/indian-express-tamil/media/media_files/2025/03/08/qHvlkEIYbUiIGWgPABrW.jpg)
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிர அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் ‘வாகை சூடும் வரலாறு திரும்புகிறது வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு’ என்ற முழக்கத்துடன் த.வெ.க. 2ம் மாநில மாநாடு மதுரையில் நாளை நடைபெறுகிறது.
நாளை எங்கள் குடும்பவிழா ✅
— 🐅ராச.துரை ஆனந்தன் 🐅 (@thuosi) August 20, 2025
TVK Maanadu Madurai 21 08 25 pic.twitter.com/Cs0JPowq8T
மதுரையின் பாரபத்தியில் 506 ஏக்கரில் மாநாட்டு திடல் அமைக்கப்பட்டுள்ளது. 1.5 லட்சம் பேர் அமர வசதியாக இருக்கைகள், குடிநீர் வசதி, பெண்களுக்கென பிங்க் ரூம் வசதி உள்பட பல்வேறு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும், மாநாட்டிற்கான ஏற்பாடுகள் அனைத்தும் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. நாளை நடைபெறும் கட்சியின் மாநில மாநாடு தமிழக அரசியலில் திருப்புமுனையாக இருக்கும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
- Aug 20, 2025 21:14 IST
முதல் நாளே நிரம்பிய மாநாட்டுத் திடல்
மதுரையில் நாளை நடைபெறும் த.வெ.க மாநாட்டுக்காக இன்றே அக்கட்சியின் தொண்டர்களின் வருகையால் மாநாட்டுத் திடல் நிரம்பியது.
Nalaiku Dhaan Ya Maanadu 🤣🔥 pic.twitter.com/GGf9peEo7l
— Pokkiri _Victor (@pokkirivictor1) August 20, 2025 - Aug 20, 2025 21:08 IST
விஜய் நாளைதான் மதுரைக்கு வருவார்
த.வெ.க தலைவர் விஜய் இன்னும் மதுரைக்கு வரவில்லை. நாளை (20.08.2025) தான் வருவார். போலி செய்திகளை நம்பி ஏமாறாதீர்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது.
- Aug 20, 2025 21:05 IST
த.வெ.க. மாநாட்டுத் திடலில் புதிய கொடிக்கம்பம் நிறுவும் ஏற்பாடுகள் தீவிரம்
த.வெ.க. மாநாடு நடைபெறும் திடலில் மாநாட்டு மேடைக்கு முன்பாக புதிய கொடிக்கம்பத்தை நிறுவுவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
- Aug 20, 2025 21:02 IST
"நான் நொறுங்கிவிட்டேன்"; த.வெ.க கொடிக் கம்பம் விழுந்தது குறித்து பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
பிரேமலதா விஜயகாந்த், “விருத்தாசலத்தில் நான் போட்டியிடுவது உறுதியான முடிவு கிடையாது. தேர்தல் கூட்டணி இன்னமும் முடிவாகவில்லை. தவெக-வின் கொடிக் கம்பம் கீழே விழுந்ததைக் கேள்விப்பட்டதும் நான் நொறுங்கிவிட்டேன்” என்று கண்ணீர் மல்கத் தெரிவித்தார்.
- Aug 20, 2025 20:17 IST
மக்கள் பாதுகாப்பு கருதி விஜய் வருகிற நேரத்தை தெரிவிக்க முடியவில்லை - த.வெ.க நிர்வாகி அருண்ராஜ்
முன்னாள் ஐ.ஆர்.எஸ் அதிகாரியும் த.வெ.க-வின் கொள்கைப் பரப்பு பொதுச் செயலாளருமான அருண் ராஜ், மதுரையில் த.வெ.க மாநட்டுக்கு விஜய் வருகிற நேரத்தை ஏன் தெரிவிக்க முடியவில்லை என்பது குறித்து கூறியுள்ளார். மக்கள் பாதுகாப்பு கருதிதான் தலைவர் வருகிற நேரம் பற்றி தெரிவிக்க முடியவில்லை என்று அருண்ராஜ் கூறியுள்ளார்.
.@arunrajkg : மக்கள் பாதுகாப்பு கருதிதான் தலைவர் வருகிற நேரம் பற்றி தெரிவிக்க முடியல. #TVKVijay@actorvijay@TVKVijayHQ
— Actor Vijay Team (@ActorVijayTeam) August 20, 2025
pic.twitter.com/AeqxLQpTaw - Aug 20, 2025 20:13 IST
மதுரை வந்துவிட்டாரா விஜய்? தொண்டர்கள் மத்தியில் பரபரப்பு
மதுரையில் த.வெ.க மாநாடு நாளை நடைபெற உள்ள நிலையில், த.வெ.க தலைவர் விஜய் இன்றே மதுரை வந்துவிட்டார் என்று செய்திகள் வெளியான நிலையில், மதுரையில் த.வெ.க தொண்டர்கள் இடையே பரபரப்பு நிலவுகிறது.
- Aug 20, 2025 20:07 IST
த.வெ.க மதுரை மாநாட்டுத் திடலில் 40 ஆம்புலன்ஸ்கள் தயார்
மதுரையில் நாளை நடைபெறும் மாநாட்டுக்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநாட்டுத் திடலில், மருத்துவ உதவிக்காக 40 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன.
40 Ambulances are enforced to serve people at TVK Madurai Maanadu Tom 👌🏻❤️☺️ Well Pre-Planned execution from @TVKVijayHQ 👏🏻🫡#TVKMaduraiMaanadu#TVKVijaypic.twitter.com/svdJ2IgWku
— 🆅🅸🆂🅰🅰🅻 (@iam_visaal) August 20, 2025 - Aug 20, 2025 19:16 IST
த.வெ.க மாநாட்டு திடலில் கொடிக்கம்பம் சரிந்து நொறுங்கிய கார்; உரிமையாளருக்கு ஆறுதல் கூறிய விஜய்
மதுரை த.வெ.க மாநாட்டு திடலில் 100 அடி கொடிக்கம்பம் சரிந்து, அருகிலிருந்த காரின் மீது விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. காரின் உரிமையாளர் தினேஷ் கண்கலங்கி நின்றுள்ளார். தினேஷை தொடர்பு கொண்ட த.வெ.க தலைவர் விஜய் ஆறுதல் தெரிவித்துள்ளார்.
- Aug 20, 2025 18:22 IST
த.வெ.க. மாநாடு - போக்கஸ் லைட் கம்பம் கீழே விழுந்தது
மதுரை த.வெ.க. மாநாட்டுத் திடலின் பிரதான நுழைவாயிலில் வைக்கப்பட்டிருந்த போக்கஸ் லைட்டுகள் கட்டப்பட்ட கம்பம் கீழே விழுந்தது. கம்பத்தை சரிசெய்து மீண்டும் போக்கஸ் லைட் கட்டப்பட்ட நிலையில், உடைந்த போக்கஸ் விளக்கின் கண்ணாடித் துண்டுகள் அகற்றப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
- Aug 20, 2025 17:27 IST
ரூ.12.5 லட்சம் செலவு: தரைமட்டமான த.வெ.க. கொடிகம்பம்
மதுரை த.வெ.க. மாநாட்டுத் திடலில் அமைக்கப்பட்ட 100 அடி கொடி கம்பம் சரிந்து விழுந்த நிலையில், இந்த கொடிக்கம்பம் அமைப்பதற்காக ரூ.12 லட்சம் செலவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், கம்பதை நிலைநிறுத்த ரூ.50,000 வரை செலவு செய்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. முறையான திட்டமிடல் மற்றும் அலட்சியம் காரணமாகவே இந்த கொடி கம்பம் சரிந்து விழுந்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்தில், கொடிக்கம்பம் விழுந்த திசையில் நின்றுகொண்டிருந்த கார் முற்றிலும் சேதமடைந்தது. கொடிகம்பம் மீண்டும் பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதால், நாளை நடைபெறும் விழாவில் விஜய் கொடியேற்றுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மாற்று வழிகள் குறித்து த.வெ.க. நிர்வாகிகள் ஆலோசித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
- Aug 20, 2025 17:11 IST
தவெக மாநாடு: தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
தமிழக வெற்றிக் கழகத்தில் 2-வது மாநில மாநாடு மதுரையில் நடைபெறுவதையொட்டி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநாடு, வாகை சூடும் வரலாறு திரும்புகிறது “வெற்றி பேரணியில் தமிழ்நாடு” என்ற கொள்கை முழக்கத்துடன் நாளை (ஆக.21) பிரமாண்டமாக நடைபெறுகிறது.
- Aug 20, 2025 17:08 IST
மதுரை மாநாடு: த.வெ.க. நிர்வாகிகளுக்கு விஜய் அறிவுரை
த.வெ.க. மாநாட்டுத் திடலில் பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தீவிரப்படுத்த நிர்வாகிகளுக்கு விஜய் அறிவுரை வழங்கியிருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. "மாநாட்டுக்கு வரும் தொண்டர்களுக்கு எந்த விதத்திலும் பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது"என்று விஜய் வாழ்மொழி உத்தரவு வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது.
- Aug 20, 2025 16:45 IST
சேதமடைந்த காரின் உரிமையாளருக்கு விஜய் ஆறுதல்
மதுரை தவெக மாநாட்டு திடலில் 100 அடி கொடிக்கம்பம் சரிந்து, அருகிலிருந்த காரின் மீது விழுந்ததால் பரபரப்பு... காரின் உரிமையாளர் தினேஷ் கண்கலங்கி நின்றுள்ளார். தினேஷை தொடர்பு கொண்டு விஜய் ஆறுதல் தெரிவித்துள்ளார்.
- Aug 20, 2025 16:43 IST
தேசிய நெடுஞ்சாலையில் வைக்கப்பட்டுள்ள பேனர்கள் அகற்றம்
மதுரை: தவெக மாநாட்டுத்திடல் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வைக்கப்பட்டுள்ள பேனர்கள், நீதிமன்ற உத்தரவின்கீழ் அகற்றப்படுகின்றன.
- Aug 20, 2025 16:38 IST
தவெக கொடிக்கம்பம் விழுந்து சேதமடைந்த கார்
தவெக கொடிக்கம்பம் விழுந்து சேதமடைந்த கார் அப்புறப்படுத்தப்பட்டது
video: News 18 Tamil
தவெக கொடிக்கம்பம் விழுந்து சேதமடைந்த கார் அப்புறப்படுத்தப்பட்டது#Madurai#TVK#Vijay#News18Tamilnadu | https://t.co/3v5L32pLWJpic.twitter.com/NeHxMBHLW5
— News18 Tamil Nadu (@News18TamilNadu) August 20, 2025 - Aug 20, 2025 15:55 IST
தவெக கொடி கம்பம் சரிந்து விபத்து - விசாரணை
மதுரை, தவெக மாநாட்டு திடலில் கொடி கம்பம் சரிந்து விழுந்த இடத்தில் தவெக துணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல் குமாரிடம் காவல்துறையினர் விபத்து குறித்து விசாரணை நட த்தி வருகின்றனர்
- Aug 20, 2025 15:54 IST
காரின் உரிமையாளர் பேட்டி
காரின் உரிமையாளர் பேட்டி
தவெக மாநாட்டு ஏற்பாட்டின் போது 100 அடி கொடிக்கம்பம் சரிந்து காரின் மீது விழுந்தது. விபத்து நிகழும் சில நிமிடங்களுக்கு முன்பு வரை காரில் தான் இருந்தேன். தண்ணீர் குடிக்க சென்ற நேரத்தில் காரின் மீது கொடி கம்பம் விழுந்துள்ளது
சேதம் அடைந்த காரின் உரிமையாளர் - தினேஷ் குமார்
- Aug 20, 2025 14:38 IST
சரிந்து விழுந்த 100 அடி கொடி கம்பம்; மதுரை த.வெ.க மாநாட்டில் பரபரப்பு
மதுரை த.வெ.க மாநாட்டிற்காக 100 அடி கொடி கம்பம் நிறுவும்போது கார் மீது விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. கிரேன் மூலம் கொடிக்கம்பத்தை நிறுவ முற்பட்டபோது கார் மீது விழுந்தது. இது த.வெ.க.வினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.