/indian-express-tamil/media/media_files/2025/04/26/5XwNHMtxM0wBee4KtJU4.jpg)
2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் உழவர் சின்னத்தில் போட்டியிட வேண்டி, கோவை விமான நிலையத்தில், பெண் தொண்டர் ஒருவர் த.வெ.க விஜய்க்கு உழவர் சின்னத்தை பரிசளித்துள்ளார்.
தமிழக வெற்றி கழகத்தின் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள அக்கட்சியின் தலைவர் விஜய் கோவை வந்தார். அவரை பார்ப்பதற்காக தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் வந்திருந்தனர்.
விஜய்க்கு உழவர் சின்னம் பரிசு: த.வெ.க தொண்டர்கள் நெகிழச்சி!#TVK | #TVKVijay | #Coimbatorepic.twitter.com/36zPI63141
— Indian Express Tamil (@IeTamil) April 26, 2025
இதில் தமிழக வெற்றிக்கழகம் கோவை புறநகர் கிழக்கு மாவட்டம் சார்பில் தங்கச்செல்வம் என்பவர் மகள் ரிசா கடந்த ஒரு மாதமாக விஜய் வருவதை யொட்டி உழவர் சின்னம் ஒன்றை செய்து விஜய்க்கு அன்பு பரிசாக கொடுக்கவேண்டி விமான நிலையத்தில் காத்திருந்து அவர் வரும்போது கொடுத்தார்.
இதனைத் தொடர்ந்து ரிஷா நம்மிடம் கூறுகையில் "விஜ்யை சந்திப்பதற்காக நமது கலாச்சாரமாக விளங்கும் விவசாயத்தை மையமாக வைத்து இந்த உழவர் சின்னத்தை பரிசாக வழங்கினேன்" என்றார். "கடந்த 2026சட்டமன்ற தேர்தலில் விஜய் அவர்களுக்கு உழவர் சின்னத்தை வழங்க வேண்டும்" என்று தனது மகள் தயார் செய்து உழவர் சின்னத்தை வழங்கியதாக அவரது தந்தை கூறினார்.
செய்தி: பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.