/indian-express-tamil/media/media_files/2025/09/29/tvk-vijay-death-chennai-residence-bomb-threat-at-police-launch-probe-tamil-news-2025-09-29-14-46-04.jpg)
Bomb Threat at Vijay’s Neelankarai Residence
TVK chief Vijay house Bomb Threat: கரூரில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தனது மூன்றாவது கட்ட அரசியல் பரப்புரையை மேற்கொண்டார். இரவு அவர் கரூரில் பேசிய நிலையில், அந்தப் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 8 குழந்தைகள் உள்பட 41 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சென்னை நீலாங்கரையில் உள்ள த.வெ.க தலைவர் விஜய் வீட்டிற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இமெயில் மூலமாக டி.ஜி.பி அலுவலத்திற்கு மிரட்டல் வந்துள்ளது. இதனையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் விஜய் வீட்டிற்கு விரைந்து சென்று சோதனை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், டி.ஜி.பி அலுவலகத்திற்கு மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், விஜய் தனது நீலாங்கரை வீட்டில் இருந்து இன்று காலை 10 மணிக்கு காரில் புறப்பட்டார். அவர் தற்போது பட்டினம்பாக்கத்தில் உள்ள இல்லத்திற்கு சென்றுள்ளார். அங்கு அவர் 15-வது மாடியில் இருக்கும் வீட்டில் இருக்கிறார். அவர் சென்றதுமே அவரது வீட்டிற்கு 3 போலீசார் சென்றுள்ளனர். அவர் இன்று யாரையாவது சந்தித்து ஆலோசனை நடத்துகிறாரா என்ற கேள்வி எழுந்த சூழலில், அவர் யாரையும் சந்திப்பதற்கான நேரம் ஒதுக்கவில்லை என்றும், இன்று மாலையே நீலாங்கரை வீடு திரும்புவார் என்றும் கூறப்படுகிறது.
முன்னதாக, சென்னையில் உள்ள த.வெ.க தலைவர் விஜயின் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. நீலாங்கரையில் உள்ள விஜயின் வீட்டுக்கு ஒரு காவல் ஆய்வாளர் தலைமையில் 15 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவரது வீடு உள்ள சாலையின் இருபுறமும் தடுப்புகள் அமைத்து போலீசார் பாதுகாப்பு அளித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.