சுங்கச்சாவடியில் போலீசாருடன் மோதிய முன்னாள் எம்.பி வைரல் வீடியோ!

எட்டி உதைத்தும், இழிவாக பேசும் வீடியோ நேற்று இரவு முதல் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது

twitter viral twitter viral video :  தர்மபுரி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜுனன் காவல் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்ட வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

சேலம் சுங்கச்சாவடியில் பணியில் இருந்த காவல்துறை உதவி ஆய்வாளரை முன்னாள் எம்.பி அர்ஜூனன் எட்டி உதைத்தும், இழிவாக பேசும் வீடியோ நேற்று இரவு முதல் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.காவல் துறையினர் குறித்து தற்போது பல்வேறு சர்ச்சைகளும் குற்றச்சாட்டுகளும் எழுந்து வரும் நிலையில்,  முன்னாள் எம்.பி யான அர்ஜூனனின் இத்தகைய செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வீடியோவில், அர்ஜுனன் காரில் வந்தபோது காவல்துறையினர் வாகனத்தை நிறுத்தி விசாரிக்கின்றனர். அப்போது, அவர் தான் முன்னாள் எம்.பி. என்று கூற, போலீசார் ஆவணத்தை கேட்டதால், அர்ஜூனன் காரிலிருந்து இறங்கி காவல் ஆய்வாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுப்படுகிறார். திடீரென்று கோபத்தில் இழிவான வார்த்தையை பயன்படுத்துகிறார்.

அந்த ஆய்வாளர் அவரை எச்சரிக்கிறார். இதனால் மேலும் ஆத்திரம் அடையும்  அர்ஜூனன், ஒருகாமையில் பேசி காவல் ஆய்வாளரை திட்டுகிறார். அத்துடன் நின்றுவிடாமல் வேகமாக வந்து காவல் ஆய்வாளரை எட்டி உதைக்கிறார். பதிலுக்கு காவல் உதவி ஆய்வாளர் தாக்குகிறார். பின்பு, அர்ஜூனன் மிரட்டல் தொனியில் பேசிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு செல்கிறார்.

இதைப்பார்த்த, மற்ற காவல் அதிகாரிகள் இருவரையும் சமரசம் செய்ய முயற்சிக்கின்றனர். காவல் ஆய்வாளரின் பதவிக்கும், அவர் அணிந்திருந்த காக்கிச்சட்டையை மதிக்காமல் முன்னாள் எம்.பியே இவ்வாறு நடந்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தங்களது பணியை செய்யும் காவல் துறையினரிடம் பிரமுகரின் இந்த நடைமுறை தவறானது என்று சமூகவலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

கொரோனா தடுப்பு பணியாக ஓமலூரில் போலீசார் இ-பாஸ்  சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. முன்னாள் எம்.பி அர்ஜூனன் திமுக-வில் இருந்த போது தர்மபுரி தொகுதியில் நின்று வெற்றி பெற்று எம்.பியானார். பின்பு திமுக-வில் இருந்து விலகினார்.

இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் முன்னாள் எம்பி அர்ஜூனன் தற்போது திமுக-வில் இருப்பதாக தகவல் பரவி வருவதால் இதுக் குறித்து விளக்கம் அளித்து திமுக சட்டமன்ற உறுப்பினர் நந்தக்குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது, “ நேற்று இரவு ஓமலூர் டேல்கேட்டில் காவல் துறையினரிடம் தகராறில் ஈடுபட்டு காவலர்களை எட்டி உதிக்கும் அதிமுக முன்னாள். எம்.பி திமுகவை சார்ந்தவர் என்று சில ஊடகங்களில் தவறான செய்தி வருகிறது, இது முற்றிலும் உண்மைக்கு புறம்பான ஒன்று..

நேற்று தகராறில் ஈடுபட்ட அவர் 1980-1985 ஆம் ஆண்டு தர்மபுரி தொகுதி திமுக எம்.பியாக இருந்தவர், பின் அதிமுகவில் இணைந்து 1989-1991 ஆம் ஆண்டு வரை தாரமங்கலம் அதிமுக எம்.எல்.ஏவாக இருந்தவர் அப்போதே ஜெ.-ஜா அணி என்று மாறி மாறி சவாரி செய்தவர், பின் 1991-1996 வரை சேலம் வீரபாண்டி தொகுதி அதிமுக எம்.எல்.ஏவாக இருந்தவர் பின் 2005 திமுக விற்கு வந்து சில நாட்களிலே தேமுதிக சென்று விட்டார் அங்கு அவருக்கு வாய்ப்புகள் மறுக்கப்படவே பின் மீண்டும் அதிமுக தன்னை இணைத்து கொண்டு ஜெயலலிதா மறைந்த போது சில மாதம் ஜெ.தீபா அணியில் இருந்தார், பின் டி.டி.வி தினகரன் என்று சென்று கடைசியாக எடப்பாடி &ஓ.பி.எஸ் தலைமையிலான அதிமுகவில் தான் இப்போது வரை இருந்து வருகிறார்.

அவர் திமுகவில் இருந்தது 1980 களில் தான், அவர் திமுகவை சார்ந்தவராக இருந்திருந்தால் நேற்று இவரே அவரை எங்கள் தலைவர் கட்சியை விட்டு நீக்கி நடவடிக்கை எடுத்து இருப்பார், இந்த வரலாறு தெரியாத பத்திரிகை நண்பர்கள் உண்மைக்கு புறம்பான செய்திகளை ஒளிபரப்பு செய்வது ஏற்புடையதல்ல மிகவும் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று இனிமேலாவது உண்மையை விசாரித்து செய்திகளை வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close