Advertisment

படுகொலை - தீவிரவாதம் : காயத்ரி ரகுராம் - குஷ்பூ டுவிட்டரில் விவாதம்

நாங்கள் அரசியல்ரீதியாக வேறுபட்டிருந்தாலும், எங்களுக்கிடையேயான விவாதம் ஆரோக்கியமானதாகவே இருக்கும். சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்கிறேன்.

author-image
WebDesk
May 21, 2019 11:54 IST
New Update
kushboo, gayathri raguram, indira gandhi, gandhi death, asssassination, rajiv gandhi, terrorist act, kamalhassan, குஷ்பூ, காயத்ரி ரகுராம், படுகொலை, தீவிரவாதம், ராஜிவ் காந்தி, மகாத்மா காந்தி

kushboo, gayathri raguram, indira gandhi, gandhi death, asssassination, rajiv gandhi, terrorist act, kamalhassan, குஷ்பூ, காயத்ரி ரகுராம், படுகொலை, தீவிரவாதம், ராஜிவ் காந்தி, மகாத்மா காந்தி

ராஜிவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார் என்றால், மகாத்மா காந்தியும் அத்தைகய தாக்குதலின் மூலமே மரணமடைந்துள்ளார். இதற்கு நடிகர் கமல்ஹாசன் எத்தகைய விளக்கம் அளிக்கப்போகிறார் என்று சினிமா நடன இயக்குனர் காயத்ரி ரகுராம், டுவிட்டரில் கேள்வியெழுப்பியுள்ளார்.

Advertisment

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலையின் 28வது நினைவுதினம் இன்று ( மே 21ம் தேதி) அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி, யூகாங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் குஷ்பூ வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவு, அவருக்கும், சமீபத்தில் பாரதிய ஜனதா கட்சியிலிருந்து விலகிய திரைப்பட நடன இயக்குனர் காயத்ரி ரகுராமிற்கும் இடையே, காரசார மோதலை உருவாக்கியுள்ளது.

1991ம் ஆண்டு இதேநாளில் நாங்கள் திருச்செந்தூரில் இருந்தோம். பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார் என்ற செய்தி கேட்டு நாடே ஸ்தம்பித்தது. என்னுடைய ஹீரோ, துண்டு துண்டாக சிதறி கிடந்ததை பார்க்கவே முடியவில்லை. அவரது இழப்பை என்னால் மட்டுமல்ல, நாட்டுமக்களாலும் தாங்க இயலவில்லை..

எனும் குஷ்பூவின் டுவிட்டிற்கு, படுகொலையா என்று காயத்ரி ரகுராம் என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

ராஜிவ் காந்தியுடன் பல அப்பாவி தமிழ் மக்களும் கொல்லப்பட்டனர். அப்போது எனது அம்மா, சூட்டிற்கிற்காக வெளியூர் சென்றிருந்தார். அப்போது நடந்த வன்முறையின் போது எங்கள் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. நாங்கள் பதறிப்போனோம். கிராமத்தில் தங்கியிருந்த எனது அம்மா உள்ளிட்ட படக்குழுவினருக்கு அந்த கிராமத்தினரே உதவி செய்துள்ளனர்.

கமல் சாரின் அகராதியில், படுகொலை என்பதை குறிக்கும் சொல் இருக்காது என்பதை என்னால் உறுதியாக கூறமுடியும். அவர் இதற்கு வேறுவிதமான விளக்கத்தை அளிப்பார். அதற்கு காங்கிரஸ் கட்சியும் ஆதரவு அளிக்கும்.

ராஜிவ் காந்தி நினைவு நாளில், அவர் கொல்லப்பட்டது தீவிரவாத செயல் என்று நடிகர் கமல்ஹாசனால் கூறமுடியாது. நான் சவால் கூடவிடுக்கிறேன்.

காயத்ரியின் தொடர் டுவிட்டுகளுக்கிடையில், குஷ்பூ, ராஜிவ் காந்தி படுகொலை விவகாரத்தில் உங்களுக்கு வேறுவிதமான நிலைப்பாடு உள்ளதாக தெரிவித்தார்.

அதற்கு பதிலளிக்கும்விதமாக காயத்ரி ரகுராம் டுவிட்டரில் தெரிவித்துள்ளதாவது,

இல்லை. காந்தி படுகொலை செய்யப்பட்டார். இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார். ராஜிவ் காந்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார். கமல் சாரின் புதிய கூற்றுப்படி, படுகொலை என்பது தீவிரவாத செயல். இதை தமிழக காங்கிரஸ் கட்சியும் 1000 சதவீதம் ஆமோதிக்கிறது. அதை நீங்கள் செய்யும் ரீடுவிட்களின் மூலமே அறியலாம்.

இதனிடையே, குஷ்பூவின் டுவிட் குறித்து ஒரு நண்பர் தேவையில்லாத கருத்தை தெரிவித்திருந்தார். அதில் குஷ்பூவின் அரசியல் மற்றும் சினிமா வாழ்க்கை மற்றும் கமலின் சமீபத்திய போக்கு குறித்து விமர்சிக்கப்பட்டிருந்தது.

அதற்கு பதிலளிக்கும் விதமாக காயத்ரி ரகுராம் கூறியிருப்பதாவது, நான் எனது சந்தேகத்தை, சகோதரியிடம் கேட்டு நிவர்த்தி செய்துகொள்கிறேன். எனக்கு இன்னும் சரியான விளக்கம் கிடைக்கவில்லை. நாங்கள் அரசியல்ரீதியாக வேறுபட்டிருந்தாலும், எங்களுக்கிடையேயான விவாதம் ஆரோக்கியமானதாகவே இருக்கும். குஷ்பூ, எங்கள் குடும்பத்தில் ஒருவர் என்று காயத்ரி ரகுராம் பதிலளித்துள்ளார்.

#Twitter #Kushboo
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment