சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக மாணவி அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார்.
இந்த சம்பவத்தை கண்டித்து மாணவர்கள் பல்வேறு அரசியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மாணவ, மாணவிகள் பாதுகாப்பு விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுறுத்தினார். தற்போது பாதுகாப்பிற்காக குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. மேலும் விசாரணை செய்ய தேசிய மகளிர் ஆணையம் நேரில் வரவுள்ளது. சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்து உரிய இழப்பீடு வழங்க உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கைப்பட எழுதியுள்ள கடிதத்தில், "அன்புத் தங்கைகளே. தமிழகத்தில் கல்வி வளாகம் முதல் கொண்டு, ஒவ்வொரு நாளும் தாய்மார்கள் என்னருமைத் தங்கைகள், பெண் குழந்தைகள் என அணைத்துத் தரப்பும் பெண்களுக்கு எதிராக நடக்கும் சமூக அவலங்கள் சட்டம் வழங்கு சீர்கேட்டு அவலங்கள், பாலியல் குற்றங்கள் சென்று பல்வேறு வன்கொடுமைகளைக் கண்டு, உங்கள் அண்ணனாக மன அழுத்தத்திற்கும் சொல்லொணா வேதனைக்கும் ஆளாகிறேன்.
யாரிடம் உங்கள் பாதுகாப்டைக் கேட்பது? நம்மை ஆளும் ஆட்சியாளர்களை எத்தனை முறை கேட்டாலும் எந்தப் பயனுமில்லை என்பது தெரிந்ததே. அதற்காகவே இந்த கடிதம். எல்லா சூழல்களிலும் நிச்சயமாக உங்களுடன் நான் உறுதியாக நிற்பேன் அண்ணனாகவும் ஆணாகவும். எனவே எதை பற்றியும் கவலை கொள்ளாமல் கல்வியில் சவனம் செலுத்துங்கள். பாதுகாப்பான தமிழகத்தைப் படைத்தே தீருவோம். அதற்கனை உத்திரவாதத்தை நாம் அனைவரும் இணைந்து விரைவில் சாத்தியப்படுத்துவோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“