விஜய் கூட்ட நெரிசல் சம்பவம்: கைது செய்யப்பட்ட த.வெ.க நிர்வாகிகளுக்கு அக். 14 வரை நீதிமன்ற காவல்

கரூரில் விஜய் பரப்புரையின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த வழக்கில் மேலும் ஒரு த.வெ.க நிர்வாகியை போலீசார் கைது செய்துள்ளனர். அதன்படி, கரூர் மத்திய மாநகர த.வெ.க செயலாளர் பவுன்ராஜை போலீசார் கைது செய்துள்ளனர். 

கரூரில் விஜய் பரப்புரையின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த வழக்கில் மேலும் ஒரு த.வெ.க நிர்வாகியை போலீசார் கைது செய்துள்ளனர். அதன்படி, கரூர் மத்திய மாநகர த.வெ.க செயலாளர் பவுன்ராஜை போலீசார் கைது செய்துள்ளனர். 

author-image
WebDesk
New Update
TVK Vijay Campaign stampede karur city central secretary arrested Tamil News

கரூர் த.வெ.க மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன் தங்குவதற்கு அடைக்கலம் கொடுத்தவரும், பிரச்சாரத்திற்கு கொடிக்கம்பம், பிளக்ஸ் போர்டுகள் ஏற்பாடு செய்தவருமான கரூர் மத்திய மாநகர த.வெ.க செயலாளர் பவுன்ராஜை போலீசார் கைது, திவீர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கரூரில் கடந்த சனிக்கிழமை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், தனது மூன்றாவது கட்ட அரசியல் பரப்புரையை மேற்கொண்டார். இரவு அவர் கரூரில் பேசிய நிலையில், அந்தப் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 8 குழந்தைகள் உள்பட 41 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Advertisment

இதற்கிடையில், இந்த சம்பவம் தொடர்பாக கரூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், சம்பவம் தொடர்பாக கரூர் மேற்கு மாவட்ட செயலர் மதியழகன், த.வெ.க பொதுச்செயலாளர் ஆனந்த், இணை பொதுச் செயலாளர் நிர்மல் குமார் ஆகியோர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மனித உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துதல், பொது அதிகாரியின் உத்தரவுக்கு கீழ்படியாமை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை அதிகாரியாக கரூர் டி.எஸ்.பி செல்வராஜ் நியமனம் செய்யப்பட்டிருந்த நிலையில், புதிய விசாரணை அதிகாரியாக கூடுதல் எஸ்.பி., பிரேமானந்தனை நியமித்து பொறுப்பு டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் கூட்ட நெரிசல் விவகாரம் குறித்து விசாரணை நடத்த தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், இணை பொதுச்செயலாளர் நிர்மல்குமார், மாவட்ட செயலாளர் மதியழகன் ஆகியோருக்கு சம்மன் அனுப்ப காவல்துறை முடிவு செய்துள்ளது. த.வெ.க பொதுச்செயலாளர் ஆனந்தின் செல்போன் அணைத்து வைக்கப்பட்டுள்ளதால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கரூரில் விஜய் பரப்புரையின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த வழக்கில் கரூர் த.வெ.க மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகனை போலீசார் நேற்று திங்கள்கிழமை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மேலும் ஒரு த.வெ.க நிர்வாகியை போலீசார் கைது செய்துள்ளனர். அதன்படி, கரூர் மத்திய மாநகர த.வெ.க செயலாளர் பவுன்ராஜை போலீசார் கைது செய்துள்ளனர். 

Advertisment
Advertisements

கரூர் த.வெ.க மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன் தங்குவதற்கு அடைக்கலம் கொடுத்தவரும், பிரச்சாரத்திற்கு கொடிக்கம்பம், பிளக்ஸ் போர்டுகள் ஏற்பாடு செய்தவருமான கரூர் மத்திய மாநகர த.வெ.க செயலாளர் பவுன்ராஜை போலீசார் கைது, திவீர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இருவரும் இன்று கரூர் மாஜிஸ்திரேட்டிடம் ஆஜர் படுத்தப்பட்டனர்.  

தவெக நிர்வாகிகளுக்கு அக்டோபர் 14ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விடுக்கப்பட்டுள்ளது. கரூர் விஜய் பிரசாரத்தில் 41 பேர் பலியான சம்பவம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட தவெக நிர்வாகிகள் மதியழகன், பவுன்ராஜ்க்கு  அக்டோபர் 14ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விடுக்கப்பட்டுள்ளதையடுத்து திருச்சி மத்திய சிறைக்கு அழைத்து செல்ல உள்ளனர்.

Tamilaga Vettri Kazhagam Karur

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: