Twitter trends today : Tamil Nadu politicians took to twitter to talk about state autonomy : தேசிய கல்விக் கொள்கை, ஜி.எஸ்.டி., புதிய மின்சார சட்டத் திருத்தம், ஒரே ரேசன் அட்டை என்று இந்தியாவை ஒற்றை அடையாளமாக அடையாளப்படுத்தும் திட்டங்களை மத்திய அரசு நடைமுறைப்படுத்த முயன்று வருகிறது. இந்தியாவில் பலமொழிகள், பல கலாச்சாரங்கள், பல இன, மத மக்கள் வாழ்கின்றனர். ஒரே தேசம் ஒரே கொள்கை என்பது பன்முகத்தன்மை கொண்ட நாட்டிற்கு பெரும் சிக்கலையும் பிரச்சனைகளையும் உண்டாக்கும் ஒன்றாக இருக்கிறது என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். தங்களுக்கு கிடைக்கும் தளங்களை சரியாக பயன்படுத்திக் கொண்டு தொடர்ந்து இந்த திட்டங்களுக்கு எதிராக அரசியல் கட்சி தலைவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் இன்று மாநில சுய ஆட்சியை மீட்போம் என்று ட்விட்டரில் தங்களின் கருத்துகளையும் மத்திய அரசின் திட்டங்களுக்கு எதிர்ப்புகளையும் பதிவு செய்து வருகின்றனர். அவர்கள் கருத்துகளின் தொகுப்பு இங்கே.
இன்று மாலை 6.30 மணிக்கு இணையவழி மாநில சுயாட்சி கருத்தரங்கத்தில் பங்கேற்கிறேன். மாநில சுயாட்சி மறுக்கப்படும், மக்களின் உரிமைகள் பறிக்கப்படும் இச்சூழலில் TNYF நடத்தும், இக்கருத்தரங்கு முக்கியத்துவம் பெறுகிறது.#மாநிலசுயாட்சியைமீட்போம்#SaveStateAutonomy pic.twitter.com/pK9PMXcSGr
— Jothimani (@jothims) August 14, 2020
— Jothimani (@jothims) August 14, 2020
மாநில அரசின்
பொது விநியோகத் திட்டத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் #உணவுப்பாதுகாப்புச்சட்டத்தை திருத்த வேண்டும்;
திரும்ப பெறவேண்டும் #மாநிலசுயாட்சியைமீட்போம்
— வன்னி அரசு (@VanniArasu_VCK) August 14, 2020
தமிழ்நாட்டுக்கு வேண்டும் தன்னாட்சி!
தன்னாட்சியே நம்மாட்சி!
இந்தியாவுக்கு வேண்டும் கூட்டாட்சி,
இல்லையென்றால் அது காட்டாட்சி!
— Aazhi Senthilnathan (@aazhisenthil) August 14, 2020
திணிக்காதே திணிக்காதே!
தமிழக ஒன்றியப் பணிகளில் வட“இந்தி”யரைத் திணிக்காதே!
பறிக்காதே பறிக்காதே
ஒன்றியத் துறைகளில் தமிழரின் வேலைவாய்ப்பைப் பறிக்காதே!
ஒன்றிய அரசு தேர்வுகளை தமிழில் நடத்து
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பது தமிழ்நெறி
அவனவன் ஊரில் அவனவன் வாழ்க என்பதும் தமிழ்நெறிதான்! pic.twitter.com/mbxocb4IgG
— Velmurugan.T (@VelmuruganTVK) August 14, 2020
இந்தியா போன்ற பல்தேசிய இனங்களைக் கொண்ட நாட்டில், மாநில சுயாட்சி என்பது ஜனநாயகத்தின் ஆகச் சிறந்த அடையாளம். அனைவரும் ஒருங்கிணைந்து மாநில சுயாட்சிக்காக ஓங்கிக் குரல் கொடுக்க வேண்டிய நேரம் இது! #SaveStateAutonomy #மாநிலசுயாட்சியைமீட்போம்
— SubaVeerapandian (@Suba_Vee) August 14, 2020
கரூர் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில செய்தி தொடர்பாளர் வன்னி அரசு, பத்திரிக்கையாளர் ஆழி செந்தில்நாதன், தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவார் வேல்முருகன் ஆகியோர் மாநில சுயஆட்சியை மீட்போம் என்ற ஹேஷ்டாக்கில் தங்களின் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.