளவில் தெற்கு வீதிக்கு வருகை தந்த விஜய்க்கு, கிரேன் மூலம் பிரம்மாண்டமான மாலை அணிவிக்கப்பட்டது.

இந்த பிரச்சாரத்தின்போது பொதுமக்கள், அரசு, தனியார் கட்டிடங்கள், சுவர்கள், மரங்கள், மின்விளக்கு கம்பங்கள், வாகனங்கள், கொடி கம்பங்கள், சிலைகள் இருந்தால் அதன் அருகில் செல்ல வேண்டாம் என்றும்,  கர்ப்பிணிகள், கைக்குழந்தையுடன் இருக்கும் பெண்கள், முதியோர்கள், பள்ளி சிறுவர்கள், மாற்றுத்திறனாளிகள் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதை தவிர்க்க வேண்டும் எனறும் காவல்துறை அறிவுறுததலின்படி நடந்துகொள்ள வேண்டும் என்றும் கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisment
Advertisements
  • Sep 20, 2025 21:56 IST

    சைபர் தாக்குதல்: ஐரோப்பிய நாடுகளில் விமான சேவை பாதிப்பு

    ஐரோப்பிய நாடுகளின் விமான நிலையங்களில் சேவை அளிக்கும் நிறுவனத்தை குறி வைத்து சைபர் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் லண்டன், பிரஸல்ஸ், பெர்லின் விமான நிலையங்களில் பயணிகள் சேவை முற்றிலும் முடங்கியது. இந்த விமான நிலையங்களில் இருந்து விமானங்கள் புறப்படுவது, தரை இறங்குவது உள்ளிட்ட சேவைகள் பாதிக்கப்பட்டதால் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். 



  • Sep 20, 2025 21:22 IST

    நடிகர் மோகன்லாலுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

    பிரபல மலையால நடிகரும், 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவருமான மோகன்லாலுக்கு சினிமா துறையின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது வழங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், மோகன்லாலுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். “"திறமை மற்றும் நடிப்பில் பன்முகத் தன்மையின் ஓர் அடையாளம்தான் மோகன்லால். பல்லாண்டுகால தனித்துவமான கலைப் பயணத்தின் மூலம், கேரள கலாசாரத்தில் ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் மலையாள சினிமா மற்றும் நாடகத்தில் முக்கிய நபராக திகழ்கிறார். தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் ஹிந்தி படங்களிலும் அவரின் சிறந்த நடிப்பை வழங்கியுள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார்.



  • Sep 20, 2025 20:48 IST

    பா.ஜ.க. கொள்கை எதிரி; காங். கொள்கை நண்பனா?- சீமான்

    பா.ஜ.க. உனக்கு கொள்கை எதிரினா அப்போ காங்கிரஸ் கொள்கை நண்பனா? என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், விஜயிடம் கேள்வி எழுப்பி உள்ளார். பெரம்பலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தி.மு.க. அரசியல் எதிரினு விஜய் சொல்றார்? கொள்கைக்கும் அரசியலுக்கும் என்ன வேறுபாடுனு கேட்டா அவருக்குச் சொல்ல தெரியல? என்றார்.



  • Sep 20, 2025 20:38 IST

    செப்.23ல் ராமதாஸ் தரப்பு பா.ம.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

    செப்.23ல் பாமக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக ராமதாஸ் சார்பில் அன்பழகன் அறிவிக்கப்பட்டுள்ளது. செப்.24ல் வன்னியர் சங்கம் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. செப்.23 மற்றும் 24ம் தேதி இரண்டு கூட்டங்களும் தைலாபுரத்தில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.



  • Sep 20, 2025 20:36 IST

    விஜய் கமிஷன் குற்றச்சாட்டு - பூண்டி கலைவாணன் பதில்

    40 கிலோவுக்கு 40 ரூபாய் எல்லாம் கிடையாது. சும்மா ஏதோ வாங்குறாங்க. இல்லையென்று நான் சொல்லல. விவசாயிகள் விருப்பப்பட்டு கொடுப்பதுதானே தவிர, அது கட்டாயம் கிடையாது; அதேநேரத்தில் லோடு மேன் வாங்குவதற்கும் முதலமைச்சருக்கும் சம்பந்தம் உண்டா? நெல் கொள்முதல் நிலையங்களில் 40 கிலோ மூட்டைக்கு ரூ.40 கமிஷன் வாங்குவதாக விஜய் குற்றஞ்சாட்டிய நிலையில், திருவாரூர் திமுக எம்.எல்.ஏ. பூண்டி கலைவாணன் விளக்கமளித்துள்ளார்.



  • Sep 20, 2025 20:34 IST

    சீமான், விஜய்க்கான இலக்கை பா.ஜ.க நிர்ணயிக்கிறது- வன்னி அரசு

    சீமான், விஜய்க்கான இலக்கை பா.ஜ.க. நிர்ணயிக்கிறது என்று வி.சி.க. துணை பொதுச் செயலாளர் வன்னி அரசு கூறி உள்ளார். நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக எதிர்ப்பை முன்னிறுத்துகின்ற கட்சிகளை களத்தில் பாஜக இறக்கிவிடுவதாகவும், அதில் விஜய் தலைமையிலான த.வெ.கவும், சீமான் தலைமையிலான நாதகவும் தான் என்றார்.



  • Sep 20, 2025 20:12 IST

    கண்ட கேள்விக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது- டி.ஆர்.பி.ராஜா

    வெளிநாட்டு முதலீடா இல்லை வெளிநாட்டில் முதலீடா என த.வெ.க. தலைவர் விஜய் முதலமைச்சரை பார்த்து விமர்சனம் செய்தது குறித்து அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த டி.ஆர்.பி. ராஜா, சும்மா கண்ட கேள்விக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது. ஆரோக்கியமான கேள்வி கேளுங்கள். பதில் சொல்கிறேன்” என்றார்.



  • Sep 20, 2025 19:57 IST

    "இந்தியா போர் தொடுத்தால் சவூதி அரேபியா ஆதரவளிக்கும்"

    இந்தியா போர் தொடுத்தால் தங்களுக்கு சவூதி அரேபியா பாதுகாப்பு அளிக்கும் என பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் கவாஜா ஆசிப் தகவல் தெரிவித்துள்ளார். அனைத்து ராணுவ நடவடிக்கைகளையும் உள்ளடக்கிய விரிவான தற்காப்பு ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



  • Sep 20, 2025 19:42 IST

    "பா.ஜ.க.வை தடுக்கும் ஆற்றல் திமுகவிடம் மட்டுமே உள்ளது"

    அனுபவம், கொள்கை வலிமையுடன் பாஜகவை தடுத்து நிறுத்தும் ஆற்றல் திமுகவிடம் மட்டுமே உள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்கள். பல்வேறு தரப்பிலிருந்தும் தன்னிடம் கேட்கப்பட்ட கேள்விகள் சிலவற்றை பட்டியலிட்டு அவற்றுக்கு விளக்கமளித்து தமது எக்ஸ் தளப் பக்கத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று விடியோ பதிவிட்டுள்ளார். அதில்; அதிமுக - பாஜக கூட்டணிக்கு உள்ளேயே பல குழப்பங்கள் உள்ளன. கல்வி நிதி மறுப்பு, இந்தி திணிப்பு, கீழடி அறிக்கை போன்றவற்றை மக்களிடம் எடுத்துக்கூறுவதால் திமுகவை பாஜக குறிவைக்கிறது. பாஜகவை எதிர்க்கும் ஆற்றல் திமுகவுக்கு மட்டுமே உள்ளது என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு நன்கு தெரியும் என்றார்.



  • Sep 20, 2025 19:36 IST

    20 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

    தமிழகத்தில் 20 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், தூத்துக்குடி, விருதுநகர், சிவகங்கை, கரூர், திண்டுக்கல், நாமக்கல், திருச்சி, ஈரோடு, திருப்பூர், சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • Sep 20, 2025 19:32 IST

    "தீர்வுகளை நோக்கி பயணிப்பதுதான் த.வெ.கவின் லட்சியம்"

    உங்களுக்கு 40க்கு 40 என்றால் தேர்தல் முடிவாக இருக்கலாம் ஆனால் விவசாயிகளுக்கு 40க்கு 40 என்றால் விவசாயிகள் வயிற்றில் அடித்த கமிஷன். ஏழ்மை, வருமை, ஊழல், குடும்ப ஆதிக்கம் இல்லாத தமிழகம் என்பதே தவெகவின் இலக்கு என்றார் விஜய்.

     



  • Sep 20, 2025 19:10 IST

    தனுஷின் ''இட்லி கடை'' பட டிரெய்லர் வெளியானது

    தனுஷ் நடித்துள்ள ''இட்லி கடை'' படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. தனுஷ் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படம் இட்லி கடை. தனுஷே இயக்கி நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இத்திரைப்படத்தில் ராஜ்கிரண், நித்யா மேனன், அருண் விஜய், சத்யராஜ், பார்த்திபன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் 1ம் தேதி வெளியாக இருக்கிறது.



  • Sep 20, 2025 18:52 IST

    திருவாரூரில் அடிப்படை சாலை வசதிகூட இல்லை: விஜய்

    முதல்வர் அப்பா பிறந்த திருவாரூரில் அடிப்படை சாலை வசதிகூட இல்லை என்று விஜய் குற்றஞ்சாட்டி உள்ளார். நாகை போன்றே திருவாரூரில் அதிக குடிசை பகுதிகள் உள்ளன. திருவாரூர் பல்கலைக் கழகத்தில் அனைத்து துறைகளும் இல்லை. மருத்துவ கல்லூரியில் உபகரணங்கள் வேலை செய்யவில்லை. திருவாரூர் பேருந்து நிலையத்திற்கு தேசிய நெடுஞ்சாலையில் இருந்து ஒரு சாலை இல்லை. இந்த மாவட்ட அமைச்சர் (டி.ஆர்.பி.ராஜா) முதலமைச்சர் குடும்பத்திற்கு சேவை செய்கிறார். மக்கள்தான் முக்கியம் என்று அமைச்சருக்கு புரிய வைக்க வேண்டும். உங்களுடன் ஸ்டாலின் என்றால் உங்கள் குடும்பத்திற்கு மட்டும்தான் என்று கூறவேண்டும். ஏனென்றால் நீங்கள் மக்களுடன் இல்லை என்றார் விஜய்.



  • Sep 20, 2025 18:46 IST

    ''திட்டங்களுக்கு கருணாநிதி பெயர் வைத்தால் போதுமா?''

    தி.மு.க. தலைவரின் சொந்த மாவட்டமான திருவாரூரில் அடிப்படை சாலை வசதிகள் கூட இல்லை என்றும், திட்டங்களுக்கு கருணாநிதியின் பெயர் வைத்தால் மட்டும் போதாது, பேனா வைத்தால் மட்டும் போதாது, அதை செயல்படுத்துவது அவசியம் என்றும் விஜய் கூறினார்.



  • Sep 20, 2025 18:45 IST

    நடிகர் மோகன் லாலுக்கு தாதாசாகேப் பால்லே விருது

    மலையாள நடிகர் மோகன் லாலுக்கு, 2023ம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது அறிவித்தது மத்திய அரசு. செப்.23ம் தேதி நடைபெறும் 71வது தேசிய விருதுகள் விழாவில், இவ்விருது அவருக்கு வழங்கப்படுகிறது.



  • Sep 20, 2025 18:29 IST

    அசையாமல் அப்படியே நிப்பாட்டிட்டார் - விஜய்

    ரொம்ப நாளா ஓடாமல் இருந்த இந்த திருவாரூர் தேரை, ஓட்டினது நான்தான் என்று மார்த் தட்டிச் சொன்னது யாரு என்று உங்களுக்குத் தெரியும். ஆனால் அவருடைய மகன் மாண்புமிகு சிஎம்.. இப்போ என்ன செய்றாங்க? நல்லா ஓடவேண்டிய தமிழ்நாடு என்ற தேரை நாலாப்பக்கமும் கட்டைப்போட்டு அசையாமல் அப்படியே நிப்பாட்டிட்டார். இதை பெருமையாகவும், சவாலாகவும் சொல்லிக் கொள்கிறார் - விஜய்



  • Sep 20, 2025 18:26 IST

    திருவாரூர் கருவாடாக காய்கிறது - விஜய் குற்றச்சாட்டு

    உங்களுடன் ஸ்டாலின் என உங்கள் குடும்பத்தினரிடம் தான் சொல்ல முடியும்; மக்களிடம் அல்ல.  திருவாரூர் மாவட்டம்தான் அவங்களுடைய சொந்த மாவட்டம் என பெருமையாக சொல்லிக் கொள்கிறார்கள். ஆனால் இங்கு திருவாரூர் கருவாடாக காய்கிறது; அதை கண்டுகொள்வதில்லை - விஜய்



  • Sep 20, 2025 18:25 IST

    பச்சைத் துண்டுடன் தொண்டர்களை சந்திக்கிறார் விஜய்

    திருவாரூரில் விவசாயிகளைக் குறிக்கும் பச்சைத் துண்டுடன் தொண்டர்களை சந்திக்கிறார் விஜய்.



  • Sep 20, 2025 17:56 IST

    தொண்டர் அன்பாக கொடுத்த கூலிங் கிளாஸை போட்டுக் கொண்ட விஜய்

    திருவாரூர் பரப்புரையில் தொண்டர் அன்பாக கொடுத்த கூலிங் கிளாஸை விஜய் போட்டுக் கொண்டார். அப்போது திடீரென மற்றொரு தொண்டர் தவெக கொடியை விஜய்யின் மீது வீசினார்.



  • Sep 20, 2025 17:42 IST

    ஆரத்தி எடுத்த பெண்ணுக்கு 500 ரூபாய் விஜய்

    திருவாரூரில் ஆரத்தி எடுத்து வரவேற்ற பெண்ணுக்கு விஜய், 500 ரூபாய் பணம் கொடுத்து தனது நன்றியைத் தெரிவித்தார்.

    Video: Puthiya Thalaimurai



  • Sep 20, 2025 17:18 IST

    மயங்கி விழுந்த தவெக தொண்டர்

    திருவாரூரில் தவெக தலைவர் விஜயை காண காத்திருந்த தொண்டர்களில் ஒருவர் வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். உடல் நலம் பாதிக்கப்பட்ட தொண்டரை தவெகவினர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.



  • Sep 20, 2025 17:17 IST

    நகை திருட்டு

    நாகையில் நடந்த விஜய்யின் பரப்புரைக் கூட்டத்திற்கு வந்திருந்த ஒரு பெண்ணிடம், 4 சவரன் நகை திருடு போனது. கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி மர்ம நபர்கள் இந்தப் பெண்ணின் நகையைத் திருடியுள்ளனர்



  • Sep 20, 2025 16:56 IST

    திருவாரூர் வந்தடைந்த விஜய் - கிரேன் மூலம் விஜய்க்கு மாலை

    திருவாரூருக்கு வருகை தந்த விஜய், அங்கு கூடியிருந்த பொதுமக்கள் மற்றும் தொண்டர்களால் உற்சாகமாக வரவேற்கப்பட்டார். அவருக்கு கிரேன் மூலம் பெரிய மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    Video credit: Puthiya Thalaimurai 



  • Sep 20, 2025 16:35 IST

    குழந்தைக்கு மாலை அணிவித்த விஜய்

    திருவாரூர் தெற்கு வீதியில் பரப்புரை மேற்கொள்ளும் விஜய் அங்கிருந்த ஒரு குழந்தைக்கு மாலை அணிவித்து தனது அன்பை வெளிப்படுத்தினார்.

    Video: Puthiya Thalaimurai 



  • Sep 20, 2025 16:28 IST

    தொண்டர்கள் நெரிசலால் இடிந்து விழுந்த சுற்றுச்சுவர்

    நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்துக்குச் சொந்தமான ஒரு மண்டபத்தின் சுற்றுச்சுவர், விஜய் பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக இடிந்து விழுந்தது. இந்த நிகழ்வின்போது எந்தவிதமான உயிர்ச் சேதமும் ஏற்படவில்லை.



  • Sep 20, 2025 16:11 IST

    தெற்கு வீதியில் காத்திருக்கும் தொண்டர்கள்

    விஜய் வருகைக்காக திருவாரூர் தெற்கு வீதியில் தொண்டர்கள், பொதுமக்கள் பல மணி நேரமாக காத்திருக்கின்றனர். 



  • Sep 20, 2025 15:34 IST

    திருவாரூர் வந்தடைந்த த.வெ.க. தலைவர் விஜய்

    நாகை பரப்புரையை முடித்துக் கொண்டு திருவாரூர் வந்தடைந்தார் த.வெ.க. தலைவர் விஜய்.



  • Sep 20, 2025 14:39 IST

    நாகையில் பரப்புரையை நிறைவு செய்த விஜய்

    த.வெ.க தலைவர் விஜய் நாகையில் பரப்புரை மேற்கொண்ட நிலையில் அதனை நிறைவு செய்தார்.



  • Sep 20, 2025 14:35 IST

    2026-ல் தி.மு.க - த.வெ.க இடையே மட்டும்தான் போட்டியே - விஜய்

    2026-இல் தி.மு.க - த.வெ.க இடையே மட்டும்தான் போட்டியே. இந்த பூச்சாண்டி வேலைகள் காட்டுவதை விட்டுவிட்டு தில்லா, கெத்தா தேர்தலை சந்திக்க வாங்க சார். கொள்கையை பெயருக்கு மட்டும் வைத்துக் கொண்டு, தமிழ்நாட்டை கொள்ளையடிக்கும் நீங்களா? இல்லை தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டின் உள்ளும் இருக்கும் நானா..? என பார்த்துவிடலாம் சார்



  • Sep 20, 2025 14:30 IST

    அடக்குமுறை, அராஜக அரசியல் வேணாம் சார் - த.வெ.க தலைவர் விஜய்

    என்ன நாங்கள் பெரிதாக கேட்டுவிட்டோம். மக்கள் நின்று நிம்மதியாக பார்ப்பதற்கு ஒரு இடத்தை தேர்வு செய்து அதற்கு அனுமதி கேட்கிறோம். ஆனால், நீங்கள் அந்த இடத்தை எல்லாம் விட்டு விட்டு மக்கள் நெருக்கடியோடு நிற்கும் இடங்களை தேர்ந்தெடுத்து தருகிறீர்கள். உங்கள் எண்ணம் தான் என்ன? ஒரு அரசியல் தலைவனாக இல்லாமல் சாதாரண மனிதனாக என் மக்களை, என் சொந்தத்தை பார்க்க சென்றால் என்ன செய்வீர்கள். அப்பவும் தடை போடுவீர்களா. அடக்குமுறை அராஜக அரசியல் எல்லாம் வேண்டாம் சார். நான் தனியாள் இல்லை சார் மாபெரும் மக்கள் சக்தியின் பிரதிநிதிகள் சார்.



  • Sep 20, 2025 14:19 IST

    சொந்த குடும்பத்தின் வளர்ச்சி தான் தி.மு.க-விற்கு முக்கியம்!

    கடலோர கிராமங்களை மீன் அரிப்பில் இருந்து பாதுகாக்கும் அலையாத்தி காடுகளை அழிப்பதை தடுத்து நிறுத்தி அதற்கு ஒரு வழி பண்ண வேண்டிய அரசாங்கத்திற்கு இதைவிட முக்கியமான ஒரு வேலை இருக்கிறது. அது என்ன தெரியுமா? சொந்த குடும்பத்தின் வளர்ச்சியும், சுயநலமும் தான் அந்த முக்கியமான வேலை



  • Sep 20, 2025 14:14 IST

    சனிக்கிழமை பிரசாரம் ஏன்..? த.வெ.க தலைவர் விஜய் பதிலடி

    மக்களை வந்து சந்திக்கும் பொழுது மக்களுக்கு எந்தவித அசவுகரியமும் இருந்துவிட கூடாது. முக்கியமாக மக்களின் வேலைகளுக்கு எந்தவித அசவுகரியமும் இருந்துவிட கூடாது என்ற காரணத்திற்காக தான் லீவு நாட்கள் மற்றும் ஓய்வு நாட்களில் வருகிறோம். 

    அதுமட்டுமல்லாமல், அரசியலில் சில பேருக்கு நம் ஓய்வு கொடுக்க வேண்டும் இல்லையா. அதனால் தான் இந்த நாட்களை தேர்ந்தெடுத்தோம். 



  • Sep 20, 2025 14:06 IST

    மீனவர்களை பிரித்து பார்க்கும் பாசிச பாஜக... விஜய் விமர்சனம்!

    மீனவர்களின் உயிர் எந்த அளவிற்கு முக்கியமோ ஈழத்தமிழர்களின் கனவுகளும், வாழ்க்கையும் ரொம்ப முக்கியம். மீனவர்கள் படும் கஷ்டங்களை பார்த்து கடிதம் எழுதிவிட்டு கப்சிப் என்று செல்வதற்கு த.வெ.க., கபட நாடகமாடும் திமுக அரசு கிடையாது.

    மற்ற மீனவர்கள் என்றால் இந்திய மீனவர்கள், நாம் மீனவர்கள் என்றால் தமிழக மீனவர்கள். இப்படி பிரித்து பேசும் அளவிற்கு த.வெ.க, பாசிச பாஜக அரசும் கிடையாது. பிரச்சனைகளுக்கு தீர்வு கொண்டு வருவதுதான் முக்கிய நோக்கம்.



  • Sep 20, 2025 14:05 IST

    அரசியல்வாதிகள் ஆண்டது பத்தாதா? - விஜய் கேள்வி 

    நாகையில் விஜய் பேசுகையில், "நாகூர் ஆண்டவர், நெல்லுக்கடை மாரியம்மன், அன்னை வேளாங்கண்ணி ஆசி பெற்ற மண் நாகை. மீன் ஏற்றுமதியில் நாகை 2ஆம் இடம்; மீனவர் நண்பனாக வந்துள்ளேன். கப்பலில் இருந்து வந்த பொருட்களை விற்க அந்தக் காலத்தில் நாகையில் அந்திக்கடைகள் இருப்பது கேள்விப்பட்டேன். மீன்பிடி, விவசாயம் என அனைத்து பக்கமும் உழைக்கும் மக்கள் வாழும் ஊர் நாகப்பட்டினம். மத வேறுபாடு இல்லாமல், அனைவருக்கும் பிடித்துபோன, மதச்சார்பற்ற வாழ்வை கடைபிடிக்கும் மக்கள் நாகை மக்கள். அடுக்கு மொழியில் பேசும் அரசியல்வாதிகளின் பேச்சைக் கேட்டு காதில் ரத்தம் தான் வருகிறது. இந்த அரசியல்வாதிகள் ஆண்டது பத்தாதா?" எனக் கேள்வி எழுப்பினார். 



  • Sep 20, 2025 13:58 IST

    மோடி வந்தால் இவ்வளவு கட்டுப்பாடு விதிப்பீர்களா? - நாகையில் விஜய் கேள்வி 

    தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று நாகை, திருவாரூர் மாவட்டத்திற்கு வருகை தந்து உரையாற்றுகிறார். அந்த வகையில், நாகை பேசிய விஜய், "ஒரு ஆர்.எஸ்.எஸ் தலைவர் அல்லது பிரதமர் மோடி வந்தால் இவ்வளவு கட்டுப்பாடு விதிப்பீர்களா? கரண்ட் கட் பண்ணுவீங்களா? பேசுற வயர கட் பண்ணுவீங்களா? பண்ணித்தான் பாருங்களேன். நீங்கதான் மறைமுக உறவில் இருக்கீங்களே? எனக்கு மட்டும் அங்க கூட்டம் போடாத... இந்த கூட்டம் போடாத... கைய தூக்காத... என ஏகப்பட்ட கட்டுப்பாடு. என்னை மிரட்டி பாக்குறீங்களா? அதுக்கு இந்த விஜய் ஆள் இல்லை சி.எம் சார்." என்று கூறினார். 



  • Sep 20, 2025 13:55 IST

    வெளிநாட்டு முதலீடா? வெளிநாட்டுல முதலீடா? ஸ்டாலினுக்கு விஜய் கேள்வி

    தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று நாகை, திருவாரூர் மாவட்டத்திற்கு வருகை தந்து உரையாற்றுகிறார். அந்த வகையில், நாகை பேசிய விஜய், "வெளிநாட்டு முதலீடா? வெளிநாட்டுல முதலீடா? வெளிநாட்டு முதலீடு இங்க வருகிறதா? உங்கள் குடும்ப முதலீடு வெளிநாட்டுக்கு போகிறதா?" என்று முதல்வர்  ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பியுள்ளார். 



  • Sep 20, 2025 13:55 IST

    அனல் பறக்கும் விஜய் பிரச்சாரம்

    அண்ணா, பெரியாருக்கு வணக்கம்; என் மனதுக்கு மிகவும் நெருக்கமான நாகை மண்ணில் இருக்கிறேன்" என்று நாகையில் தவெக தலைவர் விஜய் பரப்புரை செய்யத் தொடங்கினர். 



  • Sep 20, 2025 13:45 IST

    நாகப்பட்டினத்தில் விஜய் - ட்ரோன் காட்சிகள் 

    2026 சட்டமன்ற தேர்தலை ஒட்டி தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று நாகை, திருவாரூர் மாவட்டத்திற்கு வருகை தந்து உரையாற்றுகிறார். அந்த வகையில், சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானம் வழியாக வந்த விஜய், திருச்சியில் இருந்து நாகை, திருவாரூர் மாவட்டத்துக்கு சாலை மார்க்கமாக காரில் புறப்பட்டார். முதலில் நாகையிலும் பின்னர் திருவாரூரில் பிற்பகல் 3 மணிக்கு மேல் அவர் உரையாற்ற இருக்கிறார். தற்போது பிரச்சார வாகனம் நாகப்பட்டிணம் நகரை அடைந்த நிலையில், அது தொடர்பான ட்ரோன் காட்சிகள் வெளியாகியுள்ளது. 



  • Sep 20, 2025 13:06 IST

    த.வெ.க தலைவர் விஜய்யின் பயணத்திட்டம்

    தஞ்சாவூர் - திருவாரூர் பைபாஸ் வழியாக முதலில் கானூர் வரும் விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து, பைபாஸ் சாலையில் பயணித்து நாகை, புத்தூர் அண்ணா சிலை பகுதியில் மக்களிடம் பேசுகிறார். கீழ்வேளூர் வழியாக பயணித்து தெற்கு வீதியில் மக்கள் மத்தியில் உரையாற்றுவார் விஜய்



  • Sep 20, 2025 12:47 IST

     நாகப்பட்டிணம் நகரை அடைந்த விஜய் 

    2026 சட்டமன்ற தேர்தலை ஒட்டி தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று நாகை, திருவாரூர் மாவட்டத்திற்கு வருகை தந்து உரையாற்றுகிறார். அந்த வகையில், சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானம் வழியாக வந்த விஜய், திருச்சியில் இருந்து நாகை, திருவாரூர் மாவட்டத்துக்கு சாலை மார்க்கமாக காரில் புறப்பட்டார். முதலில் நாகையிலும் பின்னர் திருவாரூரில் பிற்பகல் 3 மணிக்கு மேல் அவர் உரையாற்ற இருக்கிறார். 

    தற்போது விஜயின் பிரச்சார வாகனம் நாகப்பட்டிணம் நகரை அடைந்துள்ள நிலையில், அவர் பேச அனுமதி வழங்கப்பட்டுள்ள புத்தூர் ரவுண்டானா பகுதியை வந்தடைந்துள்ளார். இதையடுத்து, அப்பகுதியில் த.வெ.க தொண்டர்கள், விஜயின் ரசிகர்கள் என ஏராளமானோர் அலைகடலென திரண்டுள்ளனர். அருகில் அமைந்துள்ள வீடுகள், கட்டிடங்கள் மீது அமர்ந்தும், ஏறியும் விஜய் உரையை கேட்க ஆவலாக காத்திருக்கிறார்கள். 



  • Sep 20, 2025 12:41 IST

    நாகை மண்ணில் விஜய் - பரப்புரையில் பேச போவது என்ன?

    2026 சட்டமன்ற தேர்தலை ஒட்டி தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று நாகை, திருவாரூர் மாவட்டத்திற்கு வருகை தந்து உரையாற்றுகிறார். அந்த வகையில், சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானம் வழியாக வந்த விஜய், திருச்சியில் இருந்து நாகை, திருவாரூர் மாவட்டத்துக்கு சாலை மார்க்கமாக காரில் புறப்பட்டார். 

    திருவாரூரில் பிற்பகல் 3 மணிக்கு மேல் அவர் உரையாற்றும் நிலையில், தற்போது திருவாரூரை கடந்த நாகை மாவட்ட எல்லையில் நுழைந்து விஜய் பேசும் இடத்தை நோக்கி பிரச்சார வாகனம் நகர்ந்து வருகிறது. அவரைப் பார்க்க மாவட்டம் முழுவதில் இருந்து ஏராளமான மக்கள் குவிந்து வருகிறார்கள். 

    பரப்புரையில் பேச போவது என்ன? 

    இந்நிலையில், நாகை வந்துள்ள விஜய் என்ன பேசுவார் என்பது அரசியல் ஆர்வலர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய் கடந்த 2011 நாகையில் மீனவர்களுக்காக தனது மன்றம் மூலம் போராட்டம் நடத்தி இருந்தார். தற்போது 14 ஆண்டுகள் கழித்து நாகை வந்துள்ள விஜய் மீனவர்கள் பிரச்சனைகள் குறித்தும், நாகை மீனவர்களுக்கு தொடர்ந்து இலங்கை கடற்படை செய்து வரும் கொடுமைகள், கச்சத்தீவு பிரச்சனை உள்ளிட்டவற்றை பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 



  • Sep 20, 2025 12:27 IST

    நாகை வருகை தந்த விஜய் - அலைகடலென திரளும் ரசிகர்கள் 

    2026 சட்டமன்ற தேர்தலை ஒட்டி தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று நாகை, திருவாரூர் மாவட்டத்திற்கு வருகை தந்து உரையாற்றுகிறார். அந்த வகையில், சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானம் வழியாக வந்த விஜய், திருச்சியில் இருந்து நாகை, திருவாரூர் மாவட்டத்துக்கு சாலை மார்க்கமாக காரில் புறப்பட்டார். திருவாரூரில் பிற்பகல் 3 மணிக்கு மேல் அவர் உரையாற்றும் நிலையில், தற்போது திருவாரூரை கடந்த நாகை மாவட்ட எல்லையில் நுழைந்து விஜய் பேசும் இடத்தை நோக்கி பிரச்சார வாகனம் நகர்ந்து வருகிறது. அவரைப் பார்க்க மாவட்டம் முழுவதில் இருந்து ஏராளமான மக்கள் குவிந்து வருகிறார்கள். 



  • Sep 20, 2025 12:01 IST

    வழிநெடுக தவெக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

    கடந்த முறை பரப்புரைக்கு விஜய் வந்த வழியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில், இம்முறை திட்டமிட்டபடி பயணம் தொண்டர்கள், மக்களின் உற்சாக வரவேற்புக்கு மத்தியில், வாஞ்சூரை நோக்கி வரும் விஜயின் பரப்புரை வாகனத்திற்கு வழிநெடுகிலும் தவெக தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றுள்ளனர். 



  • Sep 20, 2025 11:59 IST

    போஸ்டர்கள் கிழித்த தவெக உறுப்பினர்கள்

    பரப்புரைக்காக தவெக தலைவர் விஜய் இன்று திருவாரூர் செல்லவுள்ள நிலையில், அங்கு அவருக்கு எதிராக ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களை கிழித்து வருகின்றனர் தவெக-வினர்



  • Sep 20, 2025 11:27 IST

    சற்றுநேரத்தில் விஜய் பரப்புரை

    தவக தலைவர் விஜய் சுற்று நேரத்தில் நாகையில் தேர்தல் பரப்புரையை தொடங்க உள்ளார். காரில் வந்த விஜய் திருமாரனை கடந்ததும் பரப்புரை வாகனத்தில் ஏறி பயணம் மேற்கொண்டுள்ளார்.



  • Sep 20, 2025 11:26 IST

    விஜய் பரப்புரை - நாகையில் மின்தடை

    தவக மாவட்டச் செயலாளர் சுகுமாரன் கோரிக்கையை ஏற்று விஜய் பார்ப்பை செய்யும் நேரத்தில் நாகையின் புத்தார் அண்ணா சிலை ஒளிரட்ட பல்வேறு இடங்களில் இன்று மின்தடை



  • Sep 20, 2025 10:36 IST

    காரில் புறப்பட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்

    திருச்சியிலிருந்து நாகைக்கு சாலை மார்க்கமாக காரில் புறப்பட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்; விமான நிலையத்துக்குள் தொண்டர்கள் யாரும் அனுமதிக்கப்படாத நிலையில், வழியிலும் தொண்டர்கள், மக்கள், ரசிகர்கள் என யாரும் பின்தொடர வேண்டாம் என கட்சித்தலைமை அறிவுறுத்தியுள்ளது.



  • Sep 20, 2025 10:36 IST

    என்.ஆனந்த் ஆய்வு மேற்கொண்டுள்ளார்

    நாகையில் தவெக தலைவர் விஜய் பரப்புரை நடக்க உள்ள இடத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் ஆய்வு மேற்கொண்டுள்ளார்; கடந்த முறை விஜய் பேசியபோது ஏற்பட்ட பிரச்னைகள், இம்முறை ஏற்படாமல் இருக்க தொண்டர்களுடன் களத்தில் ஆய்வு செய்துள்ளார். 



  • Sep 20, 2025 09:50 IST

    நாகை பிரச்சாரம் - திருச்சி வந்தடைந்தார் விஜய்

    தனி விமானத்தில் திருச்சி வந்தடைந்தார்  தவெக தலைவர் விஜய்; திருச்சி, தஞ்சை, திருவாரூர் வழியாக நாகை செல்கிறார். காலை 11 மணிக்கு நாகை புத்தூர்
    பகுதியில் விஜய் மக்கள் சந்திக்க உள்ளார்.



  • Sep 20, 2025 09:31 IST

    திருச்சி புறப்பட்டார் விஜய்

    சென்னையில் இருந்து தனி விமானத்தில் திருச்சி புறப்பட்டார் த.வெ.க. தலைவர் விஜய். 



Thalapathy Vijay TVK

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: