திருச்சியில் பரப்புரையைத் தொடங்கும் விஜய்: பேச கோரிய இடங்களில் அனுமதி மறுப்பு?

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தனது பிரச்சாரப் பயணத்தை திருச்சியில் தொடங்க திட்டமிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தனது பிரச்சாரப் பயணத்தை திருச்சியில் தொடங்க திட்டமிட்டுள்ளார்.

author-image
WebDesk
New Update
TVK Head Vijay

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான தனது முதல் பிரச்சாரப் பயணத்தை வரும் செப்டம்பர் 13-ஆம் தேதி திருச்சியில் தொடங்க திட்டமிட்டுள்ளார். "தளபதி 2026" என்ற வாசகத்துடன் இந்தப் பிரச்சாரப் பயணம் அரியலூர், பெரம்பலூர் மற்றும் குன்னம் ஆகிய பகுதிகளையும் உள்ளடக்கியது.

Advertisment

இப்பிரச்சாரத்திற்கான அனுமதி கேட்டு, தமிழக வெற்றிக் கழகம் திருச்சி காவல் ஆணையர் அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளது. அதில், சத்திரம் பேருந்து நிலையம் அருகே வேன் பிரச்சாரம் செய்ய அனுமதி கோரப்பட்டிருந்தது. ஆனால், சத்திரம் பேருந்து நிலையம் குறுகிய பகுதியாக இருப்பதாலும், அப்பகுதியில் அதிக மக்கள் கூட்டம் கூடுவதால் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதாலும், காவல்துறை அந்த இடத்தில் பிரச்சாரம் செய்ய அனுமதி மறுத்துள்ளது.

மாறாக, உழவர் சந்தை அல்லது மரக்கடை போன்ற மாற்று இடங்களில் பிரச்சாரம் செய்யலாம் என காவல்துறை பரிந்துரைத்துள்ளது. இதனை அடுத்து, மாற்று இடத்தைத் தேர்வு செய்வது குறித்து தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் ஆனந்த், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்தத் தகவல், கட்சி வட்டாரங்களில் இருந்து உறுதி செய்யப்பட்டுள்ளது.

முதலில் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள டிவிஎஸ் டோல்ஸ் என்ற இடத்தில் பிரச்சாரத்திற்கு திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அந்த இடம் நெரிசலான பகுதி என்பதால், அங்கு பிரச்சாரம் செய்ய காவல்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர். மாற்று இடமாக மரக்கடை அல்லது உழவர் சந்தை பகுதியை காவல்துறை பரிந்துரைத்துள்ளது. காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டதால், மாற்று இடம் குறித்து கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

Advertisment
Advertisements

தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தனது பிரச்சாரப் பயணத்தை திருச்சியில் தொடங்க திட்டமிட்டுள்ள நிலையில் 'தளபதி 2026' என்ற முழக்கத்துடன் இந்தப் பயணம் செப்டம்பர் 13 ஆம் தேதி தொடங்கவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Vijay TVK

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: