TVK Vijay rally Stampede in Tamil Nadu Highlights: கரூர் துயரம்: உடல்கள் ஒப்படைப்பு

TVK Vijay campaign Stampede live updates today: கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் இன்று (சனிக்கிழமை) பிரசாரம் மேற்கொள்ள 11 நிபந்தனைகளுடன் போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர். இதேபோல் நாமக்கல்லிலும் இன்று விஜய் பிரசாரம் மேற்கொள்கிறார்.

TVK Vijay campaign Stampede live updates today: கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் இன்று (சனிக்கிழமை) பிரசாரம் மேற்கொள்ள 11 நிபந்தனைகளுடன் போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர். இதேபோல் நாமக்கல்லிலும் இன்று விஜய் பிரசாரம் மேற்கொள்கிறார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
TVK Vijay Campaign Stampede Live Updates:

TVK Vijay campaign Stampede in Karur Live Updates

TVK Vijay rally stampede Live updates: த.வெ.க. தலைவர் விஜய் தமிழகத்தில் இன்று சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் மேற்கொண்டார். அவர் இன்று நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் மேற்கொண்டார். அதன்படி இன்று கரூர்-ஈரோடு சாலை வேலுச்சாமிபுரத்தில் விஜய் பிரசாரம் மேற்கொண்டார். கரூர் மாவட்ட போலீஸ் தரப்பில் பல்வேறு நிபந்தனைகளுடன் விஜய் பிரசாரம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது.

Advertisment

பிரச்சாரம் முடிவடைந்த நிலையில் கரூர் வேலுச்சாமிபுரத்தில் கூட்டத்தில் பலர் மயங்கி விழுந்தனர். இதில் பெண்களும் சிறுவர்களும் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போதையை தகவலின்படி 31 பேர் உயிரிழந்துள்ளதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மயக்கமடைந்தவர்களை உடனடியாக ஆம்புலன்சில் அழைத்து சென்று கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கரூரில் உள்ள அனைத்து ஆம்புலன்ஸ் வாகனங்களும், மயக்கமுற்ற நபர்களை ஏற்றிச் செல்வதற்காக வேலுச்சாமிபுரத்திற்கு வந்தவண்ணம் உள்ளன. மேலும் திருச்சியில் இருந்து மருத்துவக்குழுவினர் கரூர் மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர். 

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க க்ளிக் செய்யவும்

மேலும் பரப்புரையில் பலர் மயக்கமடைந்த நிலையில் 9 வயது சிறுமி ஒருவரை காணவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கரூர் மருத்துவமனை விரைந்தனர். மேலும் முன்னாள் அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, விஜயபாஸ்கர் ஆகியோர் மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டனர்.  

  • Sep 28, 2025 00:41 IST

    தவெக மாவட்ட செயலாளர் மீது வழக்குப்பதிவு

    தவெக மாவட்ட செயலாளர் மதியழகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பிறர் உயிருக்கு அச்சுறுத்தல் உட்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.



  • Sep 28, 2025 00:38 IST

    நடிகர் விஷால் இரங்கல்

    முற்றிலும் முட்டாள்தனம். நடிகர், அரசியல்வாதி விஜய்யின் பேரணியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் குழந்தைகள் உள்பட 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்ற கேள்வி இதயத்தை உலுக்குகிறது. பாதிக்கப்பட்ட அப்பாவி ஒவ்வொருவருக்கும் எனது இதயம் செல்கிறது. அவர்கள் ஒவ்வொருவருக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் ஆன்மா சாந்தியடையட்டும். எனது மனமார்ந்த வேண்டுகோள் @TVKVijayHQ  இறந்தவர்களுக்கு தயவு செய்து இழப்பீடு வழங்க வேண்டும், ஏனெனில் அது கட்சி செய்யக்கூடிய குறைந்த பட்சமாக இருக்கும். எதிர்காலத்தில் நடைபெறவுள்ள எந்தவொரு அரசியல் பேரணிகளிலும் இனிமேல் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் இருக்கும் என்று நம்புகிறோம். - என எக்ஸ் பக்கத்தில் விஷால் பதிவிட்டுள்ளார்.



  • Advertisment
    Advertisements
  • Sep 28, 2025 00:31 IST

    கரூர் விஜய் பரப்புரையில் 38 பேர் பலி - மருத்துவமனை வாசலில் கதறி அழும் உறவினர்கள்

    கரூர் மருத்துவமனை வாசலில் இறந்தவர்களின் உறவினர்கள் கதறி அழுதபடி உள்ளனர்.



  • Sep 28, 2025 00:03 IST

    சென்னையில் இருந்து கரூர் புறப்பட்ட ஸ்டாலின்

    கரூரில் விஜய் பிரசார கூட்டத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்த நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவிக்க சென்னையில் இருந்து கரூர் புறப்பட்டார். சென்னையில் விமான நிலையத்தில் இருந்து தனிவிமானம் மூலம் திருச்சி வருகை தந்து பின்னர் காரில் கரூர் செல்ல இருக்கிறார்.



  • Sep 27, 2025 23:56 IST

    பாதுகாப்புடன் விஜய் வீடு திரும்பினார்

    விஜய் பிரசாரத்தில் பங்கேற்று 38 பேர் உயிரிழந்த நிலையில் சென்னை நீலாங்கரை வீட்டுக்கு அவர் பாதுகாப்பாக திரும்பினார். பாதுகாப்பு வீரர்கள் புடைசூழ தனது வீட்டிற்கு சென்றுள்ளார். திருச்சி, சென்னை மற்றும் வீட்டின் முன்பு இருந்த செய்தியாளர்களை சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



  • Sep 27, 2025 23:41 IST

    கொந்தளித்த மக்கள் - ஆவேசமாக பேட்டி

    ஒரு உயிரையாவது திருப்பித் தருவாரா விஜய்? விஜய் பரப்புரையில் 38 பேர் பலி இதற்கு யார் பதில் சொல்வார் என்றெல்லாம் மக்கள் கொந்தளித்து கேள்வி எழுப்பியுள்ளனர்.



  • Sep 27, 2025 23:33 IST

    கரூர் சம்பவம் மிகவும் அதிர்ச்சியளிக்கிறது – நிர்மலா சீதாராமன்

    இன்று கரூரில் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக வரும் செய்தி மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. குழந்தைகளும் உயிரிழந்தாக தெரிவிக்கபடுகிறது. ஒரு அரசியல் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கியதால் இந்த உயிரிழப்பும், மேலும் 50 மேலானோர் காயமடைந்த நிலையில் மருத்துவ நிலையங்களில் உள்ளனர் என்றும் செய்திகள் வருகின்றன. உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தோர் விரைவில் முழுமையாக குணமடைய இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்



  • Sep 27, 2025 23:25 IST

    கரூர் விரையும் தமிழக பொறுப்பு டி.ஜி.பி வெங்கடராமன்

    கரூரில் விஜய் பரப்புரை மேற்கொண்ட இடத்தில் விபத்து ஏற்பட்ட பகுதியை தமிழக பொறுப்பு டி.ஜி.பி வெங்கடராமன் ஆய்வு மேற்கொள்கிறார். தொடர்ந்து விபத்து நிகழ்ந்தது தொடர்பாக ஆலோசனை அதிகாரிகளிடம் நடத்த உள்ளார்



  • Sep 27, 2025 23:21 IST

    கரூர் கூட்ட நெரிசலில் ஏற்பட்ட உயிரிழப்புகள் மனதை உலுக்குகிறது – அன்பில் மகேஷ்

    கரூர் கூட்ட நெரிசலில் ஏற்பட்ட உயிரிழப்புகள் மனதை உலுக்குகிறது! மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க கரூர் விரைந்து, சிகிச்சை பெற்று வருவோரை சந்தித்து நம்பிக்கையூட்டினோம். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தோம். மருத்துவ சேவைகளை துரிதப்படுத்த தேவையான ஒருங்கிணைப்புகளையும் ஆலோசனைகளையும் வழங்கி வருகிறோம்.



  • Sep 27, 2025 23:17 IST

    இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன் - விஜய்

    இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன்; தாங்க முடியாத, வார்த்தைகளால் சொல்ல முடியாத வேதனையிலும் துயரத்திலும் உழன்று கொண்டிருக்கிறேன். கரூரில் உயிரிழந்த எனதருமை சகோதர சகோதரிகளின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களையும், இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன். மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர், விரைவில் குணமடைய பிரார்த்திக்கின்றேன்.



  • Sep 27, 2025 23:10 IST

    அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் இரங்கல்

    கரூரில் தமிழக வெற்றிக் கழக கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உட்பட 30க்கும் அதிகமானோர் உயிரிழந்திருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்துகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். கூட்டநெரிசலில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அனைவருக்கும் உரிய சிகிச்சை வழங்க வேண்டும் என தமிழக அரசைக்   கேட்டுக்கொள்கிறேன். - அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

     



  • Sep 27, 2025 23:09 IST

    காங்கிரஸ் மாநிலத்தலைவர் செல்வப்பெருந்தகை இரங்கல்

     கரூரில் நடைபெற்ற நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழக அரசியல் பொதுக் கூட்டத்தில் ஏற்பட்ட துயரச் சம்பவத்தில் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததும், பலர் காயமடைந்ததும் மிகுந்த அதிர்ச்சி மற்றும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள் உயிரிழந்த செய்தி தமிழ்நாடு முழுவதையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் என் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். இச்சம்பவம் எதிர்கால நிகழ்ச்சிகளுக்கு மிகப் பெரிய பாடமாக இருக்கிறது. எந்தக் கட்சி, எந்த அமைப்பு பொதுக்கூட்டம் நடத்தினாலும், மக்களின் உயிர் பாதுகாப்பு முதன்மை என்று கருதி திட்டமிடல் செய்யப்பட வேண்டும். மருத்துவ அவசர உதவி, காவல்துறை ஒழுங்கு, அவசர வெளியேறும் வழிகள், மக்கள் நெரிசலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள், அனைத்தும் உறுதியாக இருக்க வேண்டும். மாநில அரசு உடனடியாக விசாரணை செய்து, பாதுகாப்பு குறைபாடுகள் எங்கே நடந்தன என்பதைக் கண்டறிந்து இத்தகைய துயர சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு யார் காரணமோ அவர்கள் முழு பொறுப்பேற்கவேண்டும் (Fix Accountability). தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் நீதி விசாரணை வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைக்கிறோம். இனி இதுபோன்ற துயரச் சம்பவங்கள் நடைபெறாதவாறு கடுமையான வழிமுறைகள் வகுக்க வேண்டும். அரசியல் கூட்டங்கள் மக்களின் உயிரைக் காவுகொள்வதற்கான மேடை அல்ல; மக்களின் உரிமைகளையும் நலன்களையும் காக்கும் மேடையாகவே இருக்க வேண்டும். மீண்டும் ஒருமுறை இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன் - என்று காங்கிரஸ் மாநிலத்தலைவர் செல்வப்பெருந்தகை இரங்கல் தெரிவித்து பதிவிட்டுள்ளார். 

     



  • Sep 27, 2025 23:07 IST

    மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் இரங்கல்

    தமிழ்நாட்டின் கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களால் ஆழ்ந்த வருத்தம் அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் இரங்கல் தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

     



  • Sep 27, 2025 23:06 IST

    துணை முதலமைச்சர் உதயநிதி இரங்கல்

    கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக வரும் செய்திகள் மிகுந்த வேதனை அளிக்கின்றன. இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த இரங்கலையும் - ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். நெரிசலில் சிக்கி மயக்கமடைந்தோர் - உடல்நலம் குன்றியோருக்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்பேரில் கரூர் அரசு மருத்துவமனையில் உடனுக்குடன் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த இக்கட்டான சூழலில் அரசின் நடவடிக்கைக்கும் - மருத்துவக்குழுவுக்கும் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டுகிறோம். - துணை முதலமைச்சர் உதயநிதி இரங்கல் தெரிவித்துள்ளார்.



  • Sep 27, 2025 23:05 IST

    துணைக்குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் இரங்கல்

    கரூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நிகழ்ந்த துயரமான சம்பவம் சொல்லொண்ணா வேதனையை அளிக்கிறது. தம் அன்புக்குரியவர்களை இழந்து வாடும் பெற்றோர்களுக்கும், உற்றார் உறவினர்களுக்கும், மீளாத் துயரில் இருக்கும் தமிழக மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். மருத்துவமனையில் சிகிச்சை பெறும் காயமடைந்தோர் விரைவில் பூரண குணமடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். - துணைக்குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.



  • Sep 27, 2025 23:04 IST

    முன்னாள் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை கரூர் வருகை

    முன்னாள் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை கரூர் வருகை தரவுள்ளார். இலங்கையில் இருந்து மதுரை விமானம் மூலம் வருகைத்தந்து பின்னர் காரில் கரூர் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



  • Sep 27, 2025 23:03 IST

    இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இரங்கல்

    கோர காட்சிகள் நம்மை கதிகலங்க வைக்கிறது. யாருக்கு ஆறுதல் சொல்வது எப்படி தேற்றுவது என தெரியாமல் தவிக்கிறேன். கரூர் துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் ஆன்மா இறைவனடி இளைப்பாறட்டும். நண்பர்களுக்கும் , உறவினர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கல்கள். - என எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

     



  • Sep 27, 2025 23:02 IST

    பலி எண்ணிக்கை 38 ஆக உயர்வு

    ஏற்கனவே 36 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியான நிலையில் பலி எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளது. சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.



  • Sep 27, 2025 23:00 IST

    கரூர் துயரம் - 36 பேர் உயிரிழப்பு

    விஜய் பரப்புரை கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 8 குழந்தைகள் 16 பெண்கள் உட்பட 36 பேர் உயிரிழந்தனர்.



  • Sep 27, 2025 23:00 IST

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரங்கல்

    தமிழகத்தின் கரூரில் நடந்த அரசியல் பேரணியில் நடந்த சோக சம்பவம் குறித்து ஆழ்ந்த வருத்தம் அடைந்தேன். அவர்களின் அன்புக்குரியவர்களுக்கு எனது இதயம் செல்கிறது, காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன். பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்குமாறும், நிவாரணம் மற்றும் மீட்பு முயற்சிகளில் அதிகாரிகளுடன் நெருக்கமாக பணியாற்றுமாறும் காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் தலைவர்களை நான் கேட்டுக்கொள்கிறேன். - என்று பதிவிட்டுள்ளார்.



  • Sep 27, 2025 22:59 IST

    தமிழிசை சௌந்தரராஜன் இரங்கல்

    கரூரில் நடந்த சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது கவலை அளிக்கிறது... இந்த கடுமையான சூழ்நிலையில் நாம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆதரவாக இருப்போம்.. கரூர் மாவட்டம் மற்றும் பக்கத்து மாவட்டத்தை சார்ந்த சகோதரர்கள் அனைவரும் உடனே மருத்துவமனைக்குச் சென்று... என்ன உதவி வேண்டுமோ உடனே அவர்களுக்கு பக்க பலமாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.. நாமெல்லாம் ரத்த தானம் செய்வதற்கும் தயாராக இருக்க வேண்டும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரத்தம் தேவைப்படலாம். . ஆதரவு தேவைப்படலாம்.. சிகிச்சை பெற்றுக் கொண்டிருப்பவர்கள் அனைவரும் விரைவில் குணமடைய வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன்.. உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் கூடாது என்பது எனது பிரார்த்தனையாக இருக்கிறது - என்று தமிழிசை சௌந்தரராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார்.



  • Sep 27, 2025 22:58 IST

    சென்னை திரும்புகிறார் துணை முதலமைச்சர்!

    துபாய் சென்ற துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உடனடியா சென்னை திரும்பி நாளை கரூர் விரைகிறார்.



  • Sep 27, 2025 22:57 IST

    நடிகை கயாடு லோஹர் இரங்கல்

    உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல். கரூர் பேரணியில் எனது நெருங்கிய நண்பரை இழந்தேன். அனைத்தும் TVK இன் சுயநல அரசியலுக்காக. விஜய், உங்கள் நட்சத்திரத்திற்கு மக்கள் முட்டுக்கட்டை அல்ல. உங்கள் பசிக்கு இன்னும் எத்தனை உயிர்கள்? - என பதிவிட்டுள்ளார்.



  • Sep 27, 2025 22:54 IST

    உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இரங்கல்

    தமிழ்நாட்டின் கரூரில் ஏற்பட்ட கோர விபத்து குறித்து அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். இந்த துயரமான சம்பவம் விலைமதிப்பற்ற உயிர்களைப் பறித்துள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். பிரபு ஸ்ரீ ராமர் அவர்களுக்கு வலிமையையும் சாந்தியையும் வழங்கட்டும். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். ஓம் சாந்தி! - என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

     



  • Sep 27, 2025 22:53 IST

    அமைச்சர் தங்கம் தென்னரசு இரங்கல்

    கரூரிலிருந்து வரும் செய்திகள் மிகுந்த வருத்தத்தையும் வேதனையும் அளிக்கிறது. மயக்கமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், முப்பதுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்த துயரச் செய்தி, மேலும் துன்பம் தருவதாக அமைகிறது. மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் போர்க்கால அடிப்படையில் உதவிகளை வழங்க உத்தரவிட்டுள்ளார். அன்பானவர்களை இழந்து வாடும் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளோர் விரைவில் நலமடைய விழைகிறேன் என தங்கம் தென்னரசு இரங்கல் தெரிவித்துள்ளார்.

     



  • Sep 27, 2025 22:52 IST

    இயக்குநர் பார்த்திபன் இரங்கல்

    கரூரில் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 31 பேரின் குடும்பங்களுக்கு யார் எப்படி ஆறுதல் சொல்வது எனத் தெரியவில்லை. இன்னும் சிகிச்சையில் இருக்கும் 58 பேரும் விரைந்து குணமடைய அனைவரும் வேண்டிக் கொள்வோம் என இயக்குநர் பார்த்திபன் இரங்கல் தெரிவித்துள்ளார். 

     



  • Sep 27, 2025 22:51 IST

    வானதி ஸ்ரீனிவாசன் இரங்கல் பதிவு

    கரூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கலந்து கொண்ட கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 30 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததாக வரும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. உயிரிழந்தவர்களில் பலர் பெண்கள், சிறுவர்கள், குழந்தைகள் என்பதை அறியும்போது நெஞ்சம் பதறுகிறது. இன்னும் பலர் ஆபத்தான கட்டத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்ற செய்தி பெரும் துயரத்தை தருகிறது. பெரும் மக்கள் கூட்டத்தை கையாள்வதில் அரசும், காவல்துறையும், அரசியல் கட்சிகளும், பொதுமக்களும் கற்றுக்கொள்ள வேண்டியது ஏராளம் இருக்கிறது. மக்களுக்காகத்தான் அரசியல் கட்சிகளும், அரசும் இருக்கின்றன. எனவே, மக்கள் உயிரிழக்க காரணமாக இருக்கும் எதையும் அனுமதிக்க கூடாது. உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

     



  • Sep 27, 2025 22:50 IST

    பல்வேறு அரசியல் கட்சியினர் இரங்கல்

    தமிழகத்தின் கரூரில் நடந்த அரசியல் பேரணியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி அப்பாவி மக்கள் உயிரிழந்தது மிகவும் கவலையளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறோம். காயமடைந்தவர்களுக்கு உடனடியாக அனைத்து உதவிகளையும் வழங்குமாறும், நிவாரண நடவடிக்கைகளில் அதிகாரிகளுக்கு ஆதரவளிக்குமாறும் பிராந்தியத்தில் உள்ள அனைத்து காங்கிரஸ் தொழிலாளர்களையும் கேட்டுக்கொள்கிறேன் என லோக்சபா எம்.பி வேனுகோபால் பதிவிட்டுள்ளார்.

     

     



  • Sep 27, 2025 22:48 IST

    பிரியங்கா காந்தி இரங்கல்

    தமிழக மாநிலம் கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் மனம் உடைந்து போனேன். கற்பனை செய்ய முடியாத இந்த சோகத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பத்தினருடன் எனது எண்ணங்களும், பிரார்த்தனைகளும் உள்ளன. இந்த கடினமான நேரத்தில் அவர்கள் வலிமை பெறட்டும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். காயமடைந்தவர்களுக்கு உடனடியாக உதவவும், நிவாரண நடவடிக்கைகளில் குடும்பத்தினர் மற்றும் அதிகாரிகளுக்கு ஆதரவளிக்கவும் பிராந்தியத்தில் உள்ள அனைத்து காங்கிரஸ் தொண்டர்களையும் கேட்டுக்கொள்கிறேன் என பிரியங்கா காந்தி பதிவிட்டுள்ளார்.



  • Sep 27, 2025 22:47 IST

    விஜய் பிரசார கூட்ட நெரிசல் - பல்வேறு அரசியல் கட்சியினர் இரங்கல்

    தமிழ்நாட்டின் கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்த துயர சம்பவத்தால் ஆழ்ந்த வேதனை அடைகிறேன். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயரத்தைத் தாங்கும் வலிமையையும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என்று அமித்ஷா பதிவிட்டுள்ளார்.



  • Sep 27, 2025 22:38 IST

    விஜய் பிரசார கூட்ட நெரிசல் பலி - அரவிந்த் கெஜ்ரிவால் இரங்கல்

    விஜய் பிரசார கூட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து டெல்லியின் முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இரங்கல் தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.



  • Sep 27, 2025 22:36 IST

    ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம்

    கரூர் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  தெரிவித்துள்ளார். 



  • Sep 27, 2025 22:34 IST

    தமிழக அரசிடம் அறிக்கை கேட்ட உள்துறை அமைச்சகம்

    கரூரில் கூட்ட நெரிசலில் இவ்வளவு பேர் உயிரிழப்புக்கு காரணம் என்ன? நெரிசல் ஏற்பட்டது எதனால்? நடந்தது என்ன? என்று முழு விளக்க அறிக்கையை உடனே மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுள்ளது.



  • Sep 27, 2025 22:32 IST

    நெஞ்சு பதைக்கிறது - கரூர் சம்பவத்திற்கு கமல் இரங்கல்

    நெஞ்சு பதைக்கிறது. கரூரிலிருந்து வரும் செய்திகள் பேரதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கின்றன. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த அப்பாவி மக்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கவும் வார்த்தைகளின்றித் திகைக்கிறேன். நெரிசலிலிருந்து மீட்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சையும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணமும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டுமென தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறேன் என்று கமல் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

     



  • Sep 27, 2025 22:25 IST

    தலா ரூ. 10 லட்சம் நிதியுதவி - தமிழக அரசு

    விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் நிதியுதவியும் சிகிச்சை பெற்று வீடு திரும்புவோருக்கு தலா ஒரு லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.



  • Sep 27, 2025 22:25 IST

    பலி எண்ணிக்கை 36 ஆக உயர்வு

    பலி எண்ணிக்கை 36 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே சிறுமி ஒருவர் உயிரிழந்த நிலையில் சிறுவன் ஒருவனும் உயிரிழந்துள்ளார். 



  • Sep 27, 2025 22:24 IST

    இரவே ஸ்டாலின் வருகை

    இன்று இரவே தனிவிமானம் மூலம் ஸ்டாலின் சென்னையில் இருந்து திருச்சி வந்து அங்கிருந்து கரூர்  வருகை தரவுள்ளார். 



  • Sep 27, 2025 22:23 IST

    உயிரிழப்பு எண்ணிக்கை 35 ஆக உயர்வு

    பலி எண்ணிக்கை 34 ஆக இருந்த நிலையில் மேலும் ஒரு பெண் குழந்தை உயிரிழந்த நிலையில்  பலி எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது.



  • Sep 27, 2025 22:21 IST

    கரூர் செல்லும் இ.பி.எஸ்

    விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கியவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கரூர் வருகை தர உள்ளார்.



  • Sep 27, 2025 22:20 IST

    கரூர் துயரம் - காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இரங்கல்

    "தமிழகத்தின் கரூரில் நடந்த அரசியல் பேரணியில் ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான மற்றும் துயரமான கூட்ட நெரிசலில் சிக்கி பல அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் அவர்களுடன் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறோம். பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்கவும், நிவாரணம் மற்றும் உடனடி மருத்துவ உதவிகளில் அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றவும் அனைத்து காங்கிரஸ் தொண்டர்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன்" காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இரங்கல் தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

     



  • Sep 27, 2025 22:18 IST

    பதிலளிக்காமல் புறப்பட்ட விஜய்

    கூட்ட நெரிசலில் பலர் உயிரிழந்த நிலையில் செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளிக்காமல் திருச்சி விமான நிலையத்தில் இருந்து விஜய் புறப்பட்டார்.



  • Sep 27, 2025 22:15 IST

    உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் பணி தீவிரம்

    விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 34 பேர் உயிரிழந்த நிலையில் அவர்களை அடையாளம் காணும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. உறவினர்கள் கூட்டத்தில் தொலைந்தவர்கள் குறித்த தகவல்களை காவல்துறையிடம் ஒப்படைக்கவும் அறிவுறுத்தி வருகின்றனர்.



  • Sep 27, 2025 22:13 IST

    விஜய் பிரச்சார கூட்ட நெரிசல் - பா.ஜ.க மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை இரங்கல்

    கரூரில், தவெக தலைவர் திரு. விஜய் அவர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில், கூட்ட நெரிசலில், குழந்தைகள் உட்பட சுமார் நாற்பது பேர் உயிரிழந்திருப்பதாக வந்துள்ள செய்தி மிகவும் அதிர்ச்சியும், வருத்தமும் அளிக்கிறது. பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அனைவருக்கும் உரியச் சிகிச்சை அளிக்க வேண்டுமென்று தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.

     உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு அரசியல் கட்சியின் கூட்டத்திற்கு, எத்தனை பேர் வருவார்கள் என்பதை முறையாகக் கணக்கிட்டு, அதற்கேற்ப இடத்தைத் தேர்ந்தெடுத்துக் கொடுப்பதும், கூட்டத்திற்கு வரும் பொதுமக்கள் பாதுகாப்புக்குத் தேவையான அளவு காவல்துறையினரை பணியமர்த்துவதும் காவல்துறையின் பொறுப்பு. திரு. விஜய் அவர்கள் கூட்டத்தில், மின்சாரம் தடை செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வருகின்றன.

    இத்தனை கவனக்குறைவாகத் தமிழக அரசும், காவல்துறையும் செயல்பட்டிருப்பது கடும் கண்டனத்துக்குரியது. திமுகவினர் நடத்தும் கூட்டங்களுக்கு, அந்த மாவட்டத்தின் மொத்த காவல்துறையினரையும் அனுப்பிப் பாதுகாப்பு கொடுக்கும் திமுக அரசு, எதிர்க்கட்சிகள் நடத்தும் கூட்டங்களில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யாமலிருப்பது வழக்கமாகியிருக்கிறது. உடனடியாக, உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாததால் இந்த விபத்து நடந்ததா என்பது குறித்தும், மின்சாரம் தடைப்பட்டது குறித்தும் முழு விசாரணை நடத்தி, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.



  • Sep 27, 2025 22:11 IST

    நெரிசலில் சிக்கி உயிரிழப்பு என்பது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது - சி.பி.எம் சண்முகம்

    இன்று கரூரில் த.வெ.க தலைவர் விஜய் பரப்புரை கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் நெரிசலில் சிக்கி இதுவரை 40 பேர் உயிரிழப்பு என்பது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. நாளை காலையில் #CPIM அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் கே பாலகிருஷ்ணன், திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் ஆர்.சச்சிதானந்தம் ஆகியோர் கரூருக்கு செல்கின்றனர் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழுச் செயலாளர் பதிவிட்டுள்ளார்.



  • Sep 27, 2025 22:09 IST

    "மிகுந்த வலியையும் வேதனையையும் அளிக்கிறது - ஆளுநர் ஆர்.என்.ரவி

    "கரூரில் நடந்த அரசியல் பேரணி கூட்டத்தில் குழந்தைகள் உள்பட அப்பாவி உயிர்கள் பறிபோனது மிகுந்த வலியையும் வேதனையையும் அளிக்கிறது. இந்த துயரமான நேரத்தில், உறவுகளை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது நெஞ்சார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டிக் கொள்கிறேன்." என ஆளுநர் ரவி இரங்கல் தெரிவித்துள்ளார்.



  • Sep 27, 2025 22:05 IST

    திரௌபதி முர்மு இரங்கல்

    விஜய் பிரசார கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு திரௌபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார். ”தமிழ்நாட்டின் கரூர் மாவட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு குறித்து அறிந்து வேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.” என்று எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.



  • Sep 27, 2025 22:04 IST

    முன்னாள் அமைச்சர் விஜய்பாஸ்கர் இரங்கல்

    ”கரூரில் இருந்து வரும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கின்றது. குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உள்ளிட்டவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கும் காட்சிகள் கண்களை கலங்கச் செய்கிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு மருத்துவர்கள் குழு கொண்டு உடனடியாக உயரிய சிகிச்சைகளை வழங்கிட வேண்டுமென வலியுறுத்துகிறேன். பரிதாபமாக உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு கனத்த இதயத்துடன் கண்ணீர் அஞ்சலி!” என்று எக்ஸ் பக்கத்தில் முன்னாள் அமைச்சர் விஜய்பாஸ்கர் இரங்கல் தெரிவித்து பதிவிட்டுள்ளார்.



  • Sep 27, 2025 22:03 IST

    விஜய் கூட்ட நெரிசல் பலி - அப்பாவி மக்கள் உயிரிழப்புக்கு ரஜினிகாந்த் இரங்கல்

    கரூரில் நிகழ்ந்திருக்கும் அப்பாவி மக்களின் உயிரிழப்புச் செய்தி நெஞ்சை உலுக்கு மிகவும் வேதனையளிக்கிறது என்று ரஜினி தெரிவித்துள்ளார். உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள், காயமடைந்தோருக்கு ஆறுதல்களையும் ரஜினி தெரிவித்துள்ளார்.



  • Sep 27, 2025 22:00 IST

    கரூர் சம்பவத்தால் மிகுந்த வருத்தம்: ராஜ்நாத் சிங்

    கரூரில் நேரிட்ட கோர விபத்து உயிரிழப்பு சம்பவத்தால் மிகுந்த வருத்தமடைந்தேன். நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆழந்த இரங்கல் தெரிவித்துள்ளார். 



  • Sep 27, 2025 21:58 IST

    இதுவரை எந்தா அரசியல் கூட்டத்திலும் இப்படி நடக்கவில்லை என தகவல்

    கரூரில் 34 பேர் பலியான சம்பவம் விஜய்க்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. 'புஷ்பா-2' திரைப்பட ரிலீஸின்போது ஹைதராபாத் தியேட்டரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண் பலியான வழக்கில் நடிகர் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டார். அதேபோல் விஜய்யும் கைது செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது. முன்னதாக தவெக பிரச்சார கூட்டத்தில் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் கட்சி தலைவரே பொறுப்பு என ஐகோர்ட் கூறியிருந்தது. இந்நிலையில் இதுவரை எந்த அரசியல் கூட்டத்திலும் இதுபோன்ற சம்பவம் நடக்கவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.



TVK Vijay Namakkal Karur

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: