Twitter trends today : Tamil Nadu politicians took to twitter to talk about state autonomy : தேசிய கல்விக் கொள்கை, ஜி.எஸ்.டி., புதிய மின்சார சட்டத் திருத்தம், ஒரே ரேசன் அட்டை என்று இந்தியாவை ஒற்றை அடையாளமாக அடையாளப்படுத்தும் திட்டங்களை மத்திய அரசு நடைமுறைப்படுத்த முயன்று வருகிறது. இந்தியாவில் பலமொழிகள், பல கலாச்சாரங்கள், பல இன, மத மக்கள் வாழ்கின்றனர். ஒரே தேசம் ஒரே கொள்கை என்பது பன்முகத்தன்மை கொண்ட நாட்டிற்கு பெரும் சிக்கலையும் பிரச்சனைகளையும் உண்டாக்கும் ஒன்றாக இருக்கிறது என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். தங்களுக்கு கிடைக்கும் தளங்களை சரியாக பயன்படுத்திக் கொண்டு தொடர்ந்து இந்த திட்டங்களுக்கு எதிராக அரசியல் கட்சி தலைவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் இன்று மாநில சுய ஆட்சியை மீட்போம் என்று ட்விட்டரில் தங்களின் கருத்துகளையும் மத்திய அரசின் திட்டங்களுக்கு எதிர்ப்புகளையும் பதிவு செய்து வருகின்றனர். அவர்கள் கருத்துகளின் தொகுப்பு இங்கே.
கரூர் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில செய்தி தொடர்பாளர் வன்னி அரசு, பத்திரிக்கையாளர் ஆழி செந்தில்நாதன், தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவார் வேல்முருகன் ஆகியோர் மாநில சுயஆட்சியை மீட்போம் என்ற ஹேஷ்டாக்கில் தங்களின் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.