/indian-express-tamil/media/media_files/2024/10/28/R6MVRfbuxQkJpFMZZWhq.jpg)
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சித் தொடங்கியுள்ளார். இந்த கட்சியின் முதல் மாநில மாநாடு கடந்த அக்டோபர் மாதம் 27ஆம் தேதி விக்கிரவாண்டி வி.சாலையில் நடைபெற்றது. பிரம்மாண்டமாக நடைபெற்ற மாநாட்டில் கிட்டதட்ட 4 லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டில் பேசிய கட்சித் தலைவர் விஜய் கட்சியின் கொள்கைகள் மற்றும் அரசியல் எதிரிகள் யார் என்று பேசினார். அவரின் பேச்சு தமிழக அரசியல் களத்தில் பேசு பொருளாக மாறியது.
Thalaivar VIJAY 🤍 pic.twitter.com/oTWoraw5qS
— Vijay Fans Trends (@VijayFansTrends) November 23, 2024
இந்நிலையில் தான் த.வெ.க மாநாடு நடத்த நிலம் வழங்கிய விக்கிரவாண்டி வி.சாலை விவசாயிகளுக்கு அக்கட்சியின் தலைவரும், நடிகருமான விஜய் இன்று (23.11.2024) விருந்தளித்து நன்றி தெரிவித்தார்.
இதற்காக சுமார் 300 விவசாயிகள், நில உரிமையாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் அக்கட்சியின் தலைமை அலுவலகம் அமைந்துள்ள பனையூருக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களுக்கு வடை, சாம்பார், பாயசத்துடன் சைவ விருந்து வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கட்சித் தலைவர் விஜய் விவசாயிகள், நில உரிமையாளர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us