/indian-express-tamil/media/media_files/2025/09/28/tamilnadu-karurk-2025-09-28-19-30-04.jpg)
TVK Vijay rally stampede Live updates: த.வெ.க. தலைவர் விஜய் நேற்று நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் மேற்கொண்டார். கரூர்-ஈரோடு சாலை வேலுச்சாமிபுரத்தில் விஜய் நேற்றிரவு பிரசாரம் மேற்கொண்டார். கரூர் மாவட்ட போலீஸ் தரப்பில் பல்வேறு நிபந்தனைகளுடன் விஜய் பிரசாரம் செய்ய அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
பிரச்சாரம் முடிவடைந்த நிலையில் கரூர் வேலுச்சாமிபுரத்தில் கூட்டத்தில் பலர் மயங்கி விழுந்த நிலையில் அவர்கள் அனைவரும் கரூர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். கூட்டநெரிசலில் சிக்கி மயக்கமடைந்த 39 பேர் உயிரிழந்த நிலையில், பலருக்கு கரூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் பெண்களும் சிறுவர்களும் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நேற்றிரவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து கரூர் விரைந்து பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அதுமட்டுமின்றி அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கரூர் மருத்துவமனைக்கு இரவே விரைந்தனர். மேலும் முன்னாள் அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, விஜயபாஸ்கர் ஆகியோர் மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டனர்.
- Sep 28, 2025 19:27 IST
விஜய் பிரசார பலி விவகாரம் - மருத்துவமனையில் நீதியரசர் அருணா ஜெகதீசன் விசாரணை
விஜய் பிரசார பலி விவகாரம் குறித்து கரூர் அரசு மருத்துவமனைக்கு ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் வருகை தந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 50 பேரிடம் நேரடி விசாரணை மேற்கொண்டார்.
- Sep 28, 2025 19:26 IST
வேலுச்சாமிபுரம் பகுதியில் அனுமதி ஏன்? - ஏடிஜிபி விளக்கம்
தவெக சார்பில் முதலில் லைட்ஹவுஸ் ரவுண்டானா பகுதிக்கு அனுமதி கேட்டனர். அமராவதி நதிப் பாலம் இருப்பதால் லைட் ஹவுஸில் அனுமதி மறுக்கப்பட்டது. இறுதியில் வேலுச்சாமிபுரம் பகுதியில் அனுமதி வழங்கப்பட்டது என ஏடிஜிபி விளக்கம் அளித்துள்ளார்.
- Sep 28, 2025 19:00 IST
விஜய் பிரசார துயரம்; உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி - அண்ணாமலை
கரூரில் த.வெ.க தலைவர் விஜய் பரப்புரையில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என பா.ஜ.க முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்
- Sep 28, 2025 18:52 IST
காவல்துறை ஏன் 7 மணி நேரம் அனுமதி கொடுத்தது? - அண்ணாமலை கேள்வி
காவல்துறை ஏன் 7 மணி நேரம் அனுமதி கொடுத்தது? சனிக்கிழமை வேண்டாம். நீங்க ஏன் அனுமதி கொடுக்கிறீங்க? என த.வெ.க தலைவர் விஜய்க்கு ஆதரவாக தமிழ்நாடு பா.ஜ.க முன்னாள் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்
- Sep 28, 2025 18:33 IST
விஜய் பிரசார துயரம் - தடயவியல் நிபுணர்கள் ஆய்வு
த.வெ.க தலைவர் விஜய் பிரசாரம் நடந்த வேலுசாமிபுரத்தில் சாலையின் அளவு, கழிவு நீர் வாய்க்காலின் அளவு உள்ளிட்டவைகளை தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்
- Sep 28, 2025 18:31 IST
விஜயின் கரூர் பிரசார கட்டமைப்பில் குளறுபடி உள்ளது – அண்ணாமலை
கரூர் பிரசாரத்தில் உளவுத்துறை வேலை செய்யயவில்லை, பொறுப்பு டி.ஜி.பி, ஏ.டி.ஜி.பி கூறியதில் நம்பிக்கை போய்விட்டது. தவறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முதல்வர் பிரச்சினையை நேரடியாக எதிர்கொள்ள வேண்டும். வேலுச்சாமிபுரம் 2000 பேருக்கான இடம் 27,000 பேருக்கான இடமில்லை. விஜயின் கரூர் பிரசார கட்டமைப்பில் குளறுபடி உள்ளது என தமிழக பா.ஜ.க முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்
- Sep 28, 2025 18:13 IST
கரூர் துயரம்; ஏ.டி.ஜி.பி டேவிட்சன் தேவாசீர்வாதம் விளக்கம்
கூட்டம் அதிகம் இருந்ததால் திட்டமிட்ட பகுதிக்கு முன்னரே விஜயை பேச சொன்னோம். ஆனால் கவரேஜ் கிடைக்காது என விழா ஏற்பாட்டாளர்கள் மறுத்துவிட்டனர் என ஏ.டி.ஜி.பி டேவிட்சன் தேவாசீர்வாதம் கூறியுள்ளார்
- Sep 28, 2025 18:08 IST
விசாரணை ஆணையத்தில் நம்பிக்கை இல்லை, சி.பி.ஐ விசாரணை வேண்டும் – அண்ணாமலை
தமிழக அரசுக்கு கூட்டத்தை கட்டுப்படுத்த தெரியவில்லை. பொறுப்பு டி.ஜி.பி ஏன் நியமனம் செய்யப்பட்டார்? கரூரில் போலீசார் 100 பேர் கூட இல்லை, மாவட்ட ஆட்சியர், எஸ்.பி.,யை பணிநீக்கம் செய்ய வேண்டும், பிரசாரத்தில் ஏன் மின்தடை செய்யப்பட்டது? விசாரணை ஆணையத்தில் நம்பிக்கை இல்லை, கரூர் விஜய் பிரசார உயிரிழப்பு விவகாரத்தில் சி.பி.ஐ விசாரணை வேண்டும் பா.ஜ.க முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்
- Sep 28, 2025 17:38 IST
நம் வாழ்க்கையை நாம்தான் பார்த்துக்கொள்ள வேண்டும் -நடிகர் ராஜ்கிரண்
இனிமேலும் இப்படியான கூட்டங்களில் போய் உயிரை விடாமல் நம் வாழ்க்கையை நாம்தான்பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற புத்தியை எல்லா பாமர மக்களுக்கும் கொடு இறைவா... கரூர் விஜய் பரப்புரை நெரிசலில் 40 பேர்உயிரிழந்தது தொடர்பாக நடிகர் ராஜ்கிரண் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
- Sep 28, 2025 17:26 IST
கரூரில் நெரிசல் ஏற்பட்ட பகுதியில் அருணா ஜெகதீசன் விசாரணை
கரூரில் நெரிசல் ஏற்பட்ட பகுதியில் ஒரு நபர் ஆணையத் தலைவர் அருணா ஜெகதீசன் விசாரணையை தொடங்கினார்.
- Sep 28, 2025 17:08 IST
முப்பெரும் விழாவிற்கு கட்டுப்பாடுகள் இருந்தன - கனிமொழி
எந்தவொரு கட்சி நிகழ்ச்சி என்றாலும் கட்டுப்பாடுகள் இருக்கும். சமீபத்தில்கூட இதே கரூரில் திமுகவின்முப்பெரும் விழாவை மாவட்ட செயலாளர் நடத்தினார். அதற்கு கட்டுப்பாடுகள் இல்லாமலா இருந்திருக்கும்? ஆளுங்கட்சிக்கும் கட்டுப்பாடுகள் இருக்கிறது. அது யாரையும் அச்சுறுத்தவோ இடைஞ்சல் செய்யவோ போடப்படுவதில்லை. அவர்களின் பாதுகாப்பு, மக்களின் பாதுகாப்புக்காக போடப்பட்டுவது என்று கனிமொழி தெரிவித்துள்ளார்.
- Sep 28, 2025 17:04 IST
கரூர் துயரம் ஏடிஜிபி விளக்கம்
நாமக்கல்லை விட கரூரில் அதிக அளவில் காவலர்கள் குவிக்கப்பட்டிருந்தனர். 30 நிமிடங்களில் வர வேண்டிய இடத்தை 2 மணி நேரமாக விஜய் கடந்து வந்தார் என்று ஏடிஜிபி விளக்கம் அளித்துள்ளார்.
- Sep 28, 2025 17:03 IST
நலம் விசாரித்த டிடிவி தினகரன்
கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை சந்தித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நலம் விசாரித்தார்.
- Sep 28, 2025 17:02 IST
கல்வி செலவு ஏற்பு
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோரின் குடும்பத்தைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்களின் முழு கல்விச் செலவையும் எஸ்.ஆர்.எம். கல்விக் குழுமம் ஏற்கும் என பாரிவேந்தர் தெரிவித்துள்ளார்.
- Sep 28, 2025 16:42 IST
மின்தடை ஏற்படவில்லை - மின்வாரிய தலைமை பொறியாளர் ராஜலட்சுமி
கரூரில் விஜய்யின் பிரச்சார கூட்டத்தின்போது மின்தடை ஏற்பட்டது என்ற குற்றச்சாட்டுக்கு மின்சாரத்துறை மறுப்பு தெரிவித்துள்ளது. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஜெனரேட்டரை பயன்படுத்தி ஒளிரவிட்ட விளக்குகள் தான் அணைந்தன, மின்தடை ஏற்படவில்லை என மின்வாரிய தலைமை பொறியாளர் ராஜலட்சுமி தெரிவித்துள்ளார்.
- Sep 28, 2025 16:21 IST
விஜய் பரப்புரையில் 500 போலீசார் பாதுகாப்பு அளித்தனர் - ஏ.டி.ஜி.பி பேட்டி
சம்பவம் நடந்ததும் முதலமைச்சர் உடனடியாக கரூர் வந்தார். எந்த அமைப்பாக இருந்தாலும் காவல்துறைக்கு ஒத்துழைப்பு தந்தால்தான் போதிய பாதுகாப்பு தர முடியும். விஜய் பிரசாரத்திற்கு மொத்தம் 500 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தவெக கூட்டத்தில் கல் வீச்சு சம்பவம் எதுவும் இல்லை. விதிகளின்படியே காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுபட்டனர். கரூர் ரவுண்டானாவிற்கு விஜய் வரும் போதே 6 மணி ஆகிவிட்டது. போதிய ஆம்புலன்ஸ் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. சம்பவம் அறிந்ததும் ஆம்புலன்ஸ் வந்தது என்று ஏடிஜி.பி. டேவிட்சன் தேவாசீர்வாதம் தெரிவித்துள்ளார்.
- Sep 28, 2025 16:05 IST
இடம் தொடர்பாக தம்பிக்கு (விஜய்) அனுபவம் இல்லை - சீமான்
இடம்தொடர்பாகதம்பிக்குஅனுபவம்இல்லை; எனக்கு 15 ஆண்டுகளாகஎங்கெல்லாம்கூட்டம்கூட்டமுடியாதோ, முட்டுச்சந்தாகபார்த்துதான்இடம்ஒதுக்குவார்கள்; ஆனால்பக்குவப்பட்டுபழகிவிட்டேன். இத்தனைஉயிர்கள்போயுள்ளனஎன்றதும்அங்குயாராகஇருந்தாலும்ஒருபதற்றமும்படபடப்புஇருக்கும். அதில்முடிவெடுத்துதிடீரெனபுறப்பட்டுவுட்டாரெனநினைக்கிறேன்என்றுசீமான்தெரிவித்துள்ளார்.
- Sep 28, 2025 15:50 IST
நேசித்தோரை இழந்த குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த இரங்கல் - நடிகர் ரவி மோகன்
கரூரில் நடந்த சம்பவத்தை அறிந்து மிகவும் வேதனையுற்றேன்; நேசித்தவர்களை இழந்து நிற்கும் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கல் இந்த கடுமையான நேரத்தில், அவர்களுக்கு வலிமையும் தைரியமும் கிடைக்க பிரார்த்திக்கிறேன்; ஆன்மாக்கள் சாந்தியடையட்டும் என்று நடிகர் ரவி மோகன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
- Sep 28, 2025 15:48 IST
குழந்தைகளை பலியாக்காதீர் - நடிகர் பார்த்திபன்
"ஓட்டு போடுங்கள் - விரும்பும் நபர்களுக்கு, ஆனால் கூட்டம் போடாதீர்கள் - வாழ்வை தொலைக்க! அதிலும் இறுதி ஊர்வலத்தில் பிய்த்து எறியப்படும் பிஞ்சு பூக்களாய் குழந்தைகளை பலியாக்காதீர்கள்!" என்று கரூர் தவெக கூட்டநெரிசல் இறப்புகளை குறிப்பிட்டு இயக்குநர், நடிகர் பார்த்திபன் ராதாகிருஷ்ணன் வேதனையுடன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
- Sep 28, 2025 15:43 IST
கரூரில் நடந்தது என்ன?- ஆட்சியர் விளக்கம்
தமிழக வெற்றிக் கழக மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 40 பேர் உயிரிழந்தது பெரும் துயரத்தை ஏற்படுத்திய நிலையில் இந்தச் சம்பவம் தொடர்பாக கரூர் ஆட்சியர் விளக்கமாக பேசியுள்ளார்.
#TVKVijayKarurStampede | #DistrictCollector | கரூரில் நடந்தது என்ன?- ஆட்சியர் விளக்கம் | #News18TamilNadupic.twitter.com/tGgfzhwYkE
— News18 Tamil Nadu (@News18TamilNadu) September 28, 2025 - Sep 28, 2025 15:32 IST
அனைத்து உடல்களும் ஒப்படைப்பு
கரூர் தவெக பரப்புரையில் உயிரிழந்த |40 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது
- Sep 28, 2025 15:27 IST
தமிழகத்தில் நாளை ஒரு நாள் கடையடைப்பு
கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு எதிரொலியாக தமிழகம் முழுவதும் நாளை கடையடைப்பு என்று வணிகர் சங்கங்களின் பேரவை தெரிவித்துள்ளது.
- Sep 28, 2025 15:18 IST
போலீஸ் ஓரளவுதான் பாதுகாப்பு தர முடியும் - கார்த்தி சிதம்பரம்
அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கு போலீசார் ஓரளவுதான் பாதுகாப்பு தர முடியும். கரூர் சம்பவத்தில் இருந்து பாடங்களை கற்க வேண்டும்; நெரிசல் பின்னணியில் திமுக என்று கூறுவோர் ஆதாரங்களை விசாரணையில் சொல்லட்டும் என்று எம்.பி. கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.
- Sep 28, 2025 14:48 IST
சிகிச்சைப் பெற்று வருபவர்களுக்கு தேவையான உதவிகள் குறித்து துணை முதலமைச்சர் ஆலோசனை
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி சிகிச்சைப் பெற்று வருபவர்களுக்கு தேவையான உதவிகள் குறித்து அனைத்து துறை உயர் அலுவலர்களுடன் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்
- Sep 28, 2025 14:40 IST
கரூர் துயரம் - சிகிச்சை பெறுபவர்களிடம் நலம் விசாரித்த கே.பாலகிருஷ்ணன்
கரூரில் விஜயின் பரப்புரை கூட்ட நெரிசலில் சிக்கி சிகிச்சை பெற்று வருபவர்களிடம் நலம் விசாரித்துள்ளார் சிபிஎம் மையக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன்.
- Sep 28, 2025 14:34 IST
எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்
"எடப்பாடி பழனிசாமி பொறுப்பற்ற முறையில் மக்கள் மத்தியில் வதந்திகளை பரப்புகிறார்; கற்பனை கதைகளை பேசி சுய ஆதாயம் தேடுவது அரசியல் அநாகரீகம்" என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். முன்னதாக பரப்புரைக்கு இடம் கொடுப்பதில் காவல்துறை பாரபட்சமாக செயல்படுகிறது என இபிஎஸ் குற்றஞ்சாட்டியிருந்தார்.
- Sep 28, 2025 14:18 IST
“பாதுகாப்பு இல்லை என பொதுவாகச் சொல்லிவிடக் கூடாது" - சீமான்.
“விஜயின் பரப்புரையில் போலீஸ் பாதுகாப்பு இல்லை எனச் சொல்வதை ஏற்க முடியாது. அத்தனை ஊர்களில் மிகப்பெரிய கூட்டத்தை விஜய் கூட்டும் போதெல்லாம் பாதுகாப்பு கொடுத்தது காவல்துறைதான். கரூரில் நெரிசலில் சிக்கிய பலரை ஆம்புலன்சில் ஏற்றி காவலர்கள் மருத்துவமனையில் சேர்த்துள்ளார்கள்" என்று சீமான் தெரிவித்துள்ளார்.
- Sep 28, 2025 14:15 IST
"பெரிய இடத்தில் அனுமதி தந்திருக்கலாம்” - அன்புமணி
விஜயின் பரப்புரைக்கு பெரிய இடத்தில் அனுமதி தந்திருக்க வேண்டும். கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் பலி என்பதை தடுத்திருக்கலாம்; தவிர்த்திருக்கலாம்; கூட்டத்தில் தண்ணீர், உணவு வசதி செய்திருக்க வேண்டும்; மக்களும் பாதுகாப்பாக வந்திருக்க வேண்டும் என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.
- Sep 28, 2025 14:08 IST
கூட்ட நெரிசல் உயிரிழப்பு - அன்புமணி நேரில் ஆறுதல்
கரூர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளவர்களுக்கு அன்புமணி ஆறுதல் . "விசாலமான இடத்தில் பிரசாரத்திற்கு அனுமதி கொடுத்திருக்க வேண்டும். குழந்தைகள், பெண்களை அழைத்து வந்திருக்கக் கூடாது. சினிமாகாரர்களுக்கு கூட்டம் கூடும் தவறான கலாச்சாரம் தமிழகத்தில் உள்ளது. பிரசாரத்திற்கு அனுமதி, கட்சிகளுக்கிடையே பாரபட்சம் கூடாது" என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.
- Sep 28, 2025 14:07 IST
“திமுக அரசு மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர்” - சசிகலா
கரூர் கூட்ட நெரிசல் விபத்துக்கு காவல்துறையின் மெத்தனப்போக்குத்தான் முதல் காரணம். காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர், சும்மா வந்தோம் பார்த்தோம் இருக்கக்கூடாது, உட்கார்ந்து வேலை செய்யணும் என்று சசிகலா கூறியுள்ளார்.
- Sep 28, 2025 14:00 IST
விஜய் கூட்ட நெரிசலில் 40 பேர் பலி: காவல்துறையின் மெத்தனப்போக்குதான் முதல் காரணம் - சசிகலா
“கரூர் கூட்ட நெரிசல் விபத்துக்கு காவல்துறையின் மெத்தனப்போக்குதான் முதல் காரணம். மாநில அரசு மட்டும் விசாரணை மேற்கொண்டால் சரியாக வராது. மத்திய அரசு தலையிட்டு உண்மையான தீர்வு காண வேண்டும்”- சசிகலா என்று சசிகலா வலியுறுத்தியுள்ளார்.
- Sep 28, 2025 13:53 IST
விஜய் கூட்ட நெரிசலில் 40 பேர் பலி: சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும் - ஓ.பி.எஸ் வலியுறுத்தல்
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், “த.வெ.க கூட்ட நெரிசல் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்; நெஞ்சை உலுக்கும் சம்பவம் இது. இறந்தோரின் குடும்ப சூழலைக் கருத்தில் கொண்டு கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
- Sep 28, 2025 13:50 IST
விஜய் கூட்ட நெரிசல் சோகம்: சாலையை மறிச்சு பரப்புரை நடத்தியதுதான் அடிப்படை காரணம் - பாலகிருஷ்ணன்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கே.பாலகிருஷ்ணன், “சாலையை மறிச்சு பரப்புரை நடத்தியதுதான் இந்த சம்பவத்திற்கு அடிப்படையான காரணம். இதுமாதிரியான இடங்களில் எப்படி பரப்புரைக்கு அனுமதி கேட்கிறாங்க? அவர் வந்ததிலும் பெரிய காலதாமதம் ஏற்பட்டிருக்கிறது. இதுமாதிரி சாலைகளில் பரப்புரை கூட்டங்களுக்கு இனிமேல் அனுமதிக்கக் கூடாது” என்று வலியுறுத்தியுள்ளார். - Sep 28, 2025 13:48 IST
மரணங்களின் பொறுப்பிலிருந்து தப்பித்துக்கொள்ள நீதிமன்றத்தை நாடுகிறார் விஜய் - வன்னி அரசு விமர்சனம்
கரூரில் விஜயின் பிரச்சாரக் கூட்டத்தில் 40 பேர் உயிரிழந்தது தொடர்பாக தாமாக முன்வந்து விசாரிக்க உயர் நீதிமன்றத்தில் முறையிட்ட நிலையில், வி.சி.க துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு, “இந்த மரணங்களின் பொறுப்பிலிருந்து தப்பித்துக்கொள்ள நீதிமன்றத்தை நாடுகிறார் விஜய்” என்று விமர்சித்துள்ளார்.
- Sep 28, 2025 13:43 IST
சினிமா கலாச்சாரத்தில் இருந்து மக்கள் வெளியில் வரவேண்டும் - அன்புமணி ராமதாஸ்
கரூரில் விஜயின் பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி் காயமடைந்தவர்களை சந்தித்து ஆருதல் கூறிய பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய பா.ம.க தலைவர் அன்புமணி ராமதா, “ஆளுங்கட்சி என்றால் பெரிய இடம் இருக்கட்சி என்றால் சின்ன இடம் என பாரபட்சம் காட்டக்கூடாது. தான் பங்கேற்கும் போராட்டங்கள் கூட்டங்களிலும் திட்டமிட்டு சில செயல்கள் நடத்தப்படுகிறது. அரசு, காவல்துறை பொதுமக்கள் என அனைவரும் பொறுப்புடன் நடந்து கொள்வது அவசியம். காவல் துறை திட்டமிட்டு முறையாக நடவடிக்கை எடுத்திருந்தால் உயிர் வலிகளை தவிர்த்து இருக்கலாம். பெரிய கூட்டங்கள் நடத்தும்போது குடிநீர் உணவு திட்டமிடல்கள் வேண்டும். த.வெ.க பிரச்சாரம் நடத்த கேட்ட இடத்திற்கு காவல்துறை அனுமதி கொடுத்திருக்க வேண்டும். பெரிய இடத்தில் அனுமதி கொடுத்திருக்க வேண்டும். இவ்வளவு குறுகலான இடத்திலா அனுமதி கொடுப்பது. சினிமா கலாச்சாரத்தில் இருந்து மக்கள் வெளியில் வரவேண்டும் மக்களும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்” என கூறினார்.
- Sep 28, 2025 13:33 IST
விஜயின் கூட்ட நெரிசலில் 40 உயிர்கள் பலியானதற்கு அரசு பதில் கூற வேண்டும் - பிரேமலதா விஜயகாந்த்
கரூரில் விஜயின் பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆருதல் கூறிய பின்னர், செய்தியாளர்களிடம் பேச்ய தே.மு.தி.க பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், “கூட்ட நெரிசலில் 40 உயிர்கள் பலியானதற்கு அரசு உரிய பதில் கூற வேண்டும். குறுகலான பாதை நெரிசல் மிகுந்த பாதை என நான் சந்தித்த பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் கூறுகின்றனர். இப்படி ஒரு குறுகலான நெரிசல் மிகுந்த இடத்தை தேர்தல் பிரச்சாரத்திற்கு ஒதுக்கியது ஏன். போலீசார் தடியடி நடத்தியபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டதும் உயிர்இழப்புகளுக்கு காரணம் என மக்கள் கூறுகின்றனர். பெரிய மைதானம் போன்ற இடத்தில் தான் விஜய் பிரச்சாரத்திற்கு இடம் ஒதுக்கி இருக்க வேண்டும். இது யாருடைய தவறு ” என்று பிரேமலதா விஜயகாந்த் கேள்வி எழுப்பினார்.
- Sep 28, 2025 13:20 IST
விஜய் கூட்ட நெரிசலில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி பகிந்து அளிக்கப்படும் - செல்வப்பெருந்தகை
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் விஜய், கரூரில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக 1 கோடி ரூபாய் பகிர்ந்து அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
- Sep 28, 2025 13:17 IST
த.வெ.க பிரசார கூட்டத்திற்கு தடை கோரி ஐகோர்ட்டில் முறையீடு; இன்று மாலை விசாரனை
த.வெ.க பிரசார கூட்டத்திற்கு தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மனு இன்று மாலை 4.30 மணி நீதிபதி செந்தில்குமார்
முன் விசாரணைக்கு வருகிறது. - Sep 28, 2025 13:12 IST
விஜய் கூட்ட நெரிசல்: உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 40 ஆக உயர்வு
கரூரில் த.வெ.க தலைவர் விஜயின் பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மேலும் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளடதாக தகவல் வெளியாகி உள்ளது.
- Sep 28, 2025 13:05 IST
விசாரனை நடத்த கரூர் புறப்பட்டார் நீதி அரசர் அருணா ஜெகதீசன்
கரூர் கூட்ட நெரிசலில் 39 பேர் பலியானது தொடர்பான விசாரணைக்காக நீதி அரசர் அருணா ஜெகதீசன் சென்னையில் இருந்து புறப்பட்டார். சென்னை விமான நிலையத்தில் இருந்து திருச்சி செல்லும் நிதியரசர் அருணா ஜெகதீசன் அங்கிருந்து கரூர் செல்ல உள்ளார்.
- Sep 28, 2025 13:04 IST
விஜய் கூட்ட நெரிசலில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு ஆருதல் கூற கரூர் புறப்பட்டார் கனிமொழி
கரூர் கூட்ட நெரிசலில் 39 பேர் பலியான நிலையில், தி.மு.க எம்.பி கனிமொழி பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து ஆறுதல் கூற கரூர் புறப்பட்டார். கரூர் துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் கூற சென்னையில் இருந்து கரூருக்கு புறப்பட்டா தி.மு.க எம்.பி கனிமொழி சென்னை விமான நிலையத்திலிருந்து விமான மூலமாக திருச்சி செல்லும் கனிமொழி அங்கிருந்து கரூருக்கு செல்ல உள்ளார்.
- Sep 28, 2025 12:54 IST
விஜய் கரூர் செல்வாரா? த.வெ.க நிர்வாகி நிர்மல் குமார் பதிலளிக்க மறுப்பு
கரூரில் த.வெ.க தலைவர் விஜயின் பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆருதல் கூற த.வெ.க தலைவர் விஜய் கரூர் செல்வாரா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, த.வெ.க இணைப் பொதுச் செயலாளர் சி.டி.நிர்மல் குமார் பதிலளிக்க மறுத்துவிட்டார்.
- Sep 28, 2025 12:44 IST
நாம் எல்லோரும் சேர்ந்து இந்த தவறை செய்து விட்டோம் - சீமான்
கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “உறவுகளை இழந்தவர்களுக்கு எப்படி ஆறுதல் சொல்வது என்று தெரியவில்லை. நாம் எல்லோரும் சேர்ந்து இந்த தவறை செய்து விட்டோம். எதிர்காலத்தில் மீண்டும் நிகழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஆம்புலன்ஸ் வருவது இயல்பானது தான். பொதுக்கூட்டம் நடைபெறும் போது ஆம்புலன்ஸ் வாகனம் வந்தால் வழி விட வேண்டும். த.வெ.க பொதுக்கூட்டத்துக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கவில்லை என்று பொதுவாக கூறி விட முடியாது.” என்று சீமான் கூறினார்.
- Sep 28, 2025 12:39 IST
விஜய் கூட்ட நெரிசல்: உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மத்திய அரசு ரூ.2 லட்சம் நிவாரணம் - மோடி அறிவிப்பு
தமிழ்நாட்டின் கரூர் மாவட்டத்தில் அரசியல் பேரணியின் போது ஏற்பட்ட சோகமான கூட்ட நெரிசல் சம்பவத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மத்திய அரசு நிவாரண உதவி அறிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த 39 பேரின் குடும்பங்களுக்கு பிரதமர் தேசிய நிவாரண நிதியில் (PMNRF) இருந்து தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
மேலும், இந்த விபத்தில் காயம் அடைந்தவர்களுக்குத் தலா ரூ.50,000 நிவாரண உதவி வழங்கப்படும் என்றும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவம் குறித்து பிரதமர் மோடி அவர்கள் தனது ஆழ்ந்த இரங்கலையும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
- Sep 28, 2025 12:29 IST
விஜய் கூட்ட நெரிசல் சோகம்: உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு சீமான் நேரில் ஆறுதல்
கரூரில் த.வெ.க தலைவர் விஜயின் கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நாம் தமிழர் சீமான் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “இது எதிர்பாராத விபத்து. இனிமேல் இது மாதிரி பெருந்துயரம் நிகழக் கூடாது. இந்த துயரத்தில் இருந்து மீண்டு வர வேண்டும். ஊடகங்கள் 24 மணி நேரமும் இதே செய்தியைக் காட்டக் கூடாது. அப்படி காட்டுவதால் அங்கே செல்ல வேண்டும் என்ற ஆர்வத்தை ஏறடுத்துகிறது” என்று கூறினார்.
- Sep 28, 2025 12:20 IST
விஜய் கூட்ட நெரிசல்: தாமாக முன்வந்து விசாரிக்க த.வெ.க முறையீடு - நாளை விசாரனை - ஐகோர்ட்
கரூரில் த.வெ.க தலைவர் விஜயின் கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்தது தொடர்பாக தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என்று த.வெ.க சார்பில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் முறையீடு செய்யப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி நாளை மதியம் 2.15 மணிக்கு விசாரிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
- Sep 28, 2025 11:47 IST
கண்களும், மனதும் கலங்கித் தவிக்கிறது - த.வெ.க. தலைவர் விஜய் அறிக்கை!
கற்பனைக்கும் எட்டாத வகையில், கரூரில் நேற்று நிகழ்ந்ததை நினைத்து இதயமும் மனதும் மிகமிகக் கனத்துப் போயிருக்கும் சூழல். நம் உறவுகளை இழந்து தவிக்கும் பெருந்துயர்மிகு மனநிலையில், என் மனம் படுகிற வேதனையை எப்படிச் சொல்வதென்றே தெரியவில்லை. கண்களும் மனசும் கலங்கித் தவிக்கிறேன்.
- Sep 28, 2025 11:25 IST
உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் - த.வெ.க தலைவர் விஜய் அறிவிப்பு
கரூரில் நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்க உள்ளதாக த.வெ.க தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.
- Sep 28, 2025 11:04 IST
புஸ்ஸி ஆனந்த் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்கு
கரூரில் 39 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக த.வெ.க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குகள் ஜாமீனில் வெளிவர முடியாதவை என தகவல் வெளியாகியுள்ளது.
- Sep 28, 2025 11:00 IST
கரூர் துயரம் - தமிழக அரசிடம் அறிக்கை கேட்ட ஆளுநர்
கரூர் த.வெ.க கூட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தமிழக அரசிடம் ஆளுநர் ஆர்.என்.ரவி அறிக்கை கேட்டுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.