நெல் மூட்டைக்கு ரூ. 40 கமிஷன்; விவசாயிகள் பொய் சொல்ல மாட்டங்க: திருவாரூரில் விஜய் பேச்சு

"கொள்முதல் மையங்கள்ல ஒரு மூடை நெல்லை ஏற்றி இறக்குறதுக்கு 40 கிலோ மூட்டைக்கு 40 ரூபாய் கமிஷன் வாங்குறாங்களாம். அரசாங்கமே ஒரு மூட்டைக்கு 10 ரூபாய் கொடுக்குறாங்க." என்று விஜய் கூறினார்.

"கொள்முதல் மையங்கள்ல ஒரு மூடை நெல்லை ஏற்றி இறக்குறதுக்கு 40 கிலோ மூட்டைக்கு 40 ரூபாய் கமிஷன் வாங்குறாங்களாம். அரசாங்கமே ஒரு மூட்டைக்கு 10 ரூபாய் கொடுக்குறாங்க." என்று விஜய் கூறினார்.

author-image
WebDesk
New Update
TVK Vijay Thiruvarur Rally speech TN CM MK Stalin DMK Govt Farmer Tamil News

"உங்களுடன் ஸ்டாலின். உங்களுடன் ஸ்டாலின்னு உங்க குடும்பத்துக்கு மட்டும்தான் சொல்லிக்கனும். மக்கள் கிட்ட எல்லாம் அதை சொல்லவே முடியாது." என்று விஜய் திருவாரூரில் பேசினார்.

தமிழக வரலாற்றில் திருவாரூர் தேருக்கு பிறகு, திருவாரூர் கமலாலயம் தெப்பக்குளம் பகுதியில் அதிக அளவு மக்கள் கூடியது தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்க்கு மட்டுமே என்பதாக இன்றைய பிரச்சார பகுதி அமைந்திருந்தது. திருவாரூர் தொகுதியில் தெற்கு வீதியில் த.வெ.க தொண்டர்கள் மத்தியில் விஜய் தமது இரண்டாம் கட்ட பிரச்சாரத்தை மேற்கொண்டார். விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக பச்சை துண்டை அணிந்து பிரச்சார வாகனத்தில் தோன்றிய விஜய் பேசியதாவது:- 

Advertisment

"எல்லாரும் எப்படி இருக்கீங்க? எல்லாரும் பத்திரமா இருக்கீங்களா? திருவாரூர்னாலே தியாகராஜர் கோயில் ஆழித்தேர்தான் ஞாபகம் வரும். திருவாரூர் தேர்னா சும்மாவாங்க? இந்த மண்ணோட அடையாளமாச்சே.. ரொம்ப நாளா ஓடாம இருந்த திருவாரூர் தேரை நாங்கதான் ஓட வெச்சோம்னு மார்தட்டி சொன்னது யாருனு உங்களுக்கே தெரியும். ஆனால், அவரோட மகன் மாண்புமிகு சி.எம். அவர்கள் இப்ப என்ன செய்றாங்க? நல்லா ஓட வேண்டிய தமிழ்நாடுங்குற தேரை நாலு பக்கமும் கட்டையை போட்டு ஆடாம அசையாம அப்படியே நிப்பாட்டிட்டாரு. இதை பெருமையா வேற சொல்லிக்குறாரு. சவாலா வேற சொல்லிக்குறாரு. திருவாரூர் மாவட்டம்தான் அவங்களோட சொந்த மாவட்டம்னு பெருமையா சொல்லிக்குறாங்க. ஆனா, திருவாரூர் இங்க கருவாடா காயுது. அதை கண்டுக்கவே மாட்டேங்குறாங்க.

அவங்க அப்பா பேருல பேனா வெக்கனும்னு சொல்றீங்க. எல்லா இடத்துக்கும் அவங்க அப்பா பேரை வெக்கனும்னு சொல்றீங்க. சாரி. உங்க அப்பா பேரை வெக்குறீங்க. ஆனால், உங்க அப்பா பொறந்த இந்த திருவாரூர் மாவட்டத்துல ஒரு அடிப்படை சாலை வசதி கூட சரியா இல்லையே சார். நாகப்பட்டினம் மாதிரியே திருவாரூர்ல அதிகமா குடிசைப் பகுதிகள் இருக்கு. நண்பா... உன்னதான் கேக்குறேன். இங்க இருக்கற யூனிவர்சிட்டில எல்லா டிபார்ட்மண்ட்டும் இருக்கு? இருக்காதே. இங்க இருக்கற மெடிக்கல் காலேஜுக்கே வைத்தியம் பாக்குற நிலைமைலதான் இருக்கு. இங்க இருக்கற மெடிக்கல் காலேஜ்ல உபகரணங்கள்வேலை செய்யுதா? செய்யாதே.

திருவாரூர் ஒரு மாவட்டத்தோட தலைநகர். ஆனா, பஸ் ஸ்டாண்டுக்கு தேசிய நெடுஞ்சாலைல இருந்து சரியா ரோடு இருக்காதே.. கும்பகோணம் - ஜெயங்கொண்டம் - விருத்தாசலம் - நீடாமங்கலத்துக்கு ரயில் பாதை வேணும்ங்குற கோரிக்கை 50 வருஷமா நிறைவேறாம இருக்கு. இந்த மாவட்டத்துல ஒரு மந்திரி இருக்காரு. அவரோட வேலை என்ன தெரியுமா? முதல்வர் ஸ்டாலின் வீட்டுக்கு சேவை செய்யுறது. மக்கள்தான் முக்கியம்னு அவருக்கு நாம புரிய வெக்கனும். உங்களுடன் ஸ்டாலின். உங்களுடன் ஸ்டாலின்னு உங்க குடும்பத்துக்கு மட்டும்தான் சொல்லிக்கனும். மக்கள் கிட்ட எல்லாம் அதை சொல்லவே முடியாது. ஏன்னா நீங்கதான் மக்கள் கூடவே இல்லையே. இதை நான் சொல்லல. இதை ஒரு வார பத்திரிகைல சொல்லி இருந்தாங்க. அதைதான் நான் சொல்றேன்.

Advertisment
Advertisements

இன்னொரு முக்கியமான விஷயம். இந்த மாவட்டத்துல உள்ள கொள்முதல் மையங்கள்ல ஒரு மூடை நெல்லை ஏற்றி இறக்குறதுக்கு 40 கிலோ மூட்டைக்கு 40 ரூபாய் கமிஷன் வாங்குறாங்களாம். அரசாங்கமே ஒரு மூட்டைக்கு 10 ரூபாய் கொடுக்குறாங்க. ஒரு டன்னுக்கு 1000 ரூபாய் கமிஷன். இந்த 4 ஆண்டுகள்ல பல கோடிகளை விவசாயிகள் கிட்ட இருந்து கமிஷனா புடுங்கியிருக்காங்க. இதை வேற யாரும் சொல்லியிருந்தா கூட நம்பியிருக்க மாட்டேன். ஆனா என்கிட்ட சொன்னதே விவசாயிங்கதான். விவசாயிங்க பொய் சொல்ல மாட்டாங்க. முதல்வர் சார். இது உங்க ஆட்சியில நடந்திருக்கு.

உங்களுக்கு வேணும்னா 40-க்கு 40-ன்னா அது எலக்‌ஷன் ரிசல்ட்டா இருக்கலாம். ஆனால், டெல்டா விவசாயிகளுக்கு 40க்கு 40னா அவங்க வயித்துல அடிச்சு நீங்க வாங்குன கமிஷன். இது உங்க ஆட்சியில நடந்திருக்கு சி.எம்.சார் இதுக்கு என்ன சொல்ல போறீங்க?. நான் அரியலூர்ல சொன்னதை திரும்பவும் உங்க கிட்ட சொல்றேன். என்னடா இவன் கேள்வியா கேக்குறான்னு நினைக்காதீங்க. தீர்வை தேடி போறதுதான் நம்ம லட்சியமே. நம்ம தேர்தல் அறிக்கைல அதுக்கான விளக்கத்தை தெளிவா கொடுப்போம். பொய்யான அறிக்கை கொடுக்க மாட்டோம். எது நடைக்கு சாத்தியமோ எது உண்மையோ அதை மட்டும்தான் சொல்லுவோம் அதை மட்டும்தான் செய்வோம். 

கல்வி, ரேஷன், பெண்கள் பாதுகாப்பு, அடிப்படை தேவைகளில் நோ காம்ப்ரமைஸ். சிம்பிளா சொல்லனும்னா ஏழ்மை இல்லாத தமிழகம். ஊழல் இல்லாத தமிழகம். குடும்ப ஆதிக்கம் இல்லாத தமிழகம். உண்மையான மக்களாட்சி. மனசாட்சி உள்ள மக்களாட்சி. கான்பிடண்ட்டா இருங்க மக்களே. வெற்றி நிச்சயம். மீண்டும் சந்திக்கும் வரை நன்றி வணக்கம். நண்பா. ஒரே ஒரு டவுட். எங்க போனாலும் இது சும்மா கூட்டம், ஓட்டு போட மாட்டாங்கனு சொல்றாங்க. அப்படியா? இது என்ன சும்மா கூட்டமா? 

இவ்வாறு  த.வெ.க தலைவர் விஜய் தெரிவித்தார் 

செய்தி: க.சண்முகவடிவேல். 

Tamilaga Vettri Kazhagam Vijay Thiruvarur

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: