/indian-express-tamil/media/media_files/2025/09/12/tvk-vijay-campaign-trichy-ariyalur-perambalur-executive-announcement-tamil-news-2025-09-12-19-22-42.jpg)
நாளை திருச்சி, அரியலூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் நடைபெற உள்ள மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாட்டாளர்கள் குழு, நிகழ்ச்சி நேரம் மற்றும் இடம் ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நாளை திருச்சி, அரியலூர், பெரம்பலூரில் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கும் நிலையில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஆன பொறுப்பாளர்களை நியமித்து அதன் பொதுச்செயலாளர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதன்படி, கீழ்கண்ட நிர்வாகிகளின் விபரங்களை த.வெ.க பொதுச்செயலாளர் வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை விவரம் வருமாறு;
மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்களின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளுக்காகத் தனிக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்டப் பொறுப்பாளர்களை உள்ளடக்கிய இந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் குழுக்கள், வெற்றித் தலைவர் அவர்களின் சுற்றுப் பயணம் மற்றும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் வெற்றிகரமாக நடைபெறுவதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்ளும்.
நாளை திருச்சி, அரியலூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் நடைபெற உள்ள மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாட்டாளர்கள் குழு, நிகழ்ச்சி நேரம் மற்றும் இடம் ஆகியவை பின்வருமாறு:
1. திருச்சி
நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் குழு:
1. T.கரிகாலன்
2. M.சந்திரா
3. M.விக்னேஷ்
4. P.ஜெகன் மோகன்
5. M.ரவிசங்கர்
6. K.அருள்ராஜ்
7. M.செந்தில்
நிகழ்ச்சி நேரம் : காலை 10.35 மணி
இடம்: மரக்கடை எம்.ஜி.ஆர். சிலை அருகில்,
2. அரியலூர் மாவட்டம்:
நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் குழு:
1. M.சிவகுமார்
2. K.ரவிக்குமார்
3. V. திருத்தணி முருகன்
4. P. சித்திரக் கண்ணன்
5. V. பிரவீன் குமார்
நிகழ்ச்சி நேரம் : பிற்பகல் 1.00 மணி முதல் 3.00 மணி வரை
இடம்: பழைய பேருந்து நிலையம் அருகில்.
3. பெரம்பலூர் மாவட்டம்
நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் குழு:
1. K.சிவக்குமார்
2. T.ஆரோக்கியசாமி
3. T.தர்மேந்திரன்
4. A.சின்னதுரை
5. S.P.வினோத்
6. N.வில்லு விஜய்
7. R.P.மகேந்திரன்
8. S.மோகன்ராஜ்
நிகழ்ச்சி நேரம்: மாலை 4.00 மணி
இடம்: குன்னம் பேருந்து நிலையம் அருகில்.
நிகழ்ச்சி நேரம்: மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை
இடம்: வானொலித் திடல், பெரம்பலூர்.
வெற்றித் தலைவர் அவர்களின் ஒப்புதலோடு அமைக்கப்பட்டுள்ள இந்தக் குழுக்களுக்குக் கழகத் தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.
வாகை சூடும் வரலாறு திரும்ப, வெற்றித் தலைவர் அவர்களின் பின்னால் ஒன்று சேர்வோம்!
வென்று காட்டுவோம்!
மேற்கண்டவாறு தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
செய்தி: க.சண்முகவடிவேல்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us