தமிழ் நிலக் கடவுள் முருகப்பெருமானை போற்றுவோம் என தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் மக்கள் அனைவருக்கும் தைப்பூச வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இன்று தைப்பூசம் திருநாள் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் முருகனின் அறுபடை வீடுகள் உட்பட அனைத்து முருகன் கோயிலிலும் இன்று சிறப்பு பூஜை நடைபெற்று வருகிறது என்பதும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முருகனை தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் தைப்பூசம் திருநாளை முன்னிட்டு பல அரசியல் தலைவர்களும் தங்களது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
"தனித்துயர்ந்த
குன்றுகள் தோறும்
வீற்றிருக்கும்
தமிழ்நிலக் கடவுள்;
உலகெங்கும் வாழும்
தமிழர்களின்
தனிப்பெரும் கடவுள்
முருகப் பெருமானைப்
போற்றுவோம்!
அனைவருக்கும் தைப்பூசத் திருநாள் வாழ்த்துகள்!" என்று பதிவிட்டுள்ளார்.