பா.ஜ.க-வுடன் மறைமுக கூட்டணி; தி.மு.க-விடம் மக்கள் ஜாக்கிரதை: நாமக்கல்லில் விஜய் பேச்சு

"தி.மு.க குடும்பம் இந்த பா.ஜ.கவுடன் மறைமுக உறவு க்காரர்களாக இருக்கிறார்கள் என்பதை மறந்து விட வேண்டாம். சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க-விற்கு வாக்களித்தால் அது பா.ஜ.க-விற்கு வாக்களித்தது போல் தான்." என்று விஜய் கூறினார்.

"தி.மு.க குடும்பம் இந்த பா.ஜ.கவுடன் மறைமுக உறவு க்காரர்களாக இருக்கிறார்கள் என்பதை மறந்து விட வேண்டாம். சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க-விற்கு வாக்களித்தால் அது பா.ஜ.க-விற்கு வாக்களித்தது போல் தான்." என்று விஜய் கூறினார்.

author-image
WebDesk
New Update
TVK Vijay Campaign Namakkal speech Tamil News

"சத்தியமாக சொல்கிறேன் நானும் இரண்டு மூன்று வாரத்திற்கு முன்பு ஏன் என்னமோ ஏதோ என்று நினைத்தேன் ஆனால் பார்த்துக் கொள்ளலாம் சத்தியமாக ஒரு கை பார்த்துக்கொள்ளலாம்." என்று நாமக்கல்லில் விஜய் பேசினார்.

கடந்த 13 ஆம் தேதி சனிக்கிழமையன்று த.வெ.க தலைவர் விஜய் திருச்சியில் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். அன்று திருச்சியில் தொடங்கி அரியலூரில் பிரச்சாரத்தை நிறைவு செய்தார். கடந்த சனிக்கிழமை நாகை, திருவாரூர் மாவட்டங்களில் பிரச்சாரப் பயணம் மேற்கொண்டார். தொடர்ந்து இன்று (செப்.27) நாமக்கல்லில் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:- 

Advertisment

நம்முடைய நாமக்கல் மாவட்டம், இங்க லாரி பாடி காட்டுகிற தொழிலில் இருந்து இன்னும் நிறைய தொழில்கள் செய்யக்கூடிய மாவட்டம். அது மட்டுமல்லாமல் நாமக்கல் மாவட்டத்தினுடைய இந்த முட்டை உலகமும் ( Egg city)  கூட பிரசித்தி பெற்றது. தமிழ்நாட்டு மக்களுக்கு சத்தான முட்டை கொடுக்கின்ற ஊர் மட்டுமல்ல, தமிழ்நாட்டு மக்களுக்கு உணர்ச்சிகளை ஊட்டுகின்ற மண்ணும் கூட நாமக்கல் மாவட்டம். இதை ஏன் இங்கு சொல்கிறேன் என்றால் இரண்டு வரிகளை சொன்னால் உங்கள் அனைவருக்கும் எளிதாக தொடர்புபடுத்திக் கொள்ள முடியும். '

தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா' நம்முடைய நாடி நரம்புகளில் ரத்தம் பாய்ச்சுகின்ற இந்த வரிகளை எழுதினது யார்? என்று தெரியுமல்லவா. விஜயகாந்த் சார் சொன்னாரு, விஜயகாந்த் அவர்களுக்கு மட்டுமல்ல நம்முடைய அனைவருக்கும் இந்த வரிகளை எழுதியது யாரென தெரியுமல்லவா. நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த மேகனூரில் பிறந்த நாமக்கல் கவிஞர் திரு ராமலிங்கம் பிள்ளை தான்.

தமிழ்நாட்டு மக்களுக்கு இட ஒதுக்கீடு உரிமையை வழங்கின, இதே நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த திருச்செங்கோடு பகுதியில் இருக்கிற ஒருத்தர் நம்முடைய சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக இருந்த சுப்பராயன் அவர்கள் தான் . அந்த மாபெரும் மனிதர் தமிழக மக்களுக்கு இட ஒதுக்கீடு உரிமையை வழங்கினதில் இவருக்கு மிகப்பெரிய பங்கு உண்டு இதுதான் கம்யூனல் ஜி ஓ 1071. அதைக் கொண்டு வந்து பட்டியிலன மக்களுக்கு பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் இதை வழங்கினார் அதனால்தான் அவர் முதலமைச்சராக பதவியேற்ற பிறகு அவர் செய்த மிகப்பெரிய செயல் .

Advertisment
Advertisements

தமிழர் அப்படி பெருமையோடு சொல்றது மட்டுமல்லாமல் இதை நாமக்கல் மாவட்டத்தில் அவருக்கு என்று மணிமண்டபம் கட்டுவோம் என்று வாக்குறுதி எண் 456 கொடுத்தது யாரு?? சொன்னார்களே செய்தார்களா. அதாவது ஒரு படத்தில் வடிவேலு ஒன்றுமில்லாத பாக்கெட்டை எடுத்துக்காட்டுவது போல தான். ஒவ்வொரு வாக்குறுதியும் படித்துவிட்டு அந்த ஒன்றுமில்லாத பாக்கெட்டை நமக்கு காட்ட வேண்டியதுதான் இவர்களின் வேலை. தி.மு.க நாமக்கல் மாவட்டத்தில் என்னென்ன செய்வார்கள் என்று சொன்னார்களோ அதை தற்போது பார்ப்போம்.
ஒவ்வொரு ஒன்றியத்திலும் தானிய சேமிப்பு கிடங்குகள் அமைக்கப்படும் இவை உலர் கலங்களுடன் கூடிய கொள்முதல் நிலையங்களுடன் இணைக்கப்படும் திமுக வாக்குறுதி எண்.-50 .

கொப்பரைத் தேங்காயை தமிழக அரசே கொள்முதல் செய்யும் அதிலிருந்து தேங்காய் எண்ணெய் உற்பத்தி செய்து நியாய விலை கடைகளில் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் திமுக வாக்குறுதி எண் -66 . நியாய விலைக் கடைகளில் நாட்டு சர்க்கரை வெல்லம் ஆகியவை விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் வாக்குறுதி என் - 68 அரசு ஊழியர்கள் மட்டும் ஆசிரியர்கள் மட்டுமல்லாமல் போக்குவரத்து ஊழியர்களுக்கும் பழைய ஓய்வு திட்டத்தை செயல்படுத்தப்படும் வாக்குறுதி எண் - 152. சரி அதெல்லாம் இருக்கட்டும் நாமக்கல் மாவட்டத்திற்கு மட்டும் திமுக என்னென்ன வாக்குறிதிகளை வழங்கினார்கள் என பார்ப்போம். 

ஒரு நாளைக்கு ஐந்து கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு உலகம் முழுவதும் ஏற்றுமதியாக இந்த நாமக்கல் மாவட்டத்தில் முட்டைகள் வீணாகாமல் பாதுகாப்பாக வைக்க முட்டை சேமிப்பு கிடங்கு அமைக்கப்படும் என்று கோரிக்கையையும் பாக்டீரியா மற்றும் பயோலாஜிக்கல் ஆராய்ச்சி மேற்கொள்ள ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும் என்ற கோரிக்கையும் பல ஆண்டுகளா இருக்கு ஆனா இதுவரை ஆண்ட கட்சிகளும் சரி இப்பொழுது ஆளும் கட்சிகயும் சரி அதை பற்றி சற்றும் சிந்திக்கவில்லை.

தி.மு.க சட்டமன்ற உறுப்பினருக்கு சொந்தமான மருத்துவ கல்லூரியில் நடைபெற்ற கிட்னி திருட்டு அதுதான் நாடறிந்த விஷயம் ஆயிற்றே அதை ஏற்கனவே திருச்சியில் பேசியிருந்தேன். ஆனால் நாமக்கல்லை சேர்ந்தவர்கள் தான் அதிகமாக பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள் என சொல்கிறார்கள் அதிலும் குறிப்பா விசைத்தறையில் பணிபுரியும் ஏழை பெண்களை குறி வைத்து இந்த கிட்னி திருட்டை  நடந்திருக்கிறது என்று கூறுகிறார்கள். இந்த விஷயத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் நம்மளுடைய ஆட்சி அமைந்ததும் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்.

இந்த கிட்னி திருட்டு எங்கிருந்து தொடங்கியது என்று பார்த்தால் கந்துவட்டி கொடுமையில் இருக்கிறது அதாவது விசைத்தறி தொழிலாளர்கள் வாழ்க்கை தரத்தையும் பொருளாதாரத்தையும் எந்த ஏற்றமும் இல்லாமல் செய்துள்ள இந்த மாடல் அரசு மேம்படுத்தாத காரணத்தினால் அவர்கள் கிட்னியை விற்கும் அளவிற்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள் இது எவ்வளவு பெரிய கொடுமை. விசைத்தறி தொழிலாளர்களின் வாழ்க்கை தரத்தை பொருளாதாரத்தை மேம்படுத்த தேவையான தேர்வுகளை யோசித்து உறுதியாக தேர்தல் அறிக்கையில் சொல்வோம்.

நான் இந்த சுற்றுப்பயணத்தில் எல்லா ஊர்களுக்கும் செல்லும் பொழுது ஒரே விஷயத்தை தான் மக்கள் எங்களிடம் கூறுகிறார்கள் அடிப்படை சாலை வசதி நல்ல குடிநீர் ஒரு நல்ல மருத்துவ வசதி,நல்ல மருத்துவர்கள் , பெண்கள் பாதுகாப்பு இதைத்தான் மக்கள் அதிகபட்சமாக எங்களிடம் கேட்டு கேட்கக்கூடிய அடிப்படை வசதிகள். ஏன் எந்த விஜய் எந்த இடத்திற்கு சென்றாலும் கேள்வியாக கேட்கிறார்? இதற்கான விளக்கத்தை ஏற்கனவே இரண்டு இடத்தில் கூறியிருந்தோம். 

கல்வி ரேஷன் மருத்துவம் அடிப்படை சாலை வசதி மின்சாரம் போக்குவரத்து பெண்கள் பாதுகாப்பு சட்டம் ஒழுங்கு இது போன்ற அடிப்படை விஷயங்களில் எந்த சமரசம் இல்லாமல் சரியாக செய்யப்படும் என கூறியிருந்தோம் இதைத்தானே எல்லோரும் சொன்னார்கள் அதைத்தான் இவரும் சொல்றாரு இவர் புதிதாக ஏதும் சொல்லவில்லை. ஐயா அரசியல் மேதைகளே பெரியவர்களே ஒரு மனிதனுக்கு சாப்பிடுவதற்கு நல்ல சாப்பாடு படிப்பதற்கு நல்ல கல்வி குடிப்பதற்கு நல்ல குடிநீர் மருத்துவ வசதி வேணுன்ற இடத்திற்கு போயிட்டு வர ஒரு சாலை வசதி பாதுகாப்பான வாழ்க்கை இதுதான் ஒரு அடிப்படை மனிதனுக்கு தேவை.

அப்புறம் அதை சரியாக செய்வோம் என்று சொல்வது தானே சரி .இது திமுக மாதிரி பொய்யான வாக்குறுதிகளை எப்பொழுதும் கொடுக்க மாட்டோம். புதுசா சொல்லுங்க புதுசா சொல்லுங்கண்ணா என்னத்த சொல்ல சொல்றீங்க எனக்கு புரியலையே.
புதுசா என்னப்பா சொல்றது செவ்வாய் கிரகத்தில் ஐடி கம்பெனி கட்டப்படும் ,காற்றில் கல் வீடு கட்டப்படும், அமெரிக்காவிற்கு ஒத்தையடி பாதை போடப்படும் ,வீட்டுக்குள் ஏரோபிளேன் ஓட்டப்படும் ,இது போன்ற அடித்து விடுவோமா நம்முடைய முதலமைச்சர் அடித்து விடுவாரே அது போன்ற அடித்து விடுவோமா. நான் ஏற்கனவே கூறியது தான் மீண்டும் இங்கு தெரிவிக்கிறேன். 

ஒன்று இந்த பாசிச பா.ஜ.க அரசு உடன் நாங்கள் எப்போதும் ஒத்துப் போக மாட்டோம். இரண்டாவது இந்த தி.மு.க அரசு மாதிரி அண்டர் கிரவுண்ட் டீலிங் மறைமுக உறவுக்காரர்களாக இந்த பாஜகவோட எப்பொழுதும் இருக்க மாட்டோம் மூன்றாவது மூச்சுக்கு முன்னுறு தடவை அம்மா அம்மா என்று என்று சொல்லிவிட்டு ஜெயலலிதா அவர்கள் சொன்ன விஷயத்தை முற்றிலுமாக மறந்துவிட்டு ஒரு பொருந்தா கூட்டணியை அமைத்துக் கொண்டு கேட்டால் தமிழ்நாட்டோட நலனுக்காக பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளோம் என சொல்லிக்கிறார்கள் அதிமுக மாதிரி நாம் இருக்க மாட்டோம்.

இல்லை நான் தெரியாம தான் கேட்கிறேன் இந்த பாஜக அரசு தமிழகத்திற்கு என்ன செய்தது நீட்டை ஒழித்து விட்டார்களா? கல்விக்கு தேவையான முழு நிதியை கொடுத்தார்களா தமிழகத்துக்கு தேவையான அனைத்து விஷயங்களைத் செய்துவிட்டார்களா அப்புறம். பிறகு ஏன் இந்த சந்தர்ப்பவாத கூட்டணி என நான் கேட்கவில்லை புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களுடைய உண்மையான தொண்டர்கள் அவர்கள் கேட்கிறார்கள்.  அவர்கள் கூட்டு பொரியல் அப்பளம் எனக் கிண்டி கொள்ளட்டும் நமக்கு எதற்கு? அ.தி.மு.க - பா.ஜ.க நேரடி உறவுக்காரர்கள் என்று எல்லாருக்கும் தெரியும் அவர்களுடைய கூட்டணி மேலே மக்களுக்கு எந்த ஒரு நம்பிக்கை இல்லை என அனைவருக்கும் தெரியும். 

ஆனால், அதே சமயம் இந்த தி.மு.க குடும்பம் இந்த பா.ஜ.கவுடன் மறைமுக உறவு க்காரர்களாக இருக்கிறார்கள் என்பதை மறந்து விட வேண்டாம். அடுத்த வருடம் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க-விற்கு வாக்களித்தால் அது பா.ஜ.க-விற்கு வாக்களித்தது போல் தான். வெளியில் அடித்துக் கொள்வது போல் தெரியும் ஆனால் உள்ளுக்குள் வேண்டாம் மக்களே ஜாக்கிரதையாக யோசியுங்கள். அதனால் தான் திரும்பவும் சொல்கிறேன் 2026 இல் ரெண்டே பேருக்கு தான் போட்டி ஒன்னு த.வெ.க இன்னென்று தி.மு.க . ஒன்னு மாபெரும் மக்கள் சக்தி கொண்ட எளியோரின் குரலாய்  இருக்கின்ற களத்தில் இருக்கின்ற தமிழக வெற்றி கழகம், மற்றொன்று கொள்கை என்ற பெயரில் மக்களை ஏமாற்றிவிட்டு கொள்ளையடிச்சு தமிழ்நாட்டை ஏமாத்துற இந்த திமுக இந்த இரண்டே இரண்டு பேருக்கு தான் போட்டி.

இப்படி ஒரு மோசமான ஆட்சியை கொடுக்கிறார்களே இந்த தி.மு.க அரசு மறுபடியும் ஆட்சிக்கு வரணுமா உங்க மனசாட்சியில் உள்ள உண்மையான மக்களாட்சி உங்க நம்ம தமிழக வெற்றிக் கழகம் மறுபடியும் ஆட்சி அமைக்கணுமா சாரி ... இப்ப ஆட்சி அமைக்கனும்மான்னு கேட்டேன்... நண்பா, நண்பி, தோழா, தோழி என் மேல் இவ்வளவு நம்பிக்கை வைத்துள்ளீர்களா? என்னை இவ்வளவு நம்புகிறீர்களா நம்புகிறீர்களா? பார்த்துவிடலாம் ஒரு கை பாத்துக்கலாம் சத்தியமாக சொல்கிறேன் நானும் இரண்டு மூன்று வாரத்திற்கு முன்பு ஏன் என்னமோ ஏதோ என்று நினைத்தேன் ஆனால் பார்த்துக் கொள்ளலாம் சத்தியமாக ஒரு கை  பார்த்துக்கொள்ளலாம். நம்பிக்கையோடு இருங்கள் வெற்றி நிச்சயம்.

இவ்வாறு விஜய் தெரிவித்தார். 

செய்தி: க.சண்முகவடிவேல்.

Tamilaga Vettri Kazhagam Vijay Namakkal

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: